தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழக அரசின் பள்ளிகல்விதுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


அதன்படி,


1. பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.


 2. சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.


 3. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.


4.  மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது.


 5.சத்துணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.


 6.  பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் மாணவர்களுக்கு"வழங்கப்பட வேண்டும்.


 7.  பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.


8.   ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. 


9.  மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைக்காக பள்ளியை விட்டு வெளியே அனுப்பக் கூடாது. 


10.  ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-இல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்


மேலும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.71% மாணவர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம். 

பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.அவர்களும் மேற்கூறிய இணையதளங்களிலேயே தேர்வு முடிவை அறியலாம். 
இந்நிலையில் பிளஸ்-2 மத்திய பாடப்பிரிவுக்கான (சிபிஎஸ்இ) தேர்வு முடிவு தாமதத்தால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. பின்னர் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

 சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 98.83% பேர் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதல் இடத்தை பெற்றுள்ளது. பெங்களூரு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.


முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில சொற்களஞ்சியம்

முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில சொற்களஞ்சியம்


Temporary Post - Selected Teachers List

பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி அரசு தொடக்க / மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள நடுநிலை / உயர் நிலை / இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதி மன்ற வழக்கு எண் . WP.No.16704 / 2022 மீதான இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் படி தற்காலி நியமனத்திற்கான ஒப்புதல் அளித்து ஆணை வழங்குதல் சார்பாக தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

இணைப்பில் காண் பட்டியலில் படி ஏற்பளிக்கப்பட்ட தற்காலி நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு ஒப்புதல் அளித்து தற்காலிக நியமனம் பெற்றவர்கள் 20.072022 பணியில் சேர்த்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது . தற்காலிக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கையினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்திட சார்ந்த தெரிவிக்கப்படுகிறது.


 பள்ளித்தலைமையாசிரிகளுக்கு இணைப்பு - தற்காலிக நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள் விவரம்


Temporary  Post - Selected Teachers List - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மாதந்தோறும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஏப்ரல் ஜுலை மாதங்களில் நடைப்பெற்றுள்ளது . இந்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் புதிய உறுப்பினர்களைக் கொண்டு மாதந்தோறும் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்படுகிறது.


Co-Proceedings of SMC Meeting Guidelines by CoSE, DEE & SPD - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி ஆகஸ்ட் மாதம் 19, 20 & 21 (ஏதேனும் ஒரு நாள்) தேதிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.


Ennum Ezhuthum - July 4th Week Lesson Plan ( July 25 - 29 ) -2022-23

Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023


Ennum Ezhuthum - July 4th Week Lesson Plan 




இல்லம் தேடி கல்வி App New Update 0.41- Direct link

இல்லம் தேடி கல்வி App New Update-0.41 direct link


Update செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk 



Click here to Join WhatsApp group for Daily kalvi news

Palli Paarvai TNSED Administrators App - New User Manual

இனி வரும் நாட்களில் விடுப்பு மற்றும் பள்ளி ஆய்வுகள் இவ்வாறு தான் இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்கும் இது பொருந்தும்.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2022 - School Morning Prayer Activities.





திருக்குறள் :

குறள் எண் – 988

பால் – பொருட்பால்

இயல் – குடியியல். இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.


விளக்கம்:

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.


பழமொழி :

It is hard to please all parties.
ஒருவருக்கு சாதகம் என்றால் மற்றொருவருக்கு பாதகம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய் 

2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்

பொன்மொழி :

பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்....ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1.நம் உடலில் உள்ள எந்த உறுப்பை மூளை அதிகமாக வேலை வாங்குகிறது? 

நம் இரண்டு கைகளிலும் உள்ள கட்டை விரல்களை. 

2. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது? 

ஈசல்.




English words & meanings :

be·hold·en - owing gratitude to another, indebted, Adjective:கடமைபடுதல். பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

சோயா சங்க் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சோயா துண்டுகள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளன, இது உடலில் சரியான செரிமானத்திற்கு அவசியம்.

சோயா துண்டுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

NMMS Q 29:

வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகைபுரிந்த கடைசி ஐரோப்பிய நாடு எது? 

விடை: பிரான்சு

நீதிக்கதை

மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.


இன்றைய செய்திகள்

21.07.22

📍நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு 7 கேள்விகளை எழுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

📍22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ்.

📍டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

📍இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

📍வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

📍உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது.

📍கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

📍இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Today's Headlines

📍Minister M. Subramanian has said that the central government has raised 7 questions regarding the NEET exemption bill.

 📍CITU union gives strike notice to transport managements pressing 22 demands.

 📍The central government has approved to start procuring short grain paddy in the delta districts from September 1.  The farmers of Delta district have thanked the Tamil Nadu government and the central government for this.

 📍Among those who migrated abroad from India, 1.63 lakh people renounced Indian citizenship in 2021.  Of these, 78,000 have acquired US citizenship.

 📍The Ministry of Commerce has issued new guidelines for working from home.

 📍The list of the world's most powerful passports has been released.  Among these, the Japanese passport is at the top.  The Indian passport is ranked 87th.

 📍The date of the Asian Games, postponed due to the spread of Coronavirus, has been announced.

 📍South Africa won the first ODI against England by 62 runs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

பிளஸ் 2 துணை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

 பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 துணை தேர்வு வரும் 25ம் தேதி துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

செய்முறை தேர்வுக்கான தேதி விபரத்தை, தனித் தேர்வர்கள், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, அறிந்து கொள்ள வேண்டும்.உரிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு இன்றி எந்த தேர்வரும், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர உத்தரவு.

மாவட்ட மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 20.07.2022 பிற்பகல் பழைய பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்டு, 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.