EMIS Breaking News

 


Dear All,


We are migrating to New Login IDs to all, in TNEMIS site there will be Intermittent non-availability of the site for today and tomorrow. Will update when the site is fully functional.


EMIS ல் அனைத்து பள்ளிகளுக்கும் user id மாற்றப்படுவதால் இன்றும் நாளையும் EMIS தளம் செயல்படாது....

-- TN EMIS TEAM


Click here for latest Kalvi News 


SMC - மிக மிக முக்கியமான அறிவிப்பு.


அனைவருக்கும் வணக்கம்  மிக மிக முக்கியமான அறிவிப்பு.


மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது, இனிவரும் காலங்களில் இருந்து *மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கிறது.


அந்த அடிப்படையில் இந்த மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


இனி இதே நடைமுறைதான் மாதம் தோறும் தொடரும் என்பதனையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.


  Click here for latest Kalvi News 


School Morning Prayer Activities - 27.01.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 27.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் எண்: 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

பொருள்:
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்


பழமொழி :
Don’t measure the worth of a person by their size.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 

2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :

ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால், ஓயாமல் மனதோடு போராட வேண்டும்.


பொது அறிவு :

1. குங்கும பூவில் அதிகமாக காணப்படுவது எது? 

ரிபோபுளோவின்



2. தவளையின் தோல் எத்தனை அடுக்குகளை கொண்டது? 

இரண்டு அடுக்குகள்.


English words & meanings :

rap - a sharp knock. noun. verb. தட்டுதல். பெயர்ச் சொல். வினைச் சொல். wrap- enclose with paper or soft material. verb. noun. சுற்றி கட்டுதல். பெயர்ச் சொல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் உள்ள மற்றொரு சத்து மாங்கனீசு ஆகும். மாங்கனீசு எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. எனவே ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோயை தடுக்க மொச்சை பயிறு உதவுகிறது. கால்சியம் குறைப்பாட்டை போக்கி எலும்பின் வலிமைக்கு உதவுகிறது.


NMMS Q

200 மற்றும் 300 ஆகிய எண்களின் வர்க்கங்களின் கூடுதலில் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை---------- 

விடை: 4


நீதிக்கதை

கடவுள் கொடுத்த வரம்

அருண் ஆறாம் வகுப்பு மாணவன். அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர். பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.

ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான். தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான். கடவுள் அவன் முன்னால் தோன்றி அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன். ஆனால் யோசித்துக் கேள் என்றார்.

அருண் உடனே இறைவா. நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும் என்றான். அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார். உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது. அப்பா, அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.

அருணுக்கு பசி எடுக்க. அம்மா உணவு எடுத்து வந்தார். அருண் உணவில் கை வைக்க அது பணமானது. தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அதுவும் பணமானது. பசியால் வாடிய அருண். அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான். மீண்டும் இறைவனை வேண்டினான்.

இறைவன் தோன்ற, அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான். உடன் இறைவன் அருணைப்பார்த்து அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும் நோயற்ற வாழ்வும் தான் செல்வம். அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது என்று கூறி அவனுக்கு அவ்விரண்டையும் அருளினார்.


இன்றைய செய்திகள் - 27.01.2023

* அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் (CRZ) அனுமதி அளித்துள்ளது.

* அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் 15 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கல் கருவி படிமம் கண்டெடுப்பு: மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை பேராசிரியர் தகவல்.

* மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கொள்கைவடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

* இருதரப்பு உறவை பலப்படுத்த உறுதியான நடவடிக்கை: இந்தியா-எகிப்து 5 ஒப்பந்தம் கையெழுத்து.

* உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.

* மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

* சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* The Coastal Regulatory Zone (CRZ) has given its go-ahead to the Public Works Department's plan to widen and dredge the Adyar river estuary.

*  Discovery of 15 lakh-year-old stone tools at Varanavasi message by Ariyalur district Professor of Department of Epigraphy, Central University.

* Justice Murugesan, chairman of the policy formulation committee, said that a draft report containing recommendations for the state education policy would be submitted to the Tamil Nadu government by April.

 * A concrete step to strengthen bilateral relations: India-Egypt signed in 5 agreements.

* Chief Justice DY Chandrachud has announced that the Supreme Court judgments will be translated into 4 regional languages ​​including Tamil and uploaded on the court website from August 15.

