4- ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - காவல்காரர் - வினா - விடைகள்

 தமிழ் 

இரண்டாம் பருவம்

1. காவல்காரர் 

பக்கம் 3

பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.

விடை :  தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது. காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது. 

 காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

பக்கம் 4

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

  1. ‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….

 அ) பெயர் + இலாத         ஆ) பெயர் + இல்லாத        இ) பெயரில் + இல்லாத                   ஈ) பெயரே + இல்லாத 

விடை: 

 ஆ) பெயர் + இல்லாத 

 2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்………………… 

அ) கீழே ஆ) அருகில் இ) தொலைவில் ஈ) வளைவில்

அ) கீழே

 3. ‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது…………………… 

அ) உயிருள்ள பொருள் ஆ) உயிரற்ற பொருள் இ) இயற்கையானது ஈ) மனிதன் செய்ய இயலாதது

ஆ) உயிரற்ற பொருள்

4. அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….

 அ) அசைய இல்லை ஆ) அசைவில்லை இ) அசையவில்லை ஈ) அசையில்லை

விடை :  இ) அசையவில்லை 

 5. நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்……………………. 

அ) நாளும் ஆ) இப்பொழுதும் இ) நேற்றும் ஈ) எப்பொழுதும் 

விடை: அ) நாளும்

PREPARED BY THULIRKALVI TEAM

வினாக்களுக்கு விடையளிக்க

 1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்? 

விடை: தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

 2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?

விடை: காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?

விடை: பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.

 4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை? 

விடைகாவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.


விடை : 

1. சரிகை வேட்டை 
2. கறுப்புக் கோட்டு 
3. வெள்ளைச் சட்டை
4. சோளக் கொல்லைப் பொம்மை 
5. கனத்த மழை.

பக்கம் 5
பாடலைத் தொடர்ந்து பாடுவோமா?

மக்கள் ஒன்று கூடியே
மகிழ விரும்பும் திருவிழா 
குழந்தைச் செல்வம் யாவுமே
 கூடிஆடும் திருவிழா 
குமரிப் பெண்கள் யாவரும் 
கூடிமகிழும் திருவிழா
கடைத் தெருக்கள் முழுவதும் 
கலைகட்டும் திருவிழா.

பக்கம் 6
உரைப்ப குதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன? 

விடை:  பூ, காய், கனி, தண்டு 

2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது? 

விடை: வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது. .

 3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.

 விடை:  செவ்வாழை, பூவன் வாழை  

 4. வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

விடை:  வாழை + இலை

 5. பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக. 

விடை:  சிலவகை.

PREPARED BY THULIRKALVI TEAM

செயல் திட்டம்
உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும்
செய்திகளைத்திரட்டுக.

1. தோட்டத்தின் பெயர் 

விடை: இயற்கைத் தோட்டம். 

 2. உரிமையாளர் பெயர். 

விடை: சிவராமன்.

 3. தோட்டம் அமைந்திருக்கும் ஊர்

விடை:பருத்திப்பட்டு 

4. நீர்வசதி: கிணறு /அடிகுழாய்/ ஆறு/குளம். 

விடை: கிணறு. 

5. தோட்டத்தில் விளையும் காய்கறி/பழம் பெயரைக் குறிப்பிடுக.

 விடை:கீரை வகை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாதுளம் பழம், சப்போட்டாப் பழம்.

6. தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ஓரளவு/ வளர்ச்சி தேவை. 

விடை: நன்றாக உள்ளது.

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 3. யானைக்கும் பானைக்கும் சரி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 பக்கம் - 19

 வாங்க பேசலாம்

1. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையை உம் சொந்தநடையில் கூறுக.

 விடை :  மரியாதை இராமனிடம் வந்த விசித்திரமான வழக்கு இது. உழவரின் மீது அரபு வணிகர் தொடுத்த வழக்கு. ஓர் உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக அரபு வணிகர் ஒருவரிடம் யானையை இரவல் கேட்டார். அவரும் கொடுத்தார். ஊர்வலத்தின்போது யானை இறந்துவிட்டது. அரபு வணிகர் யானையைத் திருப்பித் தரும்படி கேட்கிறார். உழவரோ, “யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டதாகவும், மாற்றாக வேறு யானை வாங்கித் தருவதாகவும் அல்லது யானைக்குரிய விலையைத் தருவதாகவும் நான் கூறினேன். ஆனால் வணிகர் ஏற்றுக் கொள்ளாமல் அடம்பிடிக்கிறார்,” என்று கூறினார். 

