TNSED School App-ல் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

 LEAVE MODULE NEW UPDATE | TNSED SCHOOLS

TNSED School App-ல் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:


ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்கள் தங்களின் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் கீழ்க்கண்ட நடைமுறையினைப் பின்பற்றி தங்களின் கணக்கில் உள்ள 

*ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு* இருப்பின் எண்ணிக்கையை tnsedschools app-ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


Login to TNSED SCHOOLS App


Click on e-profile > Leave Management > My Leaves


Click on the leave balance to edit the balance with correct numbers.


Please read the alerts and click on Submit


ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்களின் இருப்பில் உள்ள விடுப்பினை பதிவேற்றம் செய்திட My leaves section - TNSED schools app-ல் ஜனவரி 10ம் தேதி enable செய்யப்படும்.


அதனைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட இருப்பில் உள்ள விடுப்பு விவரங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவதற்காக TNSED schools app மற்றும் tnemis.tnschools.gov.in ஜனவரி 24ம் தேதி enable செய்யப்படும்.


*ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்கள் தங்கள் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை பதிவேற்றம் செய்த பின்னர் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்  (DDO) அல்லது பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலர்* நிலையில் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை சரிபார்த்து ஒப்புதல் அளித்திடுவர்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.01.2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.01.2023

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - ஜனவரி - 2-வது வாரம்

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - ஜனவரி - 2-வது வாரம்- அலகு -1


கீழே உள்ள pdf file ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...








3RD TERM Formative Assessment FA (b) & Summative Assessment Schedule Published

EE Time table for Assessment.pdf




3rd term Formative  Assessment FA (b)    & Summative Assessment Schedule Published

Deo - promotion list published

Deo - promotion list published






ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்


*💐இன்றைய மதுரை ஜாக்டோ-ஜியோ தீர்மானம்:*

*💐(1) 26.1.2023 மாவட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ புனரமைப்புக்கூட்டம்.


*💐(2) 19.2.2023 மாவட்ட அளவில் உரிமை மீட்பு கருத்தரங்கு.


*💐(3) 5.3.2023 மாவட்ட அளவில் உண்ணாவிரதப்போராட்டம்.


*💐(4)24.3.2023 மாவட்ட அளவில் மனிதசங்கிலி 20 ஆயிரம் கி.மீ தூரம்.


மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான தலைமையாசிரியர் பட்டியல் வெளியீடு.

 தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்தபணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு 

மேற்காணும் அரசாணையில் பதவி உயர்வு / பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்ட கீழ்க்காணும் தலைமையாசிரியர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது . இப்பணியிடத்தில் உடன் பணியேற்கும்படி அறிவிக்கப்படுகிறது .


 DEOs Promotion as on 06.01.2023 - Download here




ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்

 அரசு பள்ளி ஆசிரியர்க ளுக்கு தேர்வு நிலை வழங்கு வது குறித்து , சிறப்பு முகாம் உத்தரவிடப்பட்டு உள்ளது . அரசு பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு , அவர்களின் அனுபவம் , கல்வி தகுதி , பணி நியமன காலம் ஆகியவை கருதி , தேர்வு நிலை உயர்வு வழங்கப்படும். இதற் காக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்து , நீண்ட நாட்க ளாக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் , ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவது தொடர்பாக , கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் , மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தி , உரிய தீர்வு காணுமாறு , கல்வி அலுவலர்களுக்கு , பள்ளிக்கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் வாசிக்க மிஷன் டெல்டா திட்டம்

 பள்ளி மாணவர்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், வாசிக்கவும் செய்வதற்கு, 'மிஷன் டெல்டா' என்ற திட்டத்தை, பள்ளிக்கல்வி துறை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவ - மாணவியரில் பலர், ஒன்பதாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறையில், அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.


அவர்களில் சில மாணவர்கள், 10ம் வகுப்பு வந்த பிறகும், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுதவும், வாசிக்கவும் திணறுகின்றனர்.

இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இந்த வரிசையில், 'மிஷன் டெல்டா' என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. முதலில், தஞ்சாவூர் மாவட்டத்தில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அடிப்படையாக மொழி அறிவு பெறாத மாணவர்களை பள்ளி வாரியாக கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், நடப்பு கல்வி ஆண்டிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், வாசிக்கவும் கற்றுத் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


இதுகுறித்து, தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

42 வயதுக்கு மேல் ஆசிரியர் பணிக்கு வாய்ப்பில்லை: புத்தாண்டில் அமலானது கல்வித்துறை உத்தரவு

 தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பொதுப்பிரிவில், 42 வயது வரை உள்ளவர்கள் தான், நேரடி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சீனியாரிட்டி மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 58 வயது நிரம்பாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்விப்பணியை முழுமையாக செய்ய முடியாது என்பதாலும், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையிலும், பொதுப்பிரிவில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு 40 வயதும், இதர பிரிவுகளில், 45 வயதும் என நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பிரச்னையால், ஆசிரியர் நியமனங்கள் நடக்கவில்லை.


அந்த காலகட்டத்தில், ஆசிரியர் நியமனத்துக்கான வயதை கடந்தவர்களின் நலன் கருதி, கடந்த, 2021ம் ஆண்டு செப்டம்பரில், கல்வித்துறை புதிய உத்தரவு வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் வரை, சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் அமலாகும் வகையில், ஆசிரியர் நியமனத்துக்கு பொதுப்பிரிவுக்கு, 40ல் இருந்து, 45 வயதாகவும், இதர பிரிவினருக்கு, 45ல் இருந்து, 50 வயதாகவும் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினத்தோடு இந்த உத்தரவுக்கான காலக்கெடு முடிந்து விட்டது.


கடந்த, 2021 செப்டம்பரில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவுப்படி, 2023ம் ஆண்டு, 1ம் தேதியில் இருந்து, ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு, பொதுப்பிரிவுக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு, 47 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.


எனவே, இனி தமிழகத்தில், பொதுப்பிரிவில், 42 வயது முடியாதவர்களும், இதர பிரிவில், 47 வயது முடியாதவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.


இந்த வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்கான படிப்பு முடித்திருந்தாலும், அது பயனில்லை என்ற நிலையும் உருவாகி உள்ளது.


 Click here to join whatsapp group for daily kalvinews update

04.01.2023 பிற்பகல் முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 04.01.2023 பிற்பகல் முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு


 மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் 6 மார்ச் 7 ஏப்ரல் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் (By Transfer) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 27.10.2022 முதல் 07.11.2022 வரையிலான நாட்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது.


அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் மற்றும் +1 Arrear பெயர் பட்டியலினையும், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 04.01.2023 - 2 PM முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge1.tn.gov.in - க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 Click here to join whatsapp group for daily kalvinews update

மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டி முடிவுகள்

 


6-8 மாணவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டி முடிவுகள்


 வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ( தனி )  - Download here


 வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ( குழு )  - Download here

 Click here to join whatsapp group for daily kalvinews update

ITK பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை மேலும் 4 மாதங்களுக்கு நியமித்துக்கொள்ள உத்தரவு.

 



ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் - மாவட்ட ஆசிரியர் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் 4 மாதங்களுக்கு தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள மாவட்டங்களுக்கு அறிவுறுத்துதல்-இல்லம் தேடிக் கல்வி, சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள்...

 ITK - Temporary Teacher.pdf - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update

NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE

அன்பின் வாழ்த்துகள் ஆசிரியப் பெருமக்களே! :
NMMS இலவச கையேடு வெளியீடு!











                                       

ராமநாதபுரம் ஆசிரியர்.திரு.மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS போட்டித் தேர்விற்கான அறிவியல் & சமூகவியல் பாடங்களுக்கான கையேடு உருவாக்கப்பட்டு  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.


அச்சுப் பிரதியாக மட்டுமின்றி 20 ஆசிரியர்களது உழைப்பின் பயன் 100% இலவசமாக மாணவ மாணவியர்களுக்குக் கிடைக்கும் வகையில் அதனை PDF வடிவிலும் வெளியிட்டுள்ளனர்.


அதற்கான இணைப்புகள் 
PDF FILE
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇






அரசு விடுமுறை நாட்கள் & வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) பட்டியல் - 2023

 


2023- ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் & வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களின் பட்டியல்


Government holidays ans RH List 2023 + Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!

 



அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து , இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது . இதன்படி , தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும் . இதனால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் , ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் . இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுமெனினும் , அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது.



