01.01.2023 ன் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு (Telephone Directory) வெளியீடு
தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சிக்கு ஏற்பாடு
அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி அளிக்கப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
சமீப ஆண்டுகளில், ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
அதனால், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில், தமிழ் வழியில் மட்டுமே கற்றுத் தருவதால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது.
எனவே, அரசு தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடாக, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் பேச்சு பயிற்சி தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் வழியே, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், முதற்கட்டமாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலுார், தஞ்சாவூர் உட்பட, 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடி கல்வி திட்ட விபரம் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி
தமிழக அரசின், 'இல்லம் தேடி கல்வி திட்டம்' விபரங்களை, தன்னார்வ நிறுவனங்கள் சேகரிக்க, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில், பள்ளிகள் செயல்படாமல் இருந்த போது, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக, மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தின.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் கற்பித்தல் பணி நடக்கவில்லை.
இதனால், கற்றலில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், மாலை நேர வகுப்புகளை நடத்த, இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகமானது.
ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவிலான திட்டம், இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இதில், தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வீடுகளுக்கு அருகேயுள்ள பொது இடங்களில், செயல்முறை கற்பித்தல் மற்றும் மாலை நேர டியூஷன் வகுப்புகளை நடத்துகின்றனர்.
இத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், குடியிருப்பு விபரம், பயிற்சி பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் விபரம், திட்டம் சார்ந்த கல்வி அலுவலர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட தகவல்களை, தரவுகளாக சேகரிக்க தன்னார்வ நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்காக, அந்த நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், சென்னையில் செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு, தகவல்களை சேகரித்து கொள்ள, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இம்மாதம் முதல் ஏப்ரல் வரை தகவல்களை சேகரித்து கொள்ளலாம்.
இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசுகள் டெபாசிட் செய்த CPS பணத்தை திரும்பக் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை - மத்திய அரசு
மாநில அரசுகள் டெபாசிட் செய்த CPS பணத்தை திரும்பக் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை - மத்திய அரசு நிதி சேவைத்துறை செயலர்.
2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்!!!
தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 அறிவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் மாதம் 2வது வாரம் அதாவது 17ம் தேதி கூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்வார். காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி எத்தனை நாட்கள் வரவு-செலவு திட்டத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து அறிவிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் முடிந்த அடுத்த நாள், 2023-2024ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அலுவல் ஆய்வு கூட்டத்தில், தொடர்ந்து மானிய கோரிக்கை கூட்டத்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 3வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ‘மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 வழங்கப்படுவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம்’ என்று கூறப்படுகிறது. காரணம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதன்படி, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தகுதியான பெண்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே 5 மாதங்களில் உதவித்தொகை வழங்கும் பணியை தொடங்க முடியும். இதனால், தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
04.03.2023 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
மார்ச் 4ஆம் தேதி நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று கொண்டாடப்பட இருப்பதால் குறிப்பிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இத்தினத்தை அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி ஆகிய 4 மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு 04.03.2023 (சனிக்கிழமை) வேலைநாள்!
முதல்வரின் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் பார்வையிடுதலை ஒட்டி, 04.03.2023 நாள் (சனிக்கிழமை) வேலைநாளாக மாற்றப்பட்டு, மேற்காண் மாவட்ட பள்ளிகள் அனைத்தும், துறை சார் உயர் அதிகாரிகளால் மண்டல குழு ஆய்வு (Team Visit) க்கு உட்படுத்தப்படுகிறது.
மேலும் பணியாற்றும் கூடுதல் நாளுக்கு பதிலாக, 13.03.2023 (திங்கள் கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து ஆணையர் / இயக்குநர் / இணை இயக்குநர்களை நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
இல்லம் தேடிக் கல்வி மையங்களை OBSERVE செய்ய J-PAL நிறுவனங்களுக்கு அனுமதி
தொடக்கநிலை (1-5 வகுப்புகள்) இல்லம் தேடிக் கல்வி மையங்களை OBSERVE செய்ய திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மற்றும் விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் J-PAL நிறுவனங்களுக்கு அனுமதி.
ITK Centres Observation Letter - Download here...
ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
01.03.2023 முதல் 30.03.2023 வரை 30 நாட்கள் - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பெங்களுரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் . இப்பயிற்சியில் கலந்து கொள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,நாள்22-2-2023
30 Days Certificate Course Training in English Language for Teachers – Proceedings - Download here
04.03.2023 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
மார்ச் 4ஆம் தேதி நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று கொண்டாடப்பட இருப்பதால் குறிப்பிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இத்தினத்தை அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி ஆகிய 4 மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி மையங்களை OBSERVE செய்ய J-PAL நிறுவனங்களுக்கு அனுமதி.
தொடக்கநிலை (1-5 வகுப்புகள்) இல்லம் தேடிக் கல்வி மையங்களை OBSERVE செய்ய திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மற்றும் விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் J-PAL நிறுவனங்களுக்கு அனுமதி.
ITK Centres Observation Letter - Download here...
போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற மாணவா்களுக்கு உதவித் தொகை: தமிழக அரசு திட்டம்
தாட்கோ நிறுவனத்தின் மூலமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கிராமப் பகுதிகளில் பயிலும் மாணவா்கள் அரசு நடத்தும் போட்டித் தோ்வுகளில் முதல்நிலைத் தோ்வு, முதன்மைத்தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறாா்கள். பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவா்களின் பொருளாதார நிலை காரணமாக, முதன்மைத் தோ்வில் வெற்றி பெற போதுமான பயிற்சி பெற வாய்ப்பில்லை.