 யானைக்கும் பானைக்கும் சரி உண்மையை அறிந்த மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்திற்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். பின்னர் உழவரைத் தனியாக அழைத்து, தான் ஆள் அனுப்பும்போது வந்தால் போதும் என்றார். பிறகு அவரிடம், “வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்” என்று கூறி அனுப்பி விட்டார். மரியாதை இராமன் கூறியபடி உழவர் செய்தார். வணிகர் உழவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்காக வேகமாக வந்து கதவைத் திறந்தார். பானைகள் விழுந்து உடைந்தன. உழவர் வணிகரிடம், “அப்பானைகள் காலங்காலமாக வைத்திருந்த பழம் பானைகள். இவற்றை உடைத்துவிட்டீரே, எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்,” என்று சத்தமிட்டார். வணிகர் செய்வதறியாமல் திகைத்தார். வணிகர் நடந்ததை மரியாதை இராமனிடம் கூறினார். மரியாதை ராமன் வணிகரிடம் “நீங்கள் இறந்துபோன யானையை உயிருடன் திருப்பிக் கேட்கிறீர். அவர் உடைந்த பழம்பானைகள் வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் பானையைக் கொடுத்தால் அவர் யானையைக் கொடுத்துவிடுவார்” என்று கூறினார். வணிகர் தன்னால் பழைய பானைகளைத் தரமுடியாது என்றார். மரியாதை இராமன் ”உங்களால் திருப்பித் தர முடியாது என்றால் அவரால் மட்டும் எப்படித் திருப்பித் தர முடியும்” என்றார். ஆதலால் யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது’ என்று தீர்ப்பளித்தார்.

 சிந்திக்கலாமா?

 உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?

 விடை : நான் அவனைச் சமாதானப்படுத்துவேன். என்ன நடந்திருந்தாலும் அவனிடம் உண்மை கூறிப் புரிய வைப்பேன். சினம் கொள்வதற்கான அவசியமில்லை என்று கூறுவேன். சினத்தை விடுத்து சிந்திக்க முயற்சி செய்யும்படி கூறுவேன். 

 வினாக்களுக்கு விடையளிக்க 

1. உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்? 

 விடை : உழவர், தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக யானையை இரவல் கேட்டார். 

 2. ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது? 

 விடை :  ஊர்வலம் சென்ற யானை இறந்துவிட்டது. 

3. மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்? 

 விடை :  மரியாதை இராமன் உழவரை தனியாக அழைத்து “நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டாம். அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். அவர் வரும்போது உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

 4. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?

 விடை : ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு. 

  பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக

 1. வணிகர் ………………. நாட்டைச் சேர்ந்த வர். 

 விடை : அரபு 

 2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர்…………. 

 விடை :  மரியாதை ராமன்

 3. திருமண ஊர்வலத்தில் …………….. இறந்து விட்டது. 

 விடை : யானை 

 4. பழைய …………. கீழே விழுந்து நொறுங்கின. 

 விடை :  பானைகள்




பக்கம் - 20 
சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.

 விடை :


 குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை உருவாக்குக.  பொருத்தமான தலைப்பிடுக. 

 நான்கு எருதுகள் – ஒற்றுமையாக வாழ்தல் – சிங்கம் – பிரிக்க நினைத்தல் – எருதுகள் எதிர்த்தல் – சிங்கத்தின் சூழ்ச்சி – எருதுகள் பிரிதல் – சிங்கம் வேட்டையாடுதல்.

 விடை :  ஒற்றுமையே பலம் ஒரு காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அவை நான்கும் வலிமையுடன் இருந்தன. அக்காட்டில் வாழ்ந்த சிங்கம் இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து, எப்படியாவது இவைகளைப் பிரித்துவிட வேண்டும் என்று எண்ணியது. 

முதலில் ஒரு எருதைக் கொல்லலாம் என்று சிங்கம் சீறிப் பாய்ந்தது. ஆனால் மற்ற எருதுகள் சேர்ந்து சிங்கத்தைத் தம் கொம்புகளால் குத்தித் தாக்கின. வலியால் துன்புற்ற சிங்கத்திடம் நரி வந்து பேசியது. தந்திரமாக எப்படியாவது நான்கு எருதுகளையும் பிரிப்பதாகக் நரி கூறியது. 

அதேபோல் ஓர் எருதிடம் சென்று “உன் வலிமையால்தான் சிங்கம் பயந்து ஓடியது. மற்ற எருதுகளால் இல்லை ” என்று கூறியது. இதேபோல் ஒவ்வொரு எருதிடமும் கூறியது. எருதுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பிரிந்தன. அச்சமயம் பார்த்து சிங்கம் ஒவ்வொரு எருதாய்க் கொன்றது. எருதுகள் ஒற்றுமையாய் இல்லாததால் கொல்லப்பட்டன. 

  குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?

 விடை :



 கூடுதல் வினாக்கள் 

 வினாக்களுக்கு விடையளிக்க. 

1. உழவர், மரியாதை இராமனிடம் என்ன கூறினார்?

விடை : “ஐயா, இரவலாக வாங்கிய யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது. அதற்குரிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது, வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், இந்த வணிகர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?” என்று வருத்தத்துடன் உழவர் கூறினார். 

2. உழவருக்கு மரியாதை இராமன் சொன்ன யோசனை யாது?

விடை :  வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தல். கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்தல். இவற்றைச் செய்தால் போதும் என்று உழவருக்கு மரியாதை இராமன் கூறினார். 

 3. மரியாதை இராமன் என்ன தீர்ப்பு அளித்தார்? 

விடை :  வணிகர் இறந்துபோன தனது யானையைக் கேட்டார். உழவர் உடைந்துபோன பானைகளைக் கேட்டார். இரண்டுமே திரும்பப் பெற முடியாதவை. இறந்துபோன யானை மீண்டும் உயிர்பெற்று வர இயலாது என்பதை மரியாதை இராமன் உணர வைத்தார். யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது என்று அவர் தீர்ப்பு அளித்தார்.

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 4. நன்னெறி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

  வாங்க பேசலாம் 


 1. பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ்க. 

 விடை : மாணவர்கள் தாங்களாகவே பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ வேண்டும். 

 2. உன்னிடம் பிறர் எப்படிப் பேச வேண்டும் என எண்ணுகிறாய்? ஏன்?

 விடை :என்னிடம் பிறர் இன்சொல் பேச வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் நாம் பேசும் இன்சொற்களால் அனைவரும் மகிழ்வர். பிறர் நம்மிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று எண்ணுகிறோமா அதேபோல் நாமும் பிறரிடம் பேசவேண்டும்.

 சிந்திக்கலாமா? 

 இன்சொற்களைப் பேசுவதால் நன்மையே விளையும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்தலாம்? 

 விடை : பிறர் மனதைப் புண்படுத்தாத சொற்களே இன்சொற்கள். நாம் எதிர்நோக்குபவர்களில் புதியவர், சிறியவர், பெரியவர், நண்பர், உறவினர் என எவராக இருந்தாலும் இனிமையாகப் பேசுதல் சிறப்பு. நலம் விசாரித்தல், உபசரித்தல் போன்றவையும் இன்சொல்லாகும். இன்சொல் பேசுவதனால் ஏற்படும் நன்மைகளை உணர்த்தும் கதைகளை, நிகழ்வுகளை நாம் பிறருக்குக் கூறலாம்.

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. ‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

 அ) இன் + சொல் ஆ) இனிமை + சொல் இ) இன்மை + சொல் ஈ) இனிய + சொல்

 விடை :ஆ) இனிமை + சொல் 

 2. ‘அதிர்கின்ற வளை’ – இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள்…………… 

அ) உடைகின்ற ஆ) ஒலிக்கின்ற இ) ஒளிர்கின்ற ஈ) வளைகின்ற

  விடை :ஆ) ஒலிக்கின்ற

 3. வியனுலகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. 

அ) வியன் + உலகம் ஆ) வியல் + உலகம் இ) விய + உலகம் ஈ) வியன் + னுலகம்

  விடை :அ) வியன் + உலகம் 

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. உலகம் எப்போது மகிழும்? – நன்னெறிப் பாடல் மூலம் உணர்த்துக.

 விடை :உலகம் மக்கள் பேசும் இன்சொற்களைக் கேட்டு மகிழும். 

 2. கடலின் அலைகள் எப்போது பொங்கி எழும்? 

 விடை :குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளியைக் கண்டு கடலின் அலைகள் பொங்கி எழும். 

பொருத்துக : 

1. இன்சொல் – கதிரவனின் ஒளி 

2. வன்சொல் – நிலவின் ஒளி 

3. அழல்கதிர் – கடுஞ்சொல்

 4. தண்ணென் கதிர் – இனிய சொல் 

 விடை : 1. இன்சொல் – இனிய சொல் 

2. வன்சொல் – கடுஞ்சொல்

 3. அழல்கதிர் – கதிரவனின் ஒளி

 4. தண்ணென் கதிர் – நிலவின் ஒளி 

 பக்கம் - 23
 குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக



சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக

விடை : 

1. குடை 
2. குவி 
3. குதி 
4. குதிரை 
5. குறை 
6. குவியல் 
7. குளி
8. குடம் 
9. குரல் 
10. குடல்

செயல் திட்டம்:

இனியவை கூறல் என்னும் திருக்குறள் அதிகாரத்திலுள்ள குறட்பாக்களை எழுதி வருக. 

