பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், மன்றங்கள் மற்றும் போட்டிகள் நடத்துதல் தொடர்பாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
CoSE Instructions.pdf - Download here...
Education and Information
பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், மன்றங்கள் மற்றும் போட்டிகள் நடத்துதல் தொடர்பாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
CoSE Instructions.pdf - Download here...
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு
24.02.2023 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது
ஈடுசெய்யும் வேலை நாள் : 04.03.2023
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் சுமார் 35 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2 லட்சம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள், தொழில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றும் போது, மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளிகளில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கும் முறை கொண்டு வரப்பட்டு கணினியில் பதிவு செய்யும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக பள்ளிக் கல்வித்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அனைத்து பதிவுகளையும் இந்த கணினி மூலம்தான் செய்ய வேண்டும்.
இந்நிலையில், ஆசிரியர்களுக்கென தனியாக ஒரு செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
அந்த செயலிக்கு விடுப்பு நிர்வாக முறை(லீவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் தங்களுக்கு தேவைப்படும் போது விடுப்புகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கணினியின் மூலம் அதை சரிபார்த்து ஆசிரியர் எடுக்கும் விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பார்கள். இந்த செயல்முறைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.
பின்னர் இந்த விவரங்கள் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் பள்ளிகள் நிர்வாகமுறையின்கீழ் கண்காணிக்கப்படும். ஆசிரியர்கள் விடுப்புக்கான இந்த புதிய செயலி(TN-SED Schools App) மூலம் ஆசிரியர்களுக்கு மீதம் இருக்கின்ற விடுமுறை நாட்கள், எத்தனை மருத்துவ விடுப்பு நாட்கள் இருப்பு இருக்கிறது, சாதாரண விடுப்பு நாட்கள் எத்தனை இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்களே தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலி வட்டார கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் பயன்படும். அவர்களும் இதன் மூலம் விடுப்புகளை பதிவு செய்யவும் விடுப்புக்கு ஒப்புதல் வழங்கவும் முடியும்.
திருக்குறள் :
Beauty comes not by forcing.
அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன்.
2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்
பொன்மொழி :
மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.
பொது அறிவு :
1. முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது?
மூன்று ஆண்டுகள் .
2.பாரதியார் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்ன?
ஷெல்லிதாசன்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
NMMS Q
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
ஒவ்வொரு மாதமும் அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இம்மாதம் பிப்ரவரி 13 முதல் 17 வரை மல்லி தமிழ் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். இந்த படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கட்டுரை , தேன்சிட்டு இதழிலும் வெளிவந்துள்ளது . ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியருடன் இணைந்து பொறுப்பு ஆசிரியரும் பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்.
திரையிடலுக்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டியவை :
CoSE - Movies Screening.pdf - Download here...
EMIS பதிவுகள் checklist
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
CoSE - HM Training.pdf - Download here...
கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட காணொளி கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.....
பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான Payroll Run 12.02.2023 அன்று செய்யப்படும்.
பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மாற்றங்களையும் (Income Tax... ect..) 10.02.2023 ற்கு முன்னதாக செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.*
20.02.2023 ற்கு பிறகு Mark For Recalculation Icon Remove செய்யப்படும்.
எனவே, பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளுக்குள் உரிய மாற்றங்களை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
+2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அகரம் விதை கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்!
அகரம் விதைத் திட்டம்.pdf - Download here...
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையில் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 11 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “ 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்.10-க்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதில், உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை!
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டு , பணிமனைகளுக்கான குறுவள மற்றும் வட்டார வளமைய கூட்டத்திற்குத் தேவையான மதிப்பீடு சார்ந்த பொருண்மைகளை உருவாக்கம் சார்பான பணிகள் இந்நிறுவனத்தில் நடைபெற்று முடிவுற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 11.02.2023 அன்று குறுவள மையக் கூட்டம் அனைத்து மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படவேண்டி உள்ளதால் , கீழ்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு ( CRC ) கூட்டத்தினை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
2022-2023 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMMS ) 26.12.2022 முதல் 20.01.2023 விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்சமயம் இத்தேற்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று 03.02.2023 முதல் 07.02.2023 வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
Click here for latest Kalvi News
கனமழை காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :
நாகை - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை
தஞ்சை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மற்ற மாவட்டங்கள் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் பகிரப்படும்...
Click here for latest Kalvi News