நகா்ப்புறங்களில் தங்கி தனியாா் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற மூன்று மாதங்களுக்கு சுமாா் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1 ஆகிய தோ்வுகளில் முதன்மைத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.
இதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் இதர தோ்வுகளில் முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை அளிக்கவும் அரசு யோசித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு மூன்று முறை மட்டுமே மானியம் அளிக்கப்படும்.
அரசுப் பணியில் பணியாற்றி போட்டித் தோ்வுக்கு தயாராகும் நபா்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக நிா்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவாகும். இந்தத் திட்டம் குறித்த அறிவிப்புகள் சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின் போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
NMMS தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்
25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ( இணைப்புப் பள்ளிகளுடன் ) பார்வையில் காணும் கடிதம் மூலமாக தங்களுக்கு அனுப்பப்பட்டது.
மேற்காண் தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
NMMS FEB 2023 CHIEF SUPDT INSTRUCTIONS - Download here
அடுத்த முதலமைச்சரின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் எப்போது? எந்த மாவட்டங்கள்?
05.03.2023 & 06.03.2023 ஆகிய நாட்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் முதலமைச்சரின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்!
மார்ச் 5, 6-ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
மாவட்டங்களில் மக்கள் நல திட்டங்கள் முறையாக செல்லவேண்டும், அதே போன்று அங்குள்ள மாவட்ட நிர்வாகம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அதனை ஒரு திட்டமாக செயல்படுத்தும் விதமாக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டமானது செயல்படுத்தப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த திட்டம் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். களஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அடுத்தகட்டமாக மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
களஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை பொறுத்த வரை அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், விவசாயக்குழு பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்களுடன் ஆலோசனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதேபோல மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் மக்கள் நல திட்டங்கள் எவ்வாறு செயல்பட்டுவருகிறது, மேலும் மக்களுடைய பிரச்சனைகளை அனைத்திலும் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மார்ச் 5, 6-ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
TNSED APP SCHEMS - Books, Notes ,Uniform, Bag - நமது வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய விபரத்தினை UPDATE செய்வதற்கான வழிமுறை
🌺 TNSED SCHOOLS SCHEMS DETAILS UPDATE
🪷 அரசின் அனைத்து வகை நலத்திட்டங்கள்
🌷 BOOKS
🌷 NOTE BOOKS
🌷 UNIFORMS
🌷 BAG
🌷 COLOR PENCILS
🪷 நமது வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய விபரத்தினை UPDATE செய்வதற்கான வழிமுறை
பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களை பணிவிடுப்பு செய்ய உத்தரவு
ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்டு பணிவிடுப்பு செய்யப்படாமல் இணைப்பில் உள்ள சென்னை மற்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடுத்த ஆசிரியர் பயிற்றுநர்களை இன்று பிற்பகல் பணிவிடுப்பு செய்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
EMIS - Students Admission OTP METHOD
Students Admission OTP METHOD
Based on all your inputs and feedback, a new feature to reduce your workload with respect to Student Raise Request is being rolled out today. As per the design of this module, the new steps for Student Raise Request are as follows._
🌷 Receiving HM raises request for student by searching for the student details.
🌷 Receiving HM shall click on 'Raise request' button. This will trigger an OTP to the parent's mobile number.
🌷 Parent can convey the OTP to the receiving HM to confirm that they want the student to be admitted in their school WITHIN 3 DAYS.
🌷 Receiving HM to enter the OTP in the OTP submission module (new tab next to the Admission Tab)
🌷 On successful entry of OTP, the student will be moved to common pool.
🌷 Receiving HM can admit the student from the Common Pool to their school like any other student.
As per this new process,NO ACTION NEEDED from the HM of the current school or by the DC. The admission process can be completed by the receiving HM and the parent alone.
ITK மாணவர்களுக்கு குறும்படம் போட்டி
இல்லம் தேடி கல்வி மையங்களில், மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வியின் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்தில் இருந்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:
பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி மையங்கள், ஓராண்டுக்கு மேல் செயல்படுகின்றன.
இந்த மையங்களில் படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், குறும்பட கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
இந்த மாதம், 'சிட்டுக்களின் குறும்படம்' என்ற நிகழ்வு நடக்க உள்ளது. மாணவர்கள் வழியே, 3 நிமிட குறும்படம் தயாரிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகள் பாதுகாப்பு, தன் சுத்தம் உள்ளிட்ட தலைப்புகளில், குறும்படம் தயாரிக்க வேண்டும்.
குறும்படத்துக்கான கதைக்களத்தை குழந்தைகளே தயார் செய்ய வேண்டும். அதை படம் பிடிக்க, தன்னார்வலர்களின் மொபைல் போனை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு மையம், ஒரு குறும்படத்தை மட்டுமே தயாரிக்க வேண்டும்.
கதையமைப்பின் புதுமை, கதை சொல்வதில் சுவாரஸ்யம், கதாபாத்திர அமைப்பு, வசனங்களின் நேர்த்தி, படமாக்கப்பட்ட முறை, படத்தொகுப்பு முறை மற்றும் இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கு ஏற்ப, அதிகபட்சம் தலா, 2 மதிப்பெண் வழங்க வேண்டும்.
வட்டார அளவில், ஐந்து சிறந்த குறும்படங்கள்; அவற்றில் இருந்து மாவட்டத்தில், ஐந்து சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்படும்.
இந்த நடவடிக்கைகளை விரைந்து முடித்து, மாவட்ட அளவில் தேர்வான படங்களை, மார்ச், 3க்குள் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.