தமிழ்நாட்டில் 4,188 ஆசிரியர் பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

 நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் (TAKNIKI SHIKSHA VIDHAN COUNCIL) வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில்  இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம். 


பணியிட விவரம்:


யோகா ஆசிரியர்- 349

கலை ஆசிரியர்- 349

இசை ஆசிரியர்- 349

இந்தி ஆசிரியர்- 349

தெலுங்கு ஆசிரியர்- 349

ஆங்கிலம் - 349

கணக்கு ஆசிரியர்- 349

பொது அறிவியல் ஆசிரியர்-349

சமூக அறிவியல் ஆசிரியர்- 349

நூலகர்- 349

தொழில்நுட்ப உதவியாளார்- 349

அலுவலக உதவியாளார்- 349

மொத்த பணியிடங்கள் -  4,188


கல்வித் தகுதி: 


யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இதற்கு விண்ணப்பிக்க பி.எட். அல்லது இளங்கலை பட்டம் இருக்க வேண்டும். பி.எட். முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வயது வரம்பு: 


இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


யோகா ஆசிரியர் - ரூ.32,000

கலை ஆசிரியர் - ரூ.32,000

இசை ஆசிரியர் - ரூ.32,000

இந்தி ஆசிரியர் -ரூ.35,000

தெலுங்கு ஆசிரியர் -ரூ.35,000

ஆங்கிலம் - ரூ.35,000

கணக்கு ஆசிரியர்- ரூ.35,000

பொது அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000

சமூக அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000

நூலகர் - ரூ.30,000

தொழில்நுட்ப உதவியாளார் -ரூ.30,000

அலுவலக உதவியாளார் -ரூ.20,000


விண்ணப்பிப்பது எப்படி? 


https://www.tsvc.in/application.php - என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு - https://www.tsvc.in/online-application.php


விண்ணப்ப கட்டணம் : 


இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 விண்ணப்பிக்க கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


கவனிக்க.. 


ஆண் விண்ணப்பதாரர்களில் தகுதியாவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பள்ளிகளில் மட்டும் நியமிக்கப்படுவர். 


மகளிர் விண்ணப்பதாரர்கள் ஆண்,பெண் இருவரும் பயிலும் பள்ளிகளில் நியமிக்கப்படுவர். 


இதற்கு விண்ணப்பிக்க புதிய இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய இணையத்தில் விண்ணப்பித்தால் அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.


விண்ணப்பிக கடைசி தேதி: 25.02.2023


முக்கிய நாட்கள்:




TNSED ATTENDANCE NEW VERSION 7.0 - Update Now


TNSED ATTENDANCE NEW UPDATE VERSION

Version 7.0 - 19.2.23


Whats New

👉 Magazine module added

👉 Bug Fixes

👉 Performance Improvements


TNSED ATTENDANCE APP NEW VERSION 7.0 UPDATE DOWNLOAD LINK



https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அடக்கம் உடைமை

குறள் எண் : 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

பொருள்:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

பழமொழி :

A stitch in time saves nine.
விரிசலைச் சரி செய்து விட்டால் உடைவது தப்பும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

நேற்றைய மனிதனின் வாழ்க்கை உண்மையும், எளிமையும் கொண்டதாயிருந்தது. இன்றோ சுகங்களையே அதிகம் விரும்பும் கேவலநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சுகங்கள் அதிகரிக்கவும் ஒழுக்கங்கள் தேய்ந்து மறையலாயிற்று.

பொது அறிவு :

1. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 

1961. 

2. தமிழக சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்? 

234 பேர்

English words & meanings :

ant that is important - significant

ஆரோக்ய வாழ்வு :

சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும் போது சமைக்காத உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும். மேலும், ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

NMMS Q

குளோரெல்லாவில் நிறைந்து காணப்படுவது__________ 

விடை: புரதம் & வைட்டமின்கள்




பிப்ரவரி 20


உலக நீதி நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.[1

நீதிக்கதை

தூக்கணாங்குருவி

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இன்றைய செய்திகள்

20.02.2023

* அப்துல் கலாம் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர் தயாரித்த 150 செயற்கைக் கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

* ஐக்கிய அரபு அமீரகம் 200 படுக்கை கொண்ட ஒரு மருத்துவமனை துருக்கியில் பூமியதிர்ச்சி பாதிக்க பட்டவர்களுக்காக திறந்துளளது.

* தந்தைக்கு கல்லீரலின் ஒரு பாகத்தை தானம் செய்த 17 வயது மகள்..தடைக்கற்களை மீறி சரித்திரம் படைத்த சிறுமி..!

* சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை எடுத்து சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் 20 ரன்கள் எடுத்த விராட் கோலி இந்த புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines


 * 150 satellites made by students under the Abdul Kalam project were successfully launched yesterday.

