மாணவர் சேர்க்கை ஆசிரியர்களின் பணிகள் என்ன? - Director Proceedings

பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள்

- அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து 5+ வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வீடுதோறும் நேரடியாக சென்று (Door to door canvas) சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 



* பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5+ வயதுடைய

குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சேர்க்க (Spot Admission) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5+ மாணவர்களை 100% அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரின் தலையாய கடமையாகும் பள்ளியின் சாதனைகள், வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் வாயிலாக பெற்றோர்களிடம் எடுத்து கூறலாம். - பள்ளிகளில் உள்ள திறன் வகுப்பறைகளின் (Smart Class) செயல்பாடுகள் பற்றியும் விரைவுத் துலங்கல் குