School Morning Prayer Activities - 19.01.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 19.01.2023



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

பொருள்:

ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

பழமொழி :

Be slow to promise but quick to perform

ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று



இரண்டொழுக்க பண்புகள் :

1. புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன். 

2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. நேசிப்பேன்.


பொன்மொழி :

வாழ்க்கை ஒரு சங்கீதம்.  அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.


பொது அறிவு :

1. மனிதனுக்கு எத்தனை ஜோடி விலா எலும்புகள் உள்ளன? 

 12 ஜோடிகள் .

 2.அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுவது எது? 

 கொல்கத்தா.


English words & meanings :

lessen - make smaller. verb. குறைப்பது. வினைச் சொல். lesson - learning materials or things.noun பாடம். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் உள்ள எல் டோபா பார்கின்சன் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

மனச்சோர்வு மற்றும் மனப்பிறழ்வு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது.


NMMS Q

தனிம வரிசை அட்டவணையில் 118 வது தனிமமாக நவ 28, 2016 இல் சேர்க்கப்பட்ட தனிமம் ___________ 

a) Oganesson b) Tennessine c) Livermorium.

 விடை: Oganesson


ஜனவரி 19 இன்று

1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.



நீதிக்கதை

செய்நன்றி மறவேல்

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.
அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள் - 19.01.2023

* மத்திய அரசுப் பணிகளில் 2.1% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.

* சென்னையில் 3 கடைகளில் 1500 பொம்மைகள் பறிமுதல்: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால் நடவடிக்கை.

* விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

* சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி.

* உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

* டாடா ஸ்டீல் செஸ் போட்டி: உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி.

* 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், முர்ரே, ஜாபியர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Only 2.1% of central government jobs are selected from Tamil Nadu: Minister Udayanidhi Stalin informs.

 * 1500 toys seized from 3 shops in Chennai: Action for lack of ISI stamp

 * Anna University said that the term exam will be conducted on Sunday as well.  Students are dissatisfied with the announcement.

 * Reluctance to identify minorities: Supreme Court disapproves of 6 states and UT governments.

*  16 people, including Interior Minister Denis Monastrisky, died in a helicopter crash in the capital of Ukraine, Kiev.

 * TATA STEEL CHESS MATCH: Pragnananda beats World No. 2 with stunning victory.

 * An Australian woman has run a marathon every day for 150 days, a world record.

 * Australian Open tennis: Djokovic, Murray, Japier advance to 2nd round
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Plus One / 11th Standard - Public Exam March 2023 - Time Table Download

Plus Two / 12th Standard - Public Exam March 2023 - Time Table Download

School Morning Prayer Activities - 18.01.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.01.2023

திருக்குறள் :

பால்: அறத்துப்பால். 

அதிகாரம் - செய்நன்றி அறிதல்.

 குறள் : 106 

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

 விளக்கம்:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது

பழமொழி :
A sound mind in a sound body

வலுவான உடலில் தெளிவான மனம்


இரண்டொழுக்க பண்புகள் :

1.புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன்.

2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. அனைவரையும் நேசிப்பேன்.


பொன்மொழி :

வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்


பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்ற நாள் எது? 

மே 13 ,1952. 

2. இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி யார்? 

மீரா சாகிப் பாத்திமா பீவி.


English words & meanings :

knead -massage. verb. பிசைதல். வினைச் சொல். need -desire. verb. ஆசை. வினைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

தினசரி பயன்படுத்தும் சமையலில் விதவிதமான பயிறு வகைகள் இடம் பெற்றாலும் குளிர் காலங்களில் அதிகமாகக் கிடைப்பது மொச்சைப் பயறு. குறிப்பாக பொங்கல் சமயங்களில் இந்த மொச்சைப்பயறை விதவிதமாக சமைத்து சாப்பிடுவார். நாட்டு காய்கறிகளில் முக்கிய இடம் பிடித்த இதில் ஏராளமான ஊட்டச்ச்த்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்தக் கூடியது.



NMMS Q

அறை வெப்பநிலையில் நீர்மமாக காணப்படாதது எது? ________ 

விடை: Cs


நீதிக்கதை

முதலையும்,நண்டும்

ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன. அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன. மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.

கோடைகாலம் வந்ததது. நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது. தண்ணீர் குறைந்ததால், முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவதில்லை. உண்ண எதுவும் இல்லா நிலையில், ஒரு நாள், முதலை நண்டிடம், நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.

அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய. நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.

செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து முதலை செத்தது போலத்தெரியவில்லையே! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே என்றது. இதைக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது. அதைப் பார்த்த நரி, நண்டிடம் செத்த முதலை எப்படி வாலை ஆட்டும். நீங்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள் என கூறிவிட்டு ஓடியது. அறிவில்லாத முதலையும், நண்டும் ஏமாந்தது.