 * UAE opens 200-bed hospital for earthquake victims in Turkey

 * A 17-year-old daughter who donated a part of her liver to her father..a girl who broke barriers and created history..!

 * Virat Kohli has broken Sachin Tendulkar's record by scoring 25,000 runs in the fastest international matches.  Virat Kohli made this new record by scoring 20 runs in the 3rd Test against Australia

 * In the second Test against Australia, the Indian team won by 6 wickets.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

UGC NET Exam - அட்மிட் கார்டு வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

 யுஜிசி நெட் தகுதித் தேர்வுக்கான, தேர்வு அனுமதிச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் யுஜிசி நெட் தேர்வு நடைபெறுகிறது.


அதன்படி இந்த ஆண்டுக்கான யுஜிசி நெட் முதற்கட்ட தேர்வு வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதை முன்னிட்டு நெட் தகுதித்தேர்வுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை யுஜிசி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பாக சவாலை எதிர் கொள்ளும் மாணவர்கள்  011-40759000 என்ற தொலைபேசி எண், ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின்  https://ugcnet.nta.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது தவறாமல் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click here for latest Kalvi News 

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படக் கொண்டாட்டம் போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 


இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கடந்த ஓராண்டாக நன்முறையில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதற்கென சிறப்பான. எளிமையான மற்றும் புதுமையான கற்றல் உபகரணங்களை தன்னார்வலர்கள் உருவாக்கி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.


 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாரட்டுக்கள் . தற்போது மாணவர்களின் கற்பனைத்திறன் , படைப்பாற்றல் திறன் , சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிகழ்வாக இம்மாதம் நம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் “ சிட்டுக்களின் குறும்படம் " என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மூன்று நிமிடக் குறும்படம் மாணவர்களால் உருவாக்கப்படவுள்ளது.

ITK குறும்படக் கொண்டாட்டம் guidelines.pdf - Download here


Click here for latest Kalvi News 

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

 TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை!



Click here for latest Kalvi News 

10,11,12th - Public Exam Handbook 2023 Published

 


அரசு பொதுத் தேர்வு 2023 - தேர்வுப் பணிகளுக்கான கையேடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!

NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்!

 25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மைய வாரியாக https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் 17.02.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . எனவே , ஒவ்வொரு தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / முதன்மை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 தேர்வுக்கூடநுழைவுச்சீட்டு :


மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.


இதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Click here for latest Kalvi News 

ITK - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒருந பயிற்சி ( 20.02.2023 ) - SPD Proceedings

 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒருந பயிற்சி அளித்தல் - இதற்காக தேவைப்படும் நிதியினை 38 மாவட்டங்களுக்கும் விடுவித்தல் தொடர்பாக SPD அவர்களின் செயல்முறைகள்...

Lr to CEOs - ITK Training.pdf - Download here...


Click here for latest Kalvi News 

TNSED APP-ல் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் விடுப்பு விபரங்களை சரிபார்த்து திருத்தம் செய்தல் மற்றும் Leave Sanction Approve வழங்குவதற்கான வழிமுறை

 TNSED HM-TEACHERS LEAVE VERIFICATION ISSUES SOLVED

TNSED APP-ல் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் விடுப்பு விபரங்களை சரிபார்த்து திருத்தம் செய்தல் மற்றும் Leave Sanction Approve வழங்குவதற்கான வழிமுறை


குறிப்பு: ஒரு முறை Approve செய்த பின் Edit செய்ய இயலாது



TNSED-Mobile App New Update

TNSED-Mobile App New Update
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


TNSED SCHOOLS NEW UPDATE VERSION


Version 0.0.61 ,17.3.23


What's new

EE Updates, Schemes Update for Cycle and labtop, Referred Child module for Health,Bug fixing & Performance improvements for leave




18.2.2023 அன்று நடைபெற இருந்த CRC பயிற்சி ஒத்திவைப்பு?

 ரும் 18ஆம் தேதி மகா சிவராத்திரி ஆக இருப்பதால் அன்று நடைபெற உள்ள உயர் தொடக்க வகுப்புகளுக்கான CRC பயிற்சியினை ஒத்தி வைக்க வேண்டும் என்று மாநில மையத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தார்கள்.


 கடந்த செவ்வாய்க்கிழமை scert இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு ஆசிரியரகளின் கோரிக்கைகளை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தற்போது கிடைத்த தகவலின் படி வரும் 18 .2.2023 அன்று நடைபெற இருந்த  உயர் தொடக்க நிலை  CRC பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது.


➖➖➖➖➖➖➖➖➖

பொதுச்செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

10ஆம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!


பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 


மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.18 விடுமுறைக்கு பதில் மார்ச் 25 சனிக்கிழமை வேலை நாள் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.