மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலருக்கான புதிய கடமைகள் மற்றும் பொறுப்புகள்

 வட்டாரக் கல்வி அலுவலருக்கு வழங்கப்படும் கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் சேர்க்க வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள்

👉ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்த வரையில்

👉1.அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை/சிறப்பு நிலை/போனஸ் ஊதிய உயர்வை வழங்க அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉2.அனைத்து ஆசிரியர்களுக்கும் எதிராக தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் விதி 17(a) இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், இறுதி உத்தரவுகளைத் அனுப்புவதற்கும் அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார். 

👉3.பணிமூப்புப் பட்டியல், தேர்ந்தோர் பட்டியல் மற்றும் ஆசிரியர் பணியாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தொடக்கக் கல்வி) பரிந்துரை செய்வதற்கும் அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉4.அனைத்து ஆசிரியர்களையும் உயர்கல்வித் தகுதிபெற அனுமதிக்கும் தகுதியான அதிகாரியாக அவர் இருப்பார்.

👉5.அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியம் பெறுதல் மற்றும் வழங்குதல், கடன் முன்பணங்கள் மற்றும் TPF முன்பணங்கள் தற்காலிக மற்றும் பகுதி இறுதி திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கு அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார் 

👉உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில்:

👉1. மறுநியமனமாகப் பணியமர்த்தப்பட்டவர்களின்  மறுநியமனத்திற்கான. ஒப்புதல் அளிக்க அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉2.அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைச் செயல்படுத்தவும் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தொடக்க) பரிந்துரைக்கவும் அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉பஞ்சாயத்து யூனியன் முனிசிபல் கார்ப்பரேஷனைப் பொறுத்தவரை, அரசு/உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை

பள்ளிகள்:

👉1. தேவைப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுப் பணியில் அதிகபட்சமாக 10 மாதங்களுக்கு அவரது அதிகார எல்லைக்குட்பட்ட தேவையான இடங்களில் தற்காலிக அடிப்படையில் நியமிப்பதற்கான தகுதியான அதிகாரியாக அவர் இருப்பார்.

👉2.தேவைப்படும் போதெல்லாம் வகுப்பு I முதல் VIII வரையிலான மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழின் மேலொப்பமிடும் அதிகாரியாக அவர் இருப்பார்.


பொது:

👉1. குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கைக்கு ஒரு மாதம் வரை வயது தளர்வு அளிக்கத் தகுதியான அதிகாரியாக இருப்பார்.

👉2. வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கடன்கள், முன்பணங்கள் மற்றும் GPF/TPF முன்பணத்தை (தற்காலிக மற்றும் பகுதி இறுதி )திரும்பப் பெறுவதற்கு அவர் தகுதியான அதிகாரியாக இருப்பார்.


மாவட்டக்கல்வி அலுவலர் தொடக்கக்கல்வியைப் பொறுத்தவரை


👉அயல்மாநில சான்றிதழ் மதிப்பீடு செய்தல், 1-8 முடிய அயல் மாநிலத்தில் பயின்றோர் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்தல், 

👉அனைத்துப் பணியிடங்களுக்கும் பணிவரன்முறை, தகுதிகாண்பருவம் பூர்த்தி செய்த உத்தரவு வழங்குதல்.

👉ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்வது.

👉தகுதியில்லாத பள்ளிகளை மூடுவது சார்ந்த கருத்துரு அனுப்புவது.

👉உபரிப்பணியிடங்களை,கூடுதல் தேவைப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்வது.

👉விருப்பார்ந்த ஓய்வில் செல்ல அனுமதி

👉இளையோருக்கு இணையாக மூத்தோருக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது.

போன்ற அதிகாரங்கள் மாவட்டக்கல்வி (தொ.க) அலுவலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ தொகுத்தறி (SA) தேர்வு பற்றிய சந்தேகமும் , அதற்கு உரிய விளக்கமும்.

 கேள்வி:1.

 TN EMIS APP மூலம் தொகுத்தறி தேர்வு நடத்த வேண்டுமா?


*ஆம்... கட்டாயம் TN EMIS APP மூலம் Online வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு 13.12.2022 முதல் 23.12.2022 வரையிலான கால கட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் இந்த Online தேர்வு மதிப்பீடு மட்டுமே தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்படும்*


கேள்வி:2.


 TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF எழுத்து தேர்வுக்குரிய வினாத்தாள்கள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்த வேண்டுமா? 


அப்படி வினாத்தாள்கள் வழியே வைக்கப்படும்  தொகுத்தறி மதிப்பீடு கணக்கில் தொகுத்தறி மதிப்பீடாக (SA) ஏற்றுக் கொள்ளப்படுமா?


* TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF வடிவிலான வினாத்தாள்கள் கொண்டு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வை கட்டாயமாக நடத்த தேவையில்லை...

 * Optional ஆக எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழியே எழுத்து தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பும் ஆசிரியர்கள்  வினாத்தாள்கள் வழியே தொகுத்தறி தேர்வை Online தேர்வுடன் இணைந்து நடத்தி கொள்ளலாம்*


* அப்படி வினாத்தாள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு தொகுத்தறி தேர்வு நடத்தினாலும் அந்த மதிப்பீடை தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்பாடாது


கேள்வி:3. 


1 & 2 &3ம் வகுப்புக்குரிய தொகுத்தறி PDF வினாத்தாள்கள் BRC மூலம் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படுமா?


* BRC மூலம் விலையில்லாமல் வினாத்தாள்கள் வழங்கப்படாது.... எழுத்து தேர்வை விரும்பும் 1 & 2 & 3ம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் தாமே தமது சொந்த பொறுப்பில் வினாத்தாள்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 ) விடுமுறை

மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 19 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை 
* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* தருமபுரி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாமக்கல் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 





* சேலம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 





தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 





* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 




கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் -09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் -09) அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



1) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


2) சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


3) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


4) வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை




5) கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


6) ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை



7) செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


8) விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை


9)திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை!

10) தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை

11) அரியலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

12) பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை





அரையாண்டு தேர்வு கால அட்டவணை & ( Syllabus ) முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்

 அரையாண்டு தேர்வு கால அட்டவணை & ( Syllabus ) முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்  Click here to download pdf

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கான தேதி மாற்றம் - SPD Proceedings

 


அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு 05.12.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 


இதனை தொடர்ந்து . தற்போது மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன . 11.11.2022 நாளிட்ட செயல்முறைகளின்படி மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 03.01.2023 முதல் 09.01.2023 க்குள் நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டது . தற்போது , நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022 க்குள் நடத்தப்பட உள்ளது . எனவே மாவட்ட அளவில் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும்.


 சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - டிசம்பர் 2022

 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது!

மாணவர்களுக்கு 146 வகை ஊட்டச்சத்து உணவுகள்: தேவையான பொருட்கள், செய்முறையை வெளியிட்டது தமிழக அரசு

 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான 146 ஊட்டச்சத்து உணவு வகைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் உடல்,மன ஆரோக்கியத்துடன் புத்திக்கூர்மையுள்ள மாணவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன், அவர்களது கற்றல் திறனும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சிறுதானியங்களின் பயன்பாடு கரோனா காலத்துக்கு பிறகு மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து தலைசிறந்த சமையல் கலைஞர்கள் அரசுக்கு பரிந்துரை அளித்தனர்.


அந்த வகையில் மத்திய அரசின் முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் விரிவான திட்டம் மற்றும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இணைந்து கர்ப்பிணிகள், குழந்தைகள் ஊட்டச்சத்து உணவு வகைகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 பக்கங்கள் கொண்ட 146 ஊட்டச்சத்து உணவு வகைகளை வெளியிட்டுள்ளது.


பலவகை பலகாரம்: இதில், சிறுதானிய உணவு வகைகள், அடுப்பில்லா சமையல், ஊட்டச்சத்துகளுடன் கூடிய இனிப்பு வகைகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகள், கர்ப்பகால மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகள், மூலிகை உணவு வகைகள் ஆகிய தலைப்புகளில் உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு உணவையும் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள், அதன் செய்முறை விளக்கப்பட்டிருப்பதுடன், உணவின் வண்ணப் படங்களும் உள்ளன.


சிறுதானிய உணவு வகைகளில் கேழ்வரகு அடை, கம்பு கொழுக்கட்டை, ரொட்டி, சாமை புளி பொங்கல், தினைக் கொழுக்கட்டை, கம்பு பாலக் ரொட்டி, வரகு தக்காளி சாதம், சிறுதானிய புட்டு மிக்ஸ், தினை சைவ பிரியாணி, கம்பு பணியாரம், குதிரைவாலி அரிசி பிரியாணி, சோளப் பணியாரம், கம்பு அடை, கைக்குத்தல் அரிசி வடை குதிரைவாலி இட்லி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


அடுப்பில்லா சமையல் பிரிவில், வெள்ளரி வெங்காயம், வெண்பூசணி பச்சடி சாலட், சதைப்பற்று கலந்த பழங்கள், தேனுடன் மசித்த பழங்கள், ஆரஞ்சு பஞ்ச், தக்காளி பஞ்ச், பழத்தூள், பழப் பச்சடி, சிலு, சிலு ஜில் பானம், அஷ்டாவதானி ஜூஸ், மிக்ஸட் புரூட்ஷேக், முளைப்பயிறு கம்பு சாலட் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.


ஊட்டச்சத்துடன் கூடிய இனிப்பு வகைகளில் சாமை பொரி உருண்டை, தினை இனிப்பு பொங்கல், தினை அதிரசம், வெந்தய களி அல்வா, வரகு அல்வா, கம்பு பாயாசம், குதிரைவாலி இனிப்பு அடை, அருகம்புல் பாயாசம், கேழ்வரகு வேர்க்கடலை அல்வா, சாமை அரிசி சர்க்கரைப் பொங்கல், தினை அல்வா, சாமை பால் பாயாசம், கடலைப்பருப்பு இனிப்பு உருண்டை, தினை பாயாசம் ஆகியன வண்ணப் படங்களாக பார்த்தவுடன் சாப்பிடத் தூண்டும் வகையில் உள்ளது.


ஆரோக்கியமான தாயும் சேயும்: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகளில், போஷாக்கு கஞ்சி, சோள ஓலை கொழுக்கட்டை, சோள சுண்டல், மக்காச்சோளம் முந்திரி கொத்து, தினை புட்டு, கம்பு கொழுக்கட்டை, ராகி ரொட்டி, கூழ் தோசை என பட்டியல் நீள்கிறது. ஊட்டச்சத்து இட்லிகள், பருத்திவிதைப் பால், கோதுமை சேமியா கேசரியும் உண்டு.


கர்ப்பகால மற்றும் பாலூட்டும்தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துகளுடன் கூடிய உணவு வகைகளில், பன்னீர் டிக்கா, சாமை சிக்கன் பிரியாணி, சோள அடை, பூண்டு குழம்பு, பூண்டு சாதம், மதர்ஸ் ஸ்பெஷல் குழம்பு, ஏழு வகை எளிய பிரசவ கஷாயம், சுறா புட்டு, நெல்லிக்காய் தொக்கு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


மூலிகை உணவு வகைகளில் முடக்கத்தான் கீரை தோசை, பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல், முருங்கை சூப், சீரக சூப், ஆவாரம்பூ டீ, மணத்தக்காளி கீரை துவையல், உணவு வகைகளின் ருசியும், மணமும் அவற்றின் பயன்பாடும் கூறப்பட்டிருப்பது சிறப்பு. இந்த ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு

 

GO NO : 219 , Date : 02.12.2022

இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு


CONT.P.No.1355 of 2022 & BATCH COMPLIANCE ORDER - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Third Term - Ennum Ezhuthum Training Schedule & SCERT Proceedings

 



மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு 02.01.2023 முதல் 04.01.2023 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. 


எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி

15..12.22
16.12.22
17.12.22

மாவட்ட அளவிலான பயிற்சி

19.12.22
20.12.22
21.12.22

ஒன்றிய அளவிலான பயிற்சி

02.01.23
03.01.23
04.01.23

முன்னதாக பயிற்சி தொடர்பான மாநில மற்றும் மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்த SCERT PROCEEDINGS

Click here to join whatsapp group for daily kalvinews update 

இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக்கல்வித்துறை

 

அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


 இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS - இல் 16.12.2022 - க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலாக ( Indent ) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிற்பி திட்டம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்

 பள்ளி மாணவா்கள் மத்தியில் ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றை ஊட்ட சிற்பி திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.


சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய் ராம் கல்லூரியில் சிற்பி திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள 100 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம், தேசப்பற்றை ஊக்குவிக்கும் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன் கிழமை நடைபெற்றது.


இக்கருத்தரங்கத்தை தொடக்கி வைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் சிற்பி திட்டத்தை கடந்த 14-ஆம் தேதி ரூ 4.25 கோடி மதிப்பில் தொடக்கி வைத்தாா். முதல் கட்டமாக சிற்பி திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 5,000 மாணவா்களுக்கு புதன்கிழமைதோறும் பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. அதில் ஒழுக்கமுடன் திகழ்வதன் அவசியம் குறித்தும், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன.


இந்த செயல்திட்டத்தை வடிவமைத்துள்ள சென்னை காவல் துறை உயா் அதிகாரிகள் பாராட்டுக்குரியவா்கள் என்றாா் அவா்.


இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினாா். நிகழ்ச்சியில், சென்னை மாநகரக் காவல் ஆணையா் சங்கா் ஜிவால், ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையம் விஞ்ஞானி டில்லிபாபு ஆகியோா் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா்.

தமிழ் மொழி திறனறித் தேர்வு உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல்

 


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்று ரூ.36000/- ஊக்கத் தொகை பெறும் 1500 மாணவர்களின் விவரங்கள் வெளியீடு!


Tamil Mozhi Illakiya Thiranari thervu Scholarship Students List 2022 - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான (TRUST) தேர்வு மையங்கள் விவரம் வெளியீடு!

 

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது. தங்களால் தெரிவு செய்யப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் ( With Clubbing Schools ) இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.


 இத்தேர்விற்கு விண்ணப்பித்த தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குத் தேர்வு மைய விவரத்தினைத் தெரிவித்திடுமாறும் தேர்வுத்துறை கூறியுள்ளது.

DGE - TRUST Clubbing Schools.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

TRUST - தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 


TRUST - தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 02.12.2022 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான User ID / Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


 மேலும் , தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு ( TRUST ) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும் , தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


TRUST NR & HALL TICKET DOWNLOAD.pdf - Download here

முக்கியச் செய்தி: தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு!

 


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - முடிவுகள் வெளியீடு!


தேர்வர்கள் கீழ் உள்ள இணைப்பில் தங்களது பதிவு எண்,  பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.


Result Click here....



Click here to join whatsapp group for daily kalvinews update 

December 03 Spl CL for Disabled Employee - Leave Form & GO

 

GO NO : 72 , DATE : 26.05.2009

டிசம்பர் -03 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் சிறப்பு தற்செயல் விடுப்பு.

 December 03 Spl CL for Disabled Employee - Form & GO - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

TNSED APP - Ennum Ezhuthum FA ( b ) December Month Module 5 Enabled

 டிசம்பர் மாதத்துக்கான வளரறி மதிப்பீடு 5 TNSED ஆப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வெள்ளிக்கிழமை இன்று 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்படுத்தலாம்.

TNSED APP - Ennum Ezhuthum FA ( b ) December Month Module 5 Enabled - Click here



Click here to join whatsapp group for daily kalvinews update 

தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 


ஆசிரியர் நல நிதியம் - தமிழ்நாடு தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் .

தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . 


இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 31.12.2022 க்குள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து ஆணையர் , பள்ளிக்கல்வி , டி.பி.ஐ வளாகம் , கல்லூரிச் சாலை , சென்னை -06 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


CoSE - VOCATIONAL EDUCATION SCHOLARSHIP - TEACHERS WELFARE FUND REG.pdf - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 


சிறந்த பள்ளிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருது அளிக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


Best School List 2020 - 2021 Published ( District wise...) - Download here...


இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு சில அறிவிப்புகளை ஏற்கெனவே வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கென ரூ.7,500 கோடியில் பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, பள்ளிக் கல்வித் துறையில் ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


நிகழாண்டில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியா் மாணவா் நலன் சாா்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் கூடுதலாக சுமாா் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


க.அன்பழகன் சிலை: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆணையரக வளாகத்தில் (டிபிஐ) அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும். கற்றல் கற்பித்தல், ஆசிரியா் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவா் வளா்ச்சி என பன்முக வளா்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் பெயரில் விருது அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


டிசம்பா் 19-இல் பிறந்த தினம்: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 19-இல் தொடங்கியது. அப்போது, சென்னை நந்தனத்தில் உள்ள நிதித் துறை வளாகத்தில் மாா்பளவு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். நிதித் துறை வளாகத்துக்கு பேராசிரியா் க.அன்பழகன் மாளிகை என பெயரையும் சூட்டினாா். க.அன்பழகன் எழுதிய 42 நூல்களை நாட்டுடைமையாக்கி அதன் மூலமாக உரிமத் தொகையை குடும்பத்தினரிடம் வழங்கினாா்.


பிறந்த தின நூற்றாண்டு கொண்டாட்டம் நிறைவடையவுள்ள நிலையில், பள்ளிக் கல்வி ஆணையரக வளாகத்துக்கு க.அன்பழகன் பெயா் சூட்டப்பட்டுள்ளதுடன், சிலை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Best School List 2020 - 2021 Published ( District wise...)

 



2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பெயர் பட்டியல் வெளியீடு மாவட்ட வாரியாக

Best School List 2020 - 2021 Published ( District wise...) - Download here...


Dear BEOs the above ☝️list is the schools selected for best school awards under Elementary Education. The function will be on coming Saturday at Anna centenary library auditorium. I.e. on 3rd December. For each school one HM, one teacher and concerned BEO can attend the function. Please instruct concerned school Hms and BEO.


Click here to join whatsapp group for daily kalvinews update 

03.12.2022 (சனிக்கிழமை) - பள்ளி வேலை நாள் அறிவிப்பு - CEO Proceedings

 சென்னை மாவட்டப் பள்ளிகளுக்கு 03.12.2022 (சனிக்கிழமை) அன்று முழு வேலை நாள்!


Click here to join whatsapp group for daily kalvinews update 

PF ACCOUNT SLIP -NEW WEBSITE LINK

 


PF ACCOUNT SLIP -NEW WEBSITE

GPF Account Opening Form


Know your AISPF/GPF/TPF Status


GPF Interest Rates


Know your Pension Status


Download PPO Intimation


Download Revised Intimation


Download e-authorisation


Dearness Allowance rates


Documents Reqd. - Issue of Pay Slips - First Appointment

👇👇👇👇👇👇👇👇👇👇👇

CLICK HERE NEW WEBSITE LINK

Click here to join whatsapp group for daily kalvinews update 

பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கு ( DPI ) புதிய பெயர் - முதல்வரின் செய்தி அறிக்கை

 

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு , அவ்வளாகம் “ பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் ” என்றும் அழைக்கப்படும் - சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு :


Click here to join whatsapp group for daily kalvinews update 

NR EMIS Correction Date Extened

 


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு EMIS அடிப்படையில் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - 12.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!


NR EMIS Correction Date Extened.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update