School Morning Prayer Activities - 12.01.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.01.2023




திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பொருள்:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவார்.


பழமொழி :

Don't judge a book by its cover.

 புறத்தோற்றம் கண்டு மயங்காதே


இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்


பொன்மொழி :

ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது


பொது அறிவு :

1. நண்டு தன் ஆயுட்காலத்தில் எத்தனை முறை சட்டையை உரிக்கிறது ?

18 முறை. 

 2. கண்ணால் பார்க்கக்கூடிய கிரகம் எது ? 

 செவ்வாய்.


English words & meanings :

hear - to listen, verb. கேட்டல். வினைச் சொல். here - at this place. adverb.இங்கே. வினையுரிச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

ஆளி விதைகள் மற்றும் பால் கலவையானது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ஆளி விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனுடன், நீரிழிவு நோயால் ஏற்படும் பல சிக்கல்களைத் தடுக்க உதவும்.


NMMS Q

IUPAC ன் விரிவாக்கம்_______________ 

விடை: International Union Of Pure And Applied Chemistry


ஜனவரி 12 இன்று

தேசிய இளைஞர் நாள்



சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.


நீதிக்கதை

ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.

அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.

மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.

அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.

விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.


இன்றைய செய்திகள் - 12.01.2023

* தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாளை முதல் 340 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

* இம்மாத இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகும் என்று மத்திய அரசு தகவல்.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையும் - சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்.

* ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி, ரோகித் முன்னேற்றம்.

* சென்னை மண்டல பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

Today's Headlines

* The Tamil Nadu government has issued an order transferring 21 IPS officers in Tamil Nadu.

* Minister KN Nehru said that the government policy has decided to establish basic infrastructure in the cities near the metropolitan cities.

 * 340 additional special buses will operate from Chennai from tomorrow on the occasion of Pongal festival.

 * The central government informed that the new parliament building will be ready by the end of this month.

* In UNO India will join as a permanent member for the Security Council –Information on international poll. 

 * ICC Men's Cricket Rankings List Released: Goalie, Rohit Progress

* In Chennai Zone in between School teams, the 20 over cricket match was won by BSPP Millenium Team
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரத்தினை TNSED APP-ல் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு.

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டியல் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை , பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools App- ல் Login செய்து Schemes Menu -வை பயன்படுத்தி பாடப்புத்தகங்கள் விநியோகித்த பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

IFHRMS -ல் Employee ID ஐ பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு - SR சரிபார்த்து விடுப்பு விபரங்களை TNSED APP-ல் பதிவேற்றவும் அவகாசம்!!!

 


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் (SR)- ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் கால நீட்டிப்பு - கணக்கில் உள்ள விடுப்பு விபரங்களை பதிவேற்றம் செய்தல் – தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் வெளியீடு.

* ஆசிரியர் பணிப்பதிவேடு சரிபார்ப்பு முகாம் 21.01.2023 அன்று நடைபெறும்...


* விடுப்பு விவரங்களை சரிபார்த்து TNSED schools App இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


* இனி வருங்காலங்களில் App  வழியாகவே விடுப்புகளை விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..


IFHRMS - Employee ID Add Proceedings - Download here

Inspire Award 2022 - 2023 | Selected Students List Published

Inspire Award Selected Students List 2022 - 2023


Government of India Ministry of Science & Technology, Department of Science & Technology


List of Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23


Name of the State: Tamil Nadu


No. of Sanctioned: 733


Inspire Award 2022 - 2023 | Selected Students List PDF - Download here 


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம் - Judgement Copy

 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம்.

தீர்ப்பு நகல் :


Aided School Pay - Judgement Copy - Download here

School Morning Prayer Activities - 11.01.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 11.01.2023


திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண்: 737

குறள்:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

பொருள்:
ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும்  தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்


பழமொழி :
Don't kick the ladder by which you climb up.
ஏற உதவிய ஏணியை உதைக்காதே


இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்


பொன்மொழி :

மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.1. மூக்கு கொம்பன் என்று எந்த விலங்கை அழைப்பர்? காண்டாமிருகம். 2. ராணுவ தினம் எப்போது? ஜனவரி 15.


பொது அறிவு :

1. மூக்கு கொம்பன் என்று எந்த விலங்கை அழைப்பர்? 

 காண்டாமிருகம்

 2. ராணுவ தினம் எப்போது? 

 ஜனவரி 15.


English words & meanings :

heal - to cure the sickness. verb. குணப்படுத்து. வினைச் சொல். heel -back of the feet. noun. குதிங்கால். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

ஆளி விதை மற்றும் பால் கலவையானது குடலுக்கு நன்மை பயக்கும். ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. நார்ச்சத்து குடல் உணவை ஜீரணிக்க உதவுகிறது. நார்ச்சத்தை உட்கொள்வதன் மூலம், உணவை ஜீரணிக்க குடல்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. இது செரிமானத்தை மேம்படுத்தும். செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் நீங்குவதற்கு உதவுகிறது.