இன்றைய செய்திகள் - 18.01.2023

* டிஎன்பிஎஸ்சி-யின் 2023-ம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையில் சிவில் நீதிபதி தேர்வு அறிவிக்காததால் இளம் வழக்கறிஞர்கள் ஏமாற்றம்.

* தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காக தொண்டாற்றிய 10 அறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.



* ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையை தொடங்கியது தேர்தல் ஆணையம்.

* சீனாவின் மக்கள்தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

* பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.951 கோடிக்கு வாங்கியது வியாகாம் 18.

* இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடக்கம்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஆண்டி முர்ரே.


Today's Headlines

* Young lawyers disappointed as TNPSC did not announce civil judge exam in 2023 proposed timetable.

* At the Tiruvalluvar Day function held in Chennai yesterday on behalf of the Tamil Development Department, Chief Minister M.K.Stalin honored 10 scholars who have volunteered for the welfare of Tamil and Tamilians.

 * Want government representation in Supreme Court collegium: Central government's letter to Chief Justice.

 * Remote Voting Machine: Election Commission started consultation with political parties.

 * China's population is said to have fallen for the first time in 60 years, and their national birth rate had fallen.

 * Viacom 18 bought the Women's IPL cricket broadcasting license for Rs 951 crore.

* India Open Badminton tournament started yesterday in Delhi.

 * Australian Open Tennis: Andy Murray advances to 2nd round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here to join whatsapp group for daily kalvinews update 

இனி வெயிட்டேஜ் முறை கிடையாது; ஆசிரியர் நியமனத்தில் அரசு அதிரடி முடிவு

 'பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில், 'வெயிட்டேஜ்' எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டாம்' என, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


கடந்த காலங்களில், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்திய சில தேர்வுகளில் சர்ச்சைகள்ஏற்பட்டன. டி.ஆர்.பி.,யை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பள்ளிக்கல்வி துறை செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:


விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு அல்லது கணினி வழி தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மூத்த ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்கப்படுவார்


மாவட்ட வருவாய் அதிகாரி, துணை கலெக்டர், இணை இயக்குனர், துணை இயக்குனர் அந்தஸ்து உட்பட, 71 புதிய பதவிகள் உருவாக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குனர் அந்தஸ்தில் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.


நிதித்துறை செயலர் அல்லது அவரது பிரதிநிதி, பள்ளிக்கல்வி கமிஷனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லுாரி கல்வி இயக்குனர் ஆகியோர், நிர்வாக குழுவில் இடம் பெறுவர்


போட்டி தேர்வுக்கு பின், சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு பதவிக்கு, 1.25 என்ற விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்படுவர்.


பள்ளிகள், கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் மட்டுமின்றி, இன்ஜினியரிங், சட்ட கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகளுக்கான பேராசிரியர்களும், டி.ஆர்.பி., வழியாக தேர்வு செய்யப்படுவர்


'வெயிட்டேஜ்' ரத்து


நீதிமன்ற வழக்குகளை கையாள சட்ட மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். வழக்குகளை விரைந்து முடிக்க, நிபுணத்துவம்பெற்ற வக்கீல்கள் குழுவின் ஆலோசனை பெறப்படும்


அனைத்து வகை போட்டி தேர்வுக்கான புத்தகங்களுடன், 'டிஜிட்டல்' நுாலகம் ஏற்படுத்தப்படும். அனைத்து பணி நியமன அமைப்புகளையும் இணைக்கும் மொபைல் செயலி உருவாக்கப்படும்


அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யை போன்று, டி.ஆர்.பி.,யிலும் இனி வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்படாது.


போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் உயர் கல்வி அல்லது வேறு தகுதிகள் அடிப்படையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படாது


டி.ஆர்.பி., அமைப்பு வெளிப்படையாகவும், அரசின் ரகசியங்களை பாதுகாத்தும் செயல்பட வேண்டியுள்ளதால், அதற்கென தனி கட்டடம் மற்றும்வளாகம் அமைக்கப்படும். இதை திட்டமிட கமிட்டி உருவாக்கப்படும்.


இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால் 60 நாள் சிறப்பு விடுப்பு - மத்திய அரசு

 Special Maternity Leave: 

பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால், மனதளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலன் கருதி 60 நாள் சிறப்பு விடுப்பு தர மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது.

ஏற்கனவே பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிரவத்தின் போது சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Click here to join whatsapp group for daily kalvinews update 

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களை மீளாய்வு செய்ய SCERT இயக்குநர் உத்தரவு.

 

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பாடநூல்களை அச்சிடும் பணிக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே , 1 முதல் 10 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களுக்கான மீளாய்வுப் பணிமனை பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு நடைபெற உள்ளது.

மேலும் , இணைப்பில் porom பாடநூல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் இப்பணிமணையில் கலந்துகொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்களும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களும் SCERT இயக்குநர் உத்தரவு. 

Class 1-12 Minority Languages Teachers list.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் நியமனம்: இயக்குநர் உத்தரவு

 தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1400க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 


இந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதற்கு காலதாமதம் ஆவதால் மாணவர்கள் நலன் கருதி தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


*இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது


ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 19 முதுநிலை ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன.


இவற்றில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, பள்ளி மேலாண்மை குழு வழியே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேரடியாகவோ, தபால் வழியிலோ உரிய கல்வி சான்றுகளுடன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பங்களை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அனுப்ப வேண்டும். 


பின்பு, பள்ளி மேலாண்மை குழு வழியே, தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். 


இந்த பணிகளை வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் பதவிக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பள்ளிகளின் பெயர் பட்டியல்


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Click here to download pdf file...


Click here to join whatsapp group for daily kalvinews update 

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை - பிப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

 இளைஞர்களுக்கு உதவித்தொகை


திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.


இத்திட்டத்தின் வாயிலாக உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள்,


 https://tnvelaivaaippu.gov.in,


https://employmentexchange.tn.gov.in 


ஆகிய இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். இதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், பிப்.28ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுஉள்ளார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Ennum Ezhuthum - Module 2 - January 3rd & 4th Week Lesson Plan

 Ennum Ezhuthum - Module 2 - January 3rd & 4th Week Lesson Plan

Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023 


4th STD All Subject Lesson Plan Term 3 Tamil Medium / English Medium

   4th All Subject Lesson Plan Term 3 Tamil Medium 

  • Click here to download pdf file

 4th All Subject Lesson Plan Term 3 English Medium

  • Click here to download pdf file


Click here to join whatsapp group for daily kalvinews update 

3rd STD All Subject Lesson Plan Term 3 Tamil Medium / English Medium

   3rd All Subject Lesson Plan Term 3 Tamil Medium 

 3rd All Subject Lesson Plan Term 3 English Medium


Click here to join whatsapp group for daily kalvinews update 

2nd STD All Subject Lesson Plan Term 3 Tamil Medium / English Medium

  2nd All Subject Lesson Plan Term 3 Tamil Medium 

 2nd All Subject Lesson Plan Term 3 English Medium


Click here to join whatsapp group for daily kalvinews update 

1st All Subject Lesson Plan Term 3 Tamil Medium / English Medium

 1st All Subject Lesson Plan Term 3 Tamil Medium 

 1st All Subject Lesson Plan Term 3 English Medium

பொதுத் தேர்வுக்குத் தயாரா?

 நன்றாகப் படிக்கும் மாணவரே என்றாலும் கூட, தேர்வு என்றதுமே அவர்களுக்குள் ஒருவித பயமும் பதற்றமும் சேர்ந்துவந்து ஒட்டிக் கொள்கிறது. இது அவர்களது புத்திக்கூர்மையையும் செயல்திறனையும் ஆற்றமையும் குறைப்பதாக அமைகிறது. இதனைச் சரியாக கையாளக் கற்றுக்கொண்டால், தேர்வை பயமின்றி எதிர்கொள்ளலாம். தூள் கிளப்பலாம். மாணவர்கள் சுலபமாக பின்பற்றக்கூடிய சில டிப்ஸ்கள் இதோ...

முதலில், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக படித்துக்கொள்ளலாம் என்கிற அலட்சியப் போக்கை வைத்துக்கொள்ளாதீர்கள். அந்த ஓர் ஆண்டினை முழுமையாக படிப்பதற்கு என்று அர்ப்பணித்தால் மட்டுமே நீங்கள் பெற நினைத்த மதிப்பெண்ணை வாங்கிட முடியும். இவ்வளவு நாளாக சும்மா இருந்துவிட்டு, இப்போது என்ன செய்வது எனும் பதற்றம் கொள்ள வேண்டாம்.

மீதமிருக்கும் நாட்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதும். உங்கள் திறனுக்கேற்றவாறு படிப்பதற்கென்று ஒரு அட்டவணையை தயார் செய்யுங்கள். பத்துப் பாடங்களில் எட்டுப் பாடங் களைக்கூட முழுமையாகப் படித்தால் போதும். பத்தையும் நுனிப்புல் மேய்வதை தவிருங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் தூக்கம். எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இருக்காமல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. தூக்கத்தைக் குறைத்து படித்துக்கொண்டே இருந்தால், சோர்வு உண்டாகி, படிப்பது மறந்துபோகக்கூடும். எப்போது படித்தாலும் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும்.