 *A five-day curfew has been announced in the North Korean capital following the rise in respiratory-related illnesses.

 * Indian player Manika Patra has moved up to the 33rd position in the international table tennis rankings.

* Australian Open tennis: Djokovic, Sabalenka advance to semi-finals

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 812 பேர் கவுரவிப்பு

 எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் 812 பேருக்கு குடியரசு தினவிழாவில் சிறப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் நடத்த  முடியாத நிலை ஏற்பட்டது. அதிலும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புகளில் படித்த குழந்தைகள் பள்ளிக்கு நேரடியாக வர முடியாத நிலை ஏற்பட்டதால், 1 முதல் 3ம் வகுப்பு வரை படித்த குழந்தைகள் கற்றலில் இடைவெளி ஏற்பட்டது.


அந்த இடைவெளியை போக்கி அவர்கள் எண்ணையும், எழுத்துகளையும் அடையாளம் கண்டு எழுதவும் படிக்கவும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தமிழ்நாடு அரசு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு  ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் சிறப்பாக செயல்பட்ட 812 ஆசிரியர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


Ennum Ezhuthum Teachers List for Republic Day Honor - January 2023 - Download here


அவர்களுக்கு, சென்னையில் நாளை நடக்க இருக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு செய்யவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் சென்னை 22, செங்கல்பட்டு 12, காஞ்சிபுரம் 13, திருவள்ளூர் 3 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ள குடியரசு தின விழாவில் மேற்கண்ட 812 பேருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு செய்வார். 

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 27.01.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு!



2022-2023 - ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.


 இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 25.01.2023 என தெரிவிக்கப்பட்டது

தற்போது , இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் 27.01.2023 பிற்பகல் 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


 மேற்காண் விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது .

 



Click here for latest Kalvi News 


600 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதற்கான தேவை குறித்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 


2008-2009-2010 மற்றும் 2010 2011 ஆம் கல்வியாண்டுகளில் தரமுயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி மற்றும் / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து மகளிரை பிரித்து துவக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு 1512 தற்காலிக பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது.

 இப்பணியிடங்களில் 600 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ள நிலையில் இப்பணியிடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாகயுள்ள பணியிடங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதற்கான தேவையை பரிசீலனை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அது குறித்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


CoSE - 600 Temporary Posts Proceedings - Download here


Click here for latest Kalvi News 


தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் முழு விவரம் - தமிழில்..

  தாய் திருநாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து தியாகிகளின் முழு விவரம் - தமிழில்...

 freedom fighters - Download here...


Click here for latest Kalvi News 


குடியரசு தின சிறப்பு வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு. சீனி.தனஞ்செழியன்

 

குடியரசில் குதூகலிப்போம்

எங்கள் நாடு
பூமியின் பூக்காடு
எங்கள் ரத்தநாளங்களில் புடைத்து நிற்கிறது தாயகப்பற்று
முன்னோர்களின் தியாகத்தில்
அளப்பறிய வீரத்தில்
அவர்களின் உதிரத்தில்
உயரக்கண்டோம் தேசியக்கொடி

இங்குதான்
திருநீறும் சிலுவையும் கைக்கோர்க்கும்
பசுமையும் காவியும்
பகைமை துறக்கும்
சம்மதமாய் எம்மதமும் 
ஏற்கும் எந்நாடு 
பொன்விளையும் புகழோடு

குண்டு வெடிக்குமோ என 
குமுறல் இல்லை
துப்பாக்கி தாக்கிடும் 
துயரங்கள் இல்லை
பதுங்கு குழி வாழ்க்கையில்லை
பயமே வாழ்வாய் ஆனதில்லை

யாவரும் பேசலாம்
தவறென்றால் யாவரையும் பேசலாம்
அனைவர்க்கும் உண்டிங்கு உரிமை
அதுவே எம் தாயகத்துப் பெருமை

நாங்கள் வெள்ளையையே வெறுத்தொதுக்கிய கறுப்பழகர்கள்
நிறபேதங்களால் மட்டுமல்ல
பிறபேதங்களாலும்
எங்களைப் பிளவுபடுத்த முடியாது
எங்கள் ஒற்றுமைச்சங்கிலி நீசபுத்திக்கயவர்களால் ஒருபோதும் உடையாது

இன மொழி மதம் கடந்த 
மகத்துவ மனிதர்கள் நாங்கள்
இந்தியா தானெங்கள் சுவாசம்
உலகே எங்கள் பெருமை பேசும்

தாயினும் மேலாய்
உணர்விலும் உளத்திலும் நிறைந்திருக்கிறது எங்களுக்கு தேசப்பற்று
உலகம் உய்யட்டும் எங்களைக் கற்று

கயமைகள் விலக 
நன்மைகள் பெருக
அமையட்டும் இக்குடியரசு
வறுமை நீங்கி வளமை நிரம்பக் கொட்டட்டும் வெற்றிமுரசு


சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருவலம்-632515,
வேலூர் மாவட்டம்.