ஜனவரி 11 இன்று

திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுநாள்



திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[2] சனவரி 11 இல் உயிர் துறந்தார்.[3] இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்


நீதிக்கதை

வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு யாராவது காப்பாற்றுங்கள் என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு நான் கீழே வந்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.

இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்? என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.


இன்றைய செய்திகள் - 11.01.2023

* கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* "2023ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் காப்புறுதிக் கட்டணத் தொகை ரூ.1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* தமிழக கடற்கரையோரங்களில் கிடைக்கும் கனிமங்களை சந்தைப்படுத்த ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

* 2021-ம் ஆண்டு அதிக சாலை விபத்துகள் ஏற்பட்ட பெருநகரங்களின் பட்டியிலில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. மேலும், சாலை விபத்துகளில் அதிகமானோர் மரணம் அடைந்த பட்டியலில் சென்னையில் 2-வது இடத்தில் உள்ளது.

* திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் 350 அடி வரை உள்ளே புகுந்த கடல்நீர் - நிபுணர்கள் ஆய்வு.

* ஜோஷிமத் நகரில் ஏற்பட்ட நிலவெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கஷ்டப்பட்டு கட்டிய தங்கள் வீட்டை எண்ணி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

* உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

* இந்தோனேசியாவின் தனிம்பார் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

* மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.

* போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்டோ மார்டினெஸ் நியமனம்.

 * ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு.


Today's Headlines

* The Madras High Court has ordered the Dindigul District Collector to seal shops selling plastic bags and water bottles in Kodaikanal.

* "A check of Rs. 1200 crore has been issued to the United India Insurance Company for the insurance premium amount of the Chief Minister's Comprehensive Medical Insurance Scheme for the year 2023," said the Minister of Health and Welfare.

 * Agreement to market minerals which is found along the coastal regions of TN: Signed

 * Chennai tops the list of cities with the highest number of road accidents in 2021.  Also, Chennai ranks 2nd in the list of most road accident deaths.

*  Seawater intrusion up to 350 feet in Sriharikota area of ​​Tirupati district - experts study.

* As the government has taken steps to demolish the buildings affected by the earthquack in Joshimath, people are shedding tears thinking about their hard-built houses.

* Athar Poonawala, Chief Executive Officer of Serum Company, has said that Corona is under control in India better than other countries in the world.

 * Pakistan is in a severe economic crisis and people are suffering due to the steep rise in the prices of essential commodities.

 * A magnitude 7.7 richter earthquake has been reported in Tanimbar, Indonesia.

 * The Malaysian Open Badminton Series started yesterday in Kuala Lumpur.

*  Roberto Martinez appointed as new coach of Portugal football team.

 * England's Harry Brook selected as the Best cricketer  of the Month for December by ICC
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here to join whatsapp group for daily kalvinews update 

TNSED School App-ல் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

 LEAVE MODULE NEW UPDATE | TNSED SCHOOLS

TNSED School App-ல் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:


ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்கள் தங்களின் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் கீழ்க்கண்ட நடைமுறையினைப் பின்பற்றி தங்களின் கணக்கில் உள்ள 

*ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு* இருப்பின் எண்ணிக்கையை tnsedschools app-ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


Login to TNSED SCHOOLS App


Click on e-profile > Leave Management > My Leaves


Click on the leave balance to edit the balance with correct numbers.


Please read the alerts and click on Submit


ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்களின் இருப்பில் உள்ள விடுப்பினை பதிவேற்றம் செய்திட My leaves section - TNSED schools app-ல் ஜனவரி 10ம் தேதி enable செய்யப்படும்.


அதனைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட இருப்பில் உள்ள விடுப்பு விவரங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவதற்காக TNSED schools app மற்றும் tnemis.tnschools.gov.in ஜனவரி 24ம் தேதி enable செய்யப்படும்.


*ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்கள் தங்கள் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை பதிவேற்றம் செய்த பின்னர் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்  (DDO) அல்லது பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலர்* நிலையில் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை சரிபார்த்து ஒப்புதல் அளித்திடுவர்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.01.2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.01.2023

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - ஜனவரி - 2-வது வாரம்

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - ஜனவரி - 2-வது வாரம்- அலகு -1


கீழே உள்ள pdf file ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...








3RD TERM Formative Assessment FA (b) & Summative Assessment Schedule Published

EE Time table for Assessment.pdf




3rd term Formative  Assessment FA (b)    & Summative Assessment Schedule Published

Deo - promotion list published

Deo - promotion list published






ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்


*💐இன்றைய மதுரை ஜாக்டோ-ஜியோ தீர்மானம்:*

*💐(1) 26.1.2023 மாவட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ புனரமைப்புக்கூட்டம்.


*💐(2) 19.2.2023 மாவட்ட அளவில் உரிமை மீட்பு கருத்தரங்கு.


*💐(3) 5.3.2023 மாவட்ட அளவில் உண்ணாவிரதப்போராட்டம்.


*💐(4)24.3.2023 மாவட்ட அளவில் மனிதசங்கிலி 20 ஆயிரம் கி.மீ தூரம்.


மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான தலைமையாசிரியர் பட்டியல் வெளியீடு.

 தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்தபணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு 

மேற்காணும் அரசாணையில் பதவி உயர்வு / பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்ட கீழ்க்காணும் தலைமையாசிரியர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது . இப்பணியிடத்தில் உடன் பணியேற்கும்படி அறிவிக்கப்படுகிறது .


 DEOs Promotion as on 06.01.2023 - Download here




ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்

 அரசு பள்ளி ஆசிரியர்க ளுக்கு தேர்வு நிலை வழங்கு வது குறித்து , சிறப்பு முகாம் உத்தரவிடப்பட்டு உள்ளது . அரசு பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு , அவர்களின் அனுபவம் , கல்வி தகுதி , பணி நியமன காலம் ஆகியவை கருதி , தேர்வு நிலை உயர்வு வழங்கப்படும். இதற் காக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்து , நீண்ட நாட்க ளாக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் , ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவது தொடர்பாக , கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் , மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தி , உரிய தீர்வு காணுமாறு , கல்வி அலுவலர்களுக்கு , பள்ளிக்கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் வாசிக்க மிஷன் டெல்டா திட்டம்

 பள்ளி மாணவர்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், வாசிக்கவும் செய்வதற்கு, 'மிஷன் டெல்டா' என்ற திட்டத்தை, பள்ளிக்கல்வி துறை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவ - மாணவியரில் பலர், ஒன்பதாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறையில், அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.


அவர்களில் சில மாணவர்கள், 10ம் வகுப்பு வந்த பிறகும், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுதவும், வாசிக்கவும் திணறுகின்றனர்.

இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இந்த வரிசையில், 'மிஷன் டெல்டா' என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. முதலில், தஞ்சாவூர் மாவட்டத்தில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அடிப்படையாக மொழி அறிவு பெறாத மாணவர்களை பள்ளி வாரியாக கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், நடப்பு கல்வி ஆண்டிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், வாசிக்கவும் கற்றுத் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


இதுகுறித்து, தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

42 வயதுக்கு மேல் ஆசிரியர் பணிக்கு வாய்ப்பில்லை: புத்தாண்டில் அமலானது கல்வித்துறை உத்தரவு

 தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பொதுப்பிரிவில், 42 வயது வரை உள்ளவர்கள் தான், நேரடி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சீனியாரிட்டி மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 58 வயது நிரம்பாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்விப்பணியை முழுமையாக செய்ய முடியாது என்பதாலும், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையிலும், பொதுப்பிரிவில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு 40 வயதும், இதர பிரிவுகளில், 45 வயதும் என நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பிரச்னையால், ஆசிரியர் நியமனங்கள் நடக்கவில்லை.


அந்த காலகட்டத்தில், ஆசிரியர் நியமனத்துக்கான வயதை கடந்தவர்களின் நலன் கருதி, கடந்த, 2021ம் ஆண்டு செப்டம்பரில், கல்வித்துறை புதிய உத்தரவு வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் வரை, சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் அமலாகும் வகையில், ஆசிரியர் நியமனத்துக்கு பொதுப்பிரிவுக்கு, 40ல் இருந்து, 45 வயதாகவும், இதர பிரிவினருக்கு, 45ல் இருந்து, 50 வயதாகவும் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினத்தோடு இந்த உத்தரவுக்கான காலக்கெடு முடிந்து விட்டது.


கடந்த, 2021 செப்டம்பரில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவுப்படி, 2023ம் ஆண்டு, 1ம் தேதியில் இருந்து, ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு, பொதுப்பிரிவுக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு, 47 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.


எனவே, இனி தமிழகத்தில், பொதுப்பிரிவில், 42 வயது முடியாதவர்களும், இதர பிரிவில், 47 வயது முடியாதவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.


இந்த வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்கான படிப்பு முடித்திருந்தாலும், அது பயனில்லை என்ற நிலையும் உருவாகி உள்ளது.


 Click here to join whatsapp group for daily kalvinews update

04.01.2023 பிற்பகல் முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 04.01.2023 பிற்பகல் முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு


 மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் 6 மார்ச் 7 ஏப்ரல் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் (By Transfer) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 27.10.2022 முதல் 07.11.2022 வரையிலான நாட்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது.


அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் மற்றும் +1 Arrear பெயர் பட்டியலினையும், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 04.01.2023 - 2 PM முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge1.tn.gov.in - க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 Click here to join whatsapp group for daily kalvinews update

மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டி முடிவுகள்

 


6-8 மாணவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டி முடிவுகள்


 வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ( தனி )  - Download here


 வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ( குழு )  - Download here

 Click here to join whatsapp group for daily kalvinews update

ITK பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை மேலும் 4 மாதங்களுக்கு நியமித்துக்கொள்ள உத்தரவு.

 



ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் - மாவட்ட ஆசிரியர் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் 4 மாதங்களுக்கு தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள மாவட்டங்களுக்கு அறிவுறுத்துதல்-இல்லம் தேடிக் கல்வி, சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள்...

 ITK - Temporary Teacher.pdf - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update