தினமும் இரவில் தூங்கச் செல்லும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தூங்கச் செல்லும் முன்பாக தொலைக்காட்சி பார்ப்பதும், செல்பேசியில் நேரத்தைச் செலவிடுவதும் நமது தூக்கத்தையும் கவனத்தையும் பாதிக்கும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சின்ன இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்காமல், சிறிது வீட்டைச் சுற்றி நடக்கலாம். வீட்டில் உள்ளவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடலாம்.

தேர்வு நேரங்களில் சரியான உணவு முறை வேண்டும். இரும்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள், கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காலைச் சிற்றுண்டியை தவிர்த்தல்கூடாது. உடல் நலனைப் பேணுவதும் அவசியம் என்பதால் தேவையான உணவை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் நலனைப்போலவே மனநலனும் மிகவும் அவசியம். பெற்றோரின் குணநலன்கள், வீட்டுச்சூழல், பொருளாதார நிலை போன்ற பல சவால்கள் இருக்கக்கூடும். இதனால் மாணவர்கள் எதிர்மறையான சிந்தனையை ஒருபோதும் அடைந்து விடக்கூடாது. நேரத்தை விரயமாக்கும் தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது.

பாடங்களை அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்வதைவிட, புரிந்து படிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படும் பாடங்களை ஆசிரியரிடமோ அல்லது சக மாணவரிடமோ கேட்டு, தெளிவு பெற வேண்டும். படித்து முடித்தவுடன் பழைய தேர்வுத் தாள்களை வைத்து, பயிற்சி செய்யலாம். கணக்குப் பாடத்தை இயன்றவரை பலமுறை போட்டுப் பார்க்க வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர், மாணவரை மட்டும் விட்டுவிட்டு, தனியாக கேளிக்கைகளில் ஈடுபடுதல், வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இந்த டிப்ஸ் மாணவர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள்.


TRUST Examination - December 2022 - Final Key Answer.!!!

  TRUST Examination - December 2022 - Final Key Answer.!!!\

Click here to download pdf file

 Click here to join whatsapp group for daily kalvinews update

How to ADD IFHRMS EMPLOYEE ID for Teaching & Non-Teaching Staff EMIS

 How to ADD IFHRMS EMPLOYEE ID for Teaching & Non-Teaching Staff EMIS


Step by step Instructions - Download here

ஜன.2023 -க்கான அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்ட அறிவிப்பு.


பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 27.01.2023 , 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய மூன்று நாட்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் , ஹோட்டல் தமிழ்நாடு- ல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . ஆய்வு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலைகல்வி ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) மடிக்கணினியுடன் கலந்து கொள்ள உத்தரவு.

நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு தனி வங்கிக் கணக்கு துவங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 


தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் உள்ள மேனிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு அப்பள்ளிவாரியாக 2022-2023 ஆம் ஆண்டிற்கான NSS Grant வழங்கவேண்டியுள்ளதால் பாரத ஸ்டேட் வங்கியில் CNA Zero Balance Current Account ( ZBSCA ) புதியதாக தொடங்கி அதன் விவரத்தினை 20.01.2023 க்குள் சார்ந்த பள்ளிகளில் இருந்து பெற்று அதனை தொகுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞல் மூலம் ( dselsectionnss@gmail.com ) இவ்வவாணையரகத்திற்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 1-5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 1-5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அப்போது உரையாற்றிய அவர்; பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய தொகை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீள சாலைகள் ரூ.4,000 கோடியில் தரம் உயர்த்தப்படும்.


அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 2023-2024-ம் நிதியாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். 2024 ஜனவரி 10,11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும். அதிமுக ஆட்சியை விட சுமார் 4ஆயிரம் கோடி குறைவாகவே கடன் வாங்கியுள்ளோம்; திமுக ஆட்சியில் 79ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் கடன் வாங்கப்பட்டுள்ளது. 2030க்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதே நோக்கம். இளைஞர்களின் நலன், பெண்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.


முடித்தே தீர்வோம் என்பதே வெற்றிக்கான இலக்கு. மக்களுக்காக இருக்கிறேன், அதற்காக உண்மையாக உழைக்கிறேன். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படிக்காமல் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற முடியாது. 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடம் என்ற சட்டத்தை இயற்றி, மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார் கலைஞர். அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக இருப்பதை இந்த அரசு தொடர்ந்து கண்காணிக்கும் இவ்வாறு கூறினார்.

ADW School - ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

 சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் பணியிடத்திற்கு கீழ்க்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்/ பட்டதாரி  ஆசிரியர்கள்; வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள், வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை, பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.    

முதுகலைப் பட்டதாரி  ஆசிரியர்கள்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள்,மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள், அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தன் 7 காலிபணியிடங்கள் உள்ளன. தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2ம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிடையாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ 18.01.2023  மாலை 5.45 மணிக்குள் அளிக்கலாம்.