விடை : 

 1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
      செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

 2. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
      இன்சொலன் ஆகப் பெறின். 

3. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
     இன்சொ லினதே அறம். 

4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
    இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

 5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
    அணியல்ல மற்றுப் பிற.

 6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
     நாடி இனிய சொலின்.

 7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
     பண்பின் தலைப்பிரியாச் சொல். 

8. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
     இம்மையும் இன்பம் தரும். 

9. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
     வன்சொல் வழங்கு வது.

 10. இனிய உளவாக இன்னாத கூறல் 
      கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 

  கூடுதல் வினாக்கள்

 வினாக்களுக்கு விடையளிக்க.

 1. நன்னெறி நூல் பற்றி எழுதுக.

விடை : நீதி நூல்களுள் ஒன்று நன்னெறி. இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினார். நாற்பது நேரிசை வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோர் உவமை மூலம் ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது இந்நூலின் சிறப்பாகும்.

2. இன்சொல் – வன்சொல், நன்னெறிப் பாடல் மூலம் விளக்குக. 

விடை :  கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்று நன்னெறி கூறுகிறது.

  பாடல் பொருள் பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்பதைப் புரிந்து செயல்படுக.

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 5. பனிமலைப் பயணம் - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 பனிமலைப் பயணம்


வாங்க பேசலாம்
பக்கம் - 26
 சிந்திக்கலாமா? 

 பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம், பேருந்திலும் செல்லலாம்… எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?

விடை :  நான் படகில் பயணம் செய்ய விரும்புவேன். 

காரணம் : சாலை வழிப் பயணம் என்பது எப்போதும் எளிதானது. வழக்கமாக நிகழும் ஒன்று. ஆனால் படகில் பயணம் செய்வது அரிதானது. சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது. படகில் பயணம் செய்யும்போது மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவும். பயணம் செய்வதற்கான சோர்வு இல்லாமல் இருக்கும். இவையே நான் படகில் பயணம் செய்வதற்கான காரணங்கள் ஆகும். 

  சிந்திப்போம்! எழுதுவோம்!
பக்கம் - 27

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது? 

அ) மெதுவாக ஆ) எளிதாக இ) கடினமாக ஈ) வேகமாக 

விடை :  அ) மெதுவாக 

2. “என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது…………….. அ) என்ன என்று ஆ) என்னென்று இ) என்னவென்று ஈ) என்னவ்வென்று 

விடை :  இ) என்னவென்று 

3. “அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………… 

அ) அந்த + காட்டில் ஆ) அ + காட்டில் இ) அக் + காட்டில் ஈ) அந்தக் + காட்டில்

 விடை : ஆ) அ + காட்டில் 

 4. “என்னவாயிற்று” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) என்ன + ஆயிற்று ஆ) என்னவா + ஆயிற்று இ) என்ன + வாயிற்று ஈ) என்னவோ + ஆயிற்று 

விடை : அ) என்ன + ஆயிற்று 

  வினாக்களுக்கு விடையளிக்க 

  1. படகில் செல்லும்போது, விலங்குகள் ஏன் திடீரென அலறின? 

விடை :  விலங்குகள் படகில் செல்லும்போது, திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது. அதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததனால் விலங்குகள் அலறின. 

 2. நரி, முதலையிடம் என்ன கூறியது? 

விடை :  “இதற்கு முன் ஒரு முதலை, விலங்குகளைச் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்துவிட்டது.” “விஷ முறிவுச் செடிகளை நாங்கள் தின்றுள்ளதால், எங்களை யார் கடித்தாலும் அவர்கள் இறந்துவிடுவர்” என்று நரி முதலையிடம் கூறியது. 

  3. இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்? 

விடை : எனக்குப் பிடித்த விலங்கு நரி. ஏனெனில் நரி தன் தந்திரத்தால் உடனிருந்த அனைத்து விலங்குகளையும் காப்பாற்றியது. 


 உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக



மொழியோடு விளையாடு 

 கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. 
உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.

அகர வரிசைப்படுத்துக 

 மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மௌவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய். 

 மைதானம், முறுக்கு, மோப்பம், மகிழ்ச்சி, மௌவல், மாதம், மொழி, மீன், மேகம், மெத்தை, மிளகு, மூட்டை




Click here to Join WhatsApp group for Daily kalvi news