திருக்குறள் :
"பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: வான் சிறப்பு
குறள் : 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
பொருள்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்."
பழமொழி
"Nothing is impossible to a willing mind.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு."
இரண்டொழுக்க பண்புகள் :
1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன்.
2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.
பொன்மொழி :
தனி நபர்களை ஒருவர் கொல்வது எளிது. ஆனால், அவர் கூறிய கருத்துகளை யாராலும் கொல்ல முடியாது - பகத்சிங்
பொது அறிவு :
1. பலூனை கண்டுபிடித்தவர் யார்?
ஜேக்கஸ் ஜோசப் மாண்ட்கோல்பையர்.
2.தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது?
தஞ்சாவூர்.
ஆரோக்ய வாழ்வு :
"கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. எனவே பச்சையாக கேரட்டை சாப்பிடுவது, முகப்பருவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சருமத்தை சுத்தமாகவும், செல் உருவாக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்."
English words & meanings :
Ento-mo-logy - study of insects. Noun. My friend is much interested in entomology as he is a farmer. பூச்சிகள் குறித்த ஆய்வு. பெயர்ச் சொல்
NMMS Q 75 :
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 3, 4, 12, 48,_________. விடை: 576. விளக்கம்: 3x4 = 12; 4X12 = 48; 12x 48 = 576
நீதிக்கதை:
ஒட்டகத்தைக் கொன்ற காகம்
ஒரு மிகச் சிறிய காட்டில் மதோற்கடன் என்ற பெயரை உடைய சிங்கராஜா தனக்கு மந்திரிகளாக நரி, புலி, காகம் ஆகிய மூன்றையும் வைத்துக்கொண்டு அரசாட்சி நடத்தி வந்தார்.
ஒரு நாள் அந்தக் காட்டு வழியாக வழி தவறி ஓர் ஒட்டகம் வந்தது. காககம் ஒட்டகத்தைப் பார்த்து அதிகாரமாக யார் நீ என்று கேட்டது. ஒட்டகம் பயந்து போய் வழி தவறி இந்த காட்டுக்குள் வந்து விட்டேன் தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று காகத்திடம் கேட்டது.
உடனே காகம் ஒட்டகத்தை சிங்கராஜாவிடம் அழைத்துச் சென்றது. சிங்கராஜா! ஒட்டகத்திடம் இனி நீ இந்த காட்டில் வசிக்கலாம் என்றும், உன்னை என் மந்திரிகளுள் ஒருவராக நான் சேர்த்துக் கொள்கிறேன் என்றும், இனிமேல் உன்னுடைய பெயர் மந்தானகன் என்றும் பெயர் வைத்தது.
ஒரு நாள் சிங்கராஜாவுக்கு உடல் நலம் சரியில்லை. இன்று நீங்கள் நால்வரும் சென்று வேட்டையாடி எனக்கு உணவு கொண்டு வாருங்கள். நான் உண்ட பின்னர் மீதமுள்ள உணவினை நீங்கள் உண்ணுங்கள் என்று கட்டளையிட்டது. நான்கும் ராஜாவுக்கு உணவு தேடி காட்டுக்குள் அலையோ அலை என்று அலைந்தன. ஆனால் ஓர் இரையும் அகப்படவில்லை.
உடனே, காகம் ஒரு திட்டம் போட்டது. இந்த ஒட்டகம் சைவம். நாம் ஏன் இந்த ஒட்டகத்தையே இன்றைய இரையாக வைத்துக் கொள்ளக்கூடாது? என்று யோசித்தது. பின் ஒட்டகத்தை மட்டும் ஒரு வேலை கொடுத்து தனியே அனுப்பி விட்டு காகம், நரியிடமும் புலியிடமும் தன் திட்டத்தைக் கூறியது. ஒட்டகம் திரும்பி வருவதற்குள் காகமும் நரியும் புலியும் சிங்கராஜாவிடம் சென்றன. ராஜா! இன்று இந்தக் காட்டுக்குள் எங்கு தேடியும் எந்த இரையும் கிடைக்கவில்லை என்றது காகம்.
மேலும் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு யாராவது நெய் தேடுவார்களா? என்றது காகம். அந்த வெண்ணெய் வேறு யாருமில்லை நமது புதிய மந்திரியான ஒட்டகம்தான் அது! என்றது காகம். ஆ! அது எப்படி முடியும்? அது என்னுடைய அடைக்கலப் பொருள் என்றது சிங்கம்.