 Click here to join whatsapp group for daily kalvinews update

School Calendar - January 2023

 ஜனவரி மாத பள்ளி அட்டவணை


🟣02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.


1- 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனவரி 5 ஆம் தேதி பள்ளி திறப்பு


🟣02.01.2023 திங்கள் - (RL) வைகுண்ட ஏகாதசி 


🟣06.01.2023 வெள்ளி - (RL) ஆருத்ரா தரிசனம்


🟣07.01.2023- CRC Day.


🟣12.01.2023- தேசிய இளைஞர் தினம்.


 🟣14.01.2023 சனி (RL) - போகிப்பண்டிகை 


🟣14.01. 2023 முதல்  17.01.2023 வரை 4 நாட்கள்

பொங்கல் விடுமுறை.


🟣25.01.2023- தேசிய வாக்காளர் தினம்.


🟣26.01.2023- குடியரசு தினம்.


இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை.

 Click here to join whatsapp group for daily kalvinews update 

TNSED - 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS , STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை

 

TNSED Schools App


🚊 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS , STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை

__________________

🚊 தொடக்கப் பள்ளிகள்


 Today's Status

🚊Fully Not Working

Reason: Others


 Staff Attendance

🚊1-3 Handling Teachers

TR

🚊4 & 5th Handling Teachers

P or As usual Method


Students Attendance

🚊 பதிவிடத் தேவையில்லை

________________

🚊 நடுநிலைப் பள்ளிகள்


Today's Status

🚊 Partially Working_

Select Classes Working Today. VI,VII & VIII

Reason: Others


Staff Attendance

🚊1-3 Handling Teachers

TR


🚊Other Teachers

P or As usual Method


Students Attendance

🚊 6,7 & 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்.

___________________

🚊 உயர் & மேல்நிலைப் பள்ளிகள்


Today's Status

🚊 Fully Working


Staff Attendance

P or As usual Method


Students Attendance

🚊  அனைத்து ஆசிரியர்களும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்..


 Click here to join whatsapp group for daily kalvinews update 

ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணிப்பதிவேடு தகவல்களை 01.07.2023-க்குள் சரிபார்த்துக்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடு ( SR ) ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதி செய்தல் -அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 


தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களது பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திட வழங்கப்படுகின்றன.



 Click here to join whatsapp group for daily kalvinews update 

இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை.

 அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

 இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை :


🔸அனைத்துப் பள்ளிகளும் 02.01.2023 அன்று திறக்கப்பட வேண்டும்.


🔸1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 02.01.2023 முதல் 04.01.2023 வரை தவறாது எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.


🔸6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 02.01.2023 முதல் பள்ளி திறக்கப்பட வேண்டும்.


🔸ஓராசிரியராக இருக்கும் தலைமை ஆசிரியர்கள் தவறாது எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ( _குறிப்பு - SMC மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை. தலைமையாசிரியர்கள் EE பயிற்சி பெற்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்_ )


🔸4 மற்றும் 5 ஆம் வகுப்பு போதிக்கும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  02.01.2023 முதல் பள்ளிக்கு வருகை தந்து கீழ்கண்ட செயல்களில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. மூன்றாம் பருவத்திற்குரிய பாடநூல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்தல்.


2.பள்ளிக் கல்வித்துறையால் பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும்  Emis portal ல் பதிவு  செய்தல்.


3. மூன்றாம் பருவத்திற்குரிய பாடத்திட்டங்கள் தயாரித்தல்.


4. கற்றல் உபகரணங்கள் தயாரித்தல்.


5. வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல்.


6. அனைத்து ஆசிரியர்களுக்கும் 02.01.2023 முதல் TNSED Attendance App ல் வருகைப் பதிவு மேற்கொள்ளுதல்.


7.ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி ஐந்து முதல் தொடங்கும்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!

 NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு , பிப்ரவரி 2023

NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் :


.
இதையும் படியுங்கள்:


NMMSS தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்

 NMMSS தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது!


NMMSS Guidelines.pdf - Download here


இதையும் படியுங்கள்:


*New - SPECIAL GUIDE FOR THE STUDENTS PARTICIPATING IN THE TALENT TESTS PART 1 - MENTAL ABILITY TEST (NMMS, TRSTSE & NTSE)*

*NMMS Old Question Paper & Answer Key*

*NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE-August 2022 released