Click here for latest Kalvi News 


28.01.2023 சனிக்கிழமை - பள்ளி முழு நேர வேலைநாள் - CEO Proceedings

 கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / தனியார் / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி / சுயநிதி / தொடக்க / உயர் / மேல்நிலைப் பள்ளிகளும் 28.01.2023 சனிக்கிழமை அன்று பள்ளி முழு நேர வேலைநாளாக செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , 28.01.2023 சனிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை போன்ற விடுமுறை ஏதும் அறிவிக்கக் கூடாது எனவும் தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .





School Morning Prayer Activities - 26.01.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 26.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 

பொருள்:
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.


பழமொழி :
It is better to plough deep than wide.

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 

2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :

வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப் பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான். 


பொது அறிவு :

1.அடகாமா பாலைவனம் எங்கு உள்ளது ? 

தென் அமெரிக்காவில்

2. டில்லி நகரை வடிவமைத்தவர் யார்? 

எல் லுட்யன்ஸ்.


English words & meanings :

pray - addressing a prayer to God. verb. வழிபடு. வினைச் சொல். prey - an animal that is killed for food. noun. இரையாகும் விலங்கு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

உடலுக்கு தேவையான ஆற்றலுக்கு வைட்டமின் பி அவசியமானது. மொச்சை பயிறில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.

இரத்த சோகை போன்ற இரும்புச் சத்து குறைப்பாட்டை போக்குகிறது. எனவே உடல் எப்பொழுதும் சோர்வாக இருப்பவர்கள் மொச்சை பயிறை தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம். இந்த மொச்சை பயிறில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.


NMMS Q

√75 + √12 - √27 - இன் மதிப்பு கீழ்கண்ட எதற்கு சமமானது? 

a) √60. b) √114. c) √32. d) √48.

 விடை : √48


ஜனவரி 26 இன்று

இந்தியக் குடியரசு நாள் 



1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்[3]:

"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.[3][4]

1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும், மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான். 

நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக்கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப்பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். 

அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும், தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். ஆனால், அந்தப் பிச்சைக்காரன், இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக்கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர். 

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், கடவுளின் அருளால் வைரக்கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன், பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து, மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்தப் பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்.


இன்றைய செய்திகள் - 26.01.2023

* உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* வட சென்னையில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான வருவாயை இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

* டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, சாலை, தெருக்களில் திரண்டனர்.

* ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐநா வலியுறுத்தியுள்ளது.

* நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா - சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்.

* முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்:  வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி  இந்திய அணி 2-வது வெற்றி. 

* உலகக் கோப்பை ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்.

Today's Headlines

* The Madras High Court has quashed the order issued by the Commissioner of Food Safety banning Gutka, Pan Masala, and other tobacco products under the Food Safety and Quality Act.

 * Chief Minister M. K. Stalin has ordered the allocation of funds to construct a sports complex in North Chennai at an estimated cost of Rs. 9.70 crores.

 * Minister P. Murthy has said that the revenue of the commercial tax and registration department has increased to Rs.1.17 lakh crore, surpassing the revenue till March of last year in January of this year itself.

*  The earthquake occurred in Delhi, Uttar Pradesh, Uttarakhand, Bihar, Haryana, and Rajasthan.  As the vibrations were felt in the houses and buildings, panicked people came out and gathered on the roads and streets.

 * The United Nations has urged the Taliban, the country's rulers, to lift the ban on girls' education in Afghanistan.

 * India beat New Zealand to clinch the series and climb to the top spot in the ODI rankings.

*  Trilateral Women's 20 Over Cricket: India beat West Indies for 2nd win.

 * Hockey World Cup: Belgium beats New Zealand to enter semi-finals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 


4 , 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

 4 , 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்றுநர்களுக்கு மதுரையில் 27.01.23 ல் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.