அதற்கு காகம், ராஜா! ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு நபரை இழக்கலாம். ஒரு கிராமத்தைக் காப்பாற்ற அந்தக் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற அந்த நாட்டிலுள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம். ஆதலால், இது தவறில்லை என்று அதே சாஸ்திரங்கள்தான் சொல்லியுள்ளன! என்றது காகம்.
சிங்கராஜா ஒட்டகத்தைக் கொல்ல சம்மதிக்கவில்லை. ராஜா அவர்களே! அந்த ஒட்டகமே தங்களிடம் வந்து, என்னைக் கொல்லுங்கள் என்று கூறினால், தாங்கள் அதனைக் கொல்லச் சம்மதிப்பீர்கள் தானே! என்றது காகம்.
ஆமாம் என்றார் சிங்கராஜா. அப்போது, இவர்களைத் தேடி அந்த ஒட்டகம் வந்தது. ஒட்டகம் அருகில் வந்ததும் காகம் தந்திரமாக, ராஜா! இன்று உங்களுக்கு எங்குமே இரை கிடைக்கவில்லை. தாங்கள் இன்று பசியுடன் இருப்பதை என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. ஆதலால், தாங்கள் என்னைக் கொன்று தங்களின் பசியினைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று காகம் கூற சொன்னதும் ஒட்டகமும் அதை கூறி தழுதழுத்தது.
நீ எனக்கு ஒருவாய் உணவாக அல்லவா அமைந்து விடுவாய் என்றது சிங்கராஜா. உடனே, நரி, ராஜா அப்படியானால் தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்று போலிப் பணிவு காட்டியது. மிகவும் சிறியவன். என் பசிக்கு நீ பயனற்றவன் என்று அதையும் மறுத்தது சிங்கராஜா. உடனே புலி, அப்படியானால் ராஜா, தாங்கள் என்னைக் கொல்லலாமே! என்று நடித்தது. நீ பருத்தவனாக இல்லை. ஆதலால், நீயும் என் பசிக்கு ஏற்றவனில்லை என்றது சிங்கராஜா.
மூவரும் ராஜாவுக்காக போட்டி போட்டுக்கொண்டு தங்கள் உயிரைத் தர முன் வந்ததில் மனம் நெகிழ்ந்து போன ஒட்டகம், ராஜா! இந்தக் காட்டில் நான்தான் உயரமானவன். பருத்தவன். நான் உங்களின் பசிக்கு ஏற்றவன். தாங்கள் தான் இந்தக் காட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். தங்களின் பசியைப் போக்கும் நல்ல காரியத்தை, நான் என் உயிரைக் கொடுத்தாவது செய்வேன். ஆதலால், தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்றது. உடனே நரியும் புலியும் ஒட்டகத்தின்மீது பாய்ந்து அதனைக் கொன்றன.
நீதி :
தீயவர்களின் கைகளில் அகப்பட்டுக் கிடப்பதைக் காட்டிலும் அதனோடு சண்டையிட்டு மடிவதே சிறந்தது.
இன்றைய செய்திகள் - 14.10.22
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு.
கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் கல்வித் தகுதியில் சமரசம் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.
எம்பிபிஎஸ் வகுப்புகளை நவம்பர் 15-ம் தேதி தொடங்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.
பருவமழையால் பாதிக்கப்படாத வகையில், 11 லட்சம் டன் நெல்லை சேமிக்க கிடங்குகள் தயார் நிலையில் உள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மெய்டன் பார்மா நிறுவனத்தின் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம் - ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூ.6,600 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி என்று ரஷ்ய அதிகாரி எச்சரித்துள்ளார்.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: 8-வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.
ஐநாக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு - ஒப்பந்தம் கையெழுத்து.
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
Today's news
Crackers restriction on Diwali: Chennai Police important announcement.
No compromise on academic qualification in appointment of college professors: High Court orders.
National Medical Commission orders to start MBBS classes on November 15.
Food Minister Chakrapani has said that the warehouses are ready to store 11 lakh tonnes of paddy so that it is not affected by monsoon rains.
Maiden Pharma Stops Cough Medicine Production - Haryana Health Minister Notification
The Union Cabinet yesterday approved the allocation of Rs 6,600 crore for development projects in the North Eastern states.
A Russian official has warned that if Ukraine joins NATO, World War III is certain to break out.
Women's Asia Cup Cricket: Team India enters the final for the 8th time.
T20 World Cup Cricket Matches Live Broadcast at INOX Cinemas - Signing of Agreement.
Tamil Nadu team registered their first victory in the Syed Mushtaq Ali Cup cricket tournament.
Prepared by
Covaiwomenict_ போதிமரம்