பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2022


 திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்:அறன் வலியுறுத்தல்

குறள் : 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள்:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

பழமொழி :

Be still and have thy will.

அமைதியாய் இரு. விரும்பியதை பெறுவாய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 

2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்.

பொன்மொழி :

சிக்கல் என்னவென்றால், உங்களுக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். --ஜாக் கோர்ன்ஃபீல்ட்

பொது அறிவு :

1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்? 

ஜேம்ஸ் வாட்.

 

2. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
பாதரசம்

English words & meanings :

Urology - study of urine and it's tracts. Noun. சிறுநீர் மற்றும் அதன் பாதை குறித்த அறிவியல் படிப்பு

ஆரோக்ய வாழ்வு :

தொண்டை வலிக்கு முலேத்தி தேநீர் அதிசயங்களை செய்யும். ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு சிறிய துண்டு முலேத்தி வேரைச் சேர்க்கவும். இந்த கொதிக்கும் கலவையில் துருவிய இஞ்சியைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர், ஒரு கோப்பையில் கலவையை வடிகட்டி, ஒரு தேநீர் பையைச் சேர்த்து சாப்பிடலாம்.

NMMS Q :

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து ____________மீட்டர் உயரமுடைய பெரும்பாறை ஒன்றில் அமைந்துள்ளது 

விடை : 70

நவம்பர் 09


அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள்
அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[ 1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

நீதிக்கதை

புள்ளிமான்கள்

ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது. 

எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள். 

சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது. 

சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது. 

இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும். 

நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

இன்றைய செய்திகள்

09.11.22

* தமிழகத்தின் 17வது காட்டுயிர் காப்பகம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் அமைத்து அரசாணை வெளியீடு.

* 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

* தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள்: தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்.

* தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* பயங்கரவாதத்திற்கான நிதி தடுப்பு நடவடிக்கை: இந்தியா தலைமையில் அடுத்த வாரம் டெல்லியில் சர்வதேச மாநாடு.

* பருவநிலை மாற்ற உச்சி மாநாடு தொடக்கம் - 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் எகிப்தில் குவிந்தனர்.

* அண்டத்தின் 'வைல்ட் டிரிப்லெட்' எனப்படும் இரண்டு விண்மீன் மண்டலங்களின் புகைப்படத்தை  நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது.

* ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்: 12 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா.

* கேலோ இந்தியா கைப்பந்து: தமிழக பெண்கள் அணி சாம்பியன்.

Today's Headlines

* Tamil Nadu's 17th Wildlife Sanctuary: An GO is issued to set it at Dharmapuri, Krishnagiri.

*  Chief Minister M. K. Stalin has issued the Tamil Nadu Aerospace and Defense Industry Policy to provide employment to 1 lakh people in 10 years.

* 5093 relief camps are on standby: Information from Tamil Nadu Disaster Management Department.

 * The Government of Tamil Nadu has issued an ordinance to set up an expert committee to enact laws for the implementation of social justice principles at all levels in Tamil Nadu government affairs.

* To abolish Anti-terrorist financing action: India-led international conference will be held in Delhi next week under the heading of India 

 * Climate Change Summit kicks off - More than 100 world leaders gathered in Egypt

*  NASA's Hubble Space Telescope has captured a picture of two galaxies known as the 'Wild Triplet' of the universe.

 * Asian Boxing Championship: India secures 12 medals

 * KELO India Volleyball: Tamil Nadu Women's Team Champion.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Nov 14th - குழந்தைகள் தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல் - பள்ளி கல்வி ஆணையர் செயல்முறைகள்

 

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த போலவே குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது இவ்வாண்டும் 14.11.2022 அன்று அரசு விழாவாக கொண்டாடும் வகையில் , அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தி ,   பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட அனைத்துப் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

Carrier Guidance - ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 SCERT - Carrier Guidance.pdf - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

CRC Training Information - 12.11.2022

 CRC Training Information - 12.11.2022 -🇨 🇷 🇨    🇵 🇷 🇮 🇲  🇦 🇷 🇾  - 12.11.2022

  

ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) - கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற உள்ளது.


 🪴 CRC பயிற்சிக்கு,  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1-5 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் (Primary Teachers Only) அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.


🔥 BT's/ PG ஆசிரியர்களுக்கு கிடையாது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

TNPSC GROUP 2 RESULT PUBLISHED | TNPSC குரூப் 2 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

 

TNPSC GROUP 2 RESULT PUBLISHED | TNPSC குரூப் 2 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

ITK Training Module - 5

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பெயர்கள் CONTACT CELL NO'S மற்றும் அலுவலக விலாசம்

 தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பெயர்கள் CONTACT CELL NO'S மற்றும் அலுவலக விலாசம்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பெயர்கள் CONTACT CELL NO'S மற்றும் அலுவலக விலாசம் :

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

DEO Office Address updated -23.10.2022.pdf - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் இறுதி விடைக் குறிப்பு வெளியீடு!

 தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் இறுதி விடைக் குறிப்பு வெளியீடு!


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் இறுதி விடைக் குறிப்பு வெளியீடு!

TTSE - Final Key - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். 2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை:.

2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை:
➤ 10ம் வகுப்பு - 06.04.23 முதல் 20.04.23 வரை

➤ 11ம் வகுப்பு - 14.03.23 முதல் 05.04.23 வரை

➤ 12ம் வகுப்பு - 13.03.23 முதல் 03.04.23 வரை
நடைபெறுகிறது..














எண்ணும் எழுத்தும் - மழை விடுமுறையில் எவ்வாறு நடத்த வேண்டும் - மாநில கருத்தாளர் திருமதி கீதா அவர்களின் தெளிவான விளக்கம்

 

எண்ணும் எழுத்தும் நடைமுறையில் ஏதேனும் மழை போன்ற இடர்வரின் எதையும் நிறுத்தாமல் அல்லது தாண்டி செல்லாமல் சரியாக அதாவது முறையாக செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் ஒலிப்பதிவு


மாநில கருத்தாளர் திருமதி கீதா அவர்களின் தெளிவான விளக்கம்

👇👇👇👇👇👇👇👇

Click here to download voice msg file


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பண்பாடு, கலாசாரம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

 அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழர் பண்பாடு குறித்து, தொல்லியல் துறை வழியே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, மாதந் தோறும் பல்வேறு வகை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


இந்த வரிசையில், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறை வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.


இதற்கு, வருவாய் மாவட்ட வாரியாக, தலா, 40 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், 1,460 பேருக்கு, தொல்லியல் துறையின் நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிக்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


பண்டைய தமிழர் நாகரிகம், கலாசாரம், வாழ்வு முறை, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை, மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, வரலாறு பாடங்களில் தொல்லியல் சார்ந்த கருத்துகள் இந்த பயிற்சியில் இடம்பெறும்.


மேலும், எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துவது குறித்தும், இந்த பயிற்சியில் விளக்கப்படும் என, ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

இஸ்ரோவின் கல்வி திட்டத்தில் அரியலூர் அரசு பள்ளி மாணவர்

 இஸ்ரோவின் விண்வெளிக் கல்வித் திட்டத்தில் பங்கு பெற அரியலூர், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா உட்பட 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்றுமுதல் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேர் கடந்த ஆகஸ்டு மாதம் தேர்வுசெய்யப்பட்டனர். நாட்டின் 75-வதுசுதந்திர தினத்தை ஆண்டு முழுவதும்கொண்டாடும் விதமாக, இஸ்ரோ 75 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஏவும் மெகா திட்டத்தைசெயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தமிழகம் சார்பில், ‘அகஸ்தியர்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5,000 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் இருந்து 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதில், அரியலூர் மாவட்டம், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர். சிவதாணு, செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் ஆர்.எம். வாசகம், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த வகுப்புகளை ஆன்லைன் மூலம் எடுத்தனர். தேர்வு செய்யப்பட்ட 75 மாணவர்கள் இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ. நிலையங்களில் நேரடியாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் இன்று (நவ.2) பங்கேற்க உள்ளனர்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 


1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

அடுத்து அரசு பள்ளிகளுக்கு வருகிறது STEM AMBASSADOR திட்டம்!!!

 அடுத்து அரசு பள்ளிகளுக்கு வருகிறது STEM AMBASSADOR திட்டம்!!!

புதிய கல்விக் கொள்கையின் அடுத்த நிகழ்வு.

 

STEM ஒவ்வொரு 20 நடுநிலைப்பள்ளிகளுக்கும் ஒரு தன்னார்வலர் நியமனம்.

அவர் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒரு பள்ளியில் அடிப்படையான 30 அறிவியல் சோதனைகள் செய்வார்கள்.

அதை STEM App ல் பதிவேற்றம் செய்வார்.

அவர்களின் பெயர் STEM தன்னார்வலர் அல்ல.

அவர்களின் பெயர் STEM AMBASSADOR .

அவர்களுக்கு ஊதியம் அரசு தந்துவிடும்.


👇👇👇👇

STEM - District Level Instructions - Download here



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Std 3 - Term 2 - FA (b) - All Subjects - Surya

 


Topic  : Std 3 - Term 2 - FA (b) - All Subjects - Surya


File type   :   PDF


Medium  : Tamil Medium


Prepared By  : Surya Publications


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்


Click here to download pdf file


----------------------------------------------------------------------------------------------------------------------

Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya


Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya


4th STANDARD TERM II ALL SUBJECTS ALL UNIT FA(B) ACTIVITIES WORKSHEET (PDF) | 4 ஆம் வகுப்பு பருவம் 2 அனைத்துப் பாடங்கள் அனைத்து அலகுகளும் வளரறி மதிப்பீடு (ஆ) செயல்பாடுகள் பயிற்சித்தாள்கள்


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya

 

Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya


Topic  : Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya


File type   :   PDF


Medium  : Tamil Medium


Prepared By  : Surya Publications


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்


Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4ஆம் வகுப்பு தமிழ் அலகு 2 எல்லோரும் இப்படியே இருந்துவிட்டால் DICTATION WORDS

 

4ஆம் தமிழ் அலகு 2 எல்லோரும் இப்படியே இருந்துவிட்டால் DICTATION WORDS




4ஆம்வகுப்பு ஆங்கிலம் அலகு 2 DICTATION WORDS

 4ஆம்வகுப்பு ஆங்கிலம் அலகு 2 DICTATION WORDS


Click here to download pdf file





அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பை துவக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பை நவம்பர் 3வது வாரத்தில் துவக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Ennum Ezhuthum - November 2nd Week Lesson Plan ( Module - 4 )

 Ennum Ezhuthum - November 2nd Week Lesson Plan ( Module - 4 )


Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023 

Term 2

Module - 4

Ennum Ezhuthum -  November 2nd Week Lesson Plan - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

School Morning Prayer Activities - 04.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 04.11.2022

திருக்குறள் :

பால்: அறத்துப்பால், 

அ‌திகார‌ம் :அறன் வலியுறுத்தல்,

 குறள் :32 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

விளக்கம்:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை 

பழமொழி :

All art is but imitation of nature.

அனைத்து கலைகளும் இயற்கையின் பிரதிபலிப்பாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே.

 2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 

பொன்மொழி :

பொறுமையும் நேரமும் இரண்டு மிகவும் சக்திவாய்ந்த போர்வீரர்கள். --லியோ டால்ஸ்டாய்


பொது அறிவு :

1. மத்திய தரை கடலின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது எது ? 

 ஜிப்ரால்டர்

 2. ரோஸ் பிங்க் நகரம் என்று அழைக்கப்படுவது எது? 

 ஜெய்ப்பூர்.

English words & meanings :

Radiology - study of x-ray and it's medical applications. Noun. ஊடுகதிர் அல்லது எக்ஸ்ரே குறித்த மருத்துவ படிப்பு 
ஆரோக்ய வாழ்வு :

யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.



NMMS Q :

இரண்டாம் உலகப்போரின் போது பாராசூட்டுகளுக்கு கயிறாக பயன்படுத்தப்பட்ட செயற்கை இழை ______________ஆகும். 

 விடை: நைலான்

நீதிக்கதை


நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும், மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான். 

நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக்கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப்பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். 

அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும், தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். ஆனால், அந்தப் பிச்சைக்காரன், இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக்கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர். 

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், கடவுளின் அருளால் வைரக்கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன், பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து, மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்தப் பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்.

இன்றைய செய்திகள் - 04.11.22

* சென்னை - அண்ணா நகரில் 30 நிமிடத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, 10 நிமிடத்தில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

* பருவமழையின்போது எவ்வித தடையும் இல்லாமல் சீராக மின்விநியோகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 11 ஆயிரம்ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

* வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு: 55 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிப்பு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

* 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டு, சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* சவுதி அரேபியாவின் எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

* டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி.

* ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: பிரக்ஞானந்தா, நந்திதாவுக்கு தங்கம்.

* உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கங்களை வென்றுள்ளார்.
 
Today's Headlines


 * 4.5 cm of rain has been recorded in 30 minutes in Chennai - Anna Nagar.  Specifically, 2 cm of rain has been recorded in 10 minutes.

 * Electricity Minister Senthil Balaji  said  11 thousand additional workers have been appointed across Tamil Nadu to ensure smooth power distribution during monsoons.

* The Chennai Meteorological Department has warned that there is a possibility of very heavy rain in the delta districts of Tamil Nadu for the next 2 days.

*  Linking of Aadhaar Number with Electoral Roll:  Details of 55 Percent peoples were collected - Tamil Nadu Chief Electoral Officer Informed

கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்



கனமழை காரணமாக ,

* தஞ்சை ( பள்ளிகள் மட்டும்) 

* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்)

* திருவள்ளூர் ( ஆவடி,  பூந்தமல்லி,  பொன்னேரி,  திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்) 




* சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை 

கனமழை காரணமாக  புதுச்சேரி,  காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி,  சனி ) விடுமுறை

Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya

 

Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya


Topic  : Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya


File type   :   PDF


Medium  : Tamil Medium


Prepared By  : Surya Publications


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்


Click here to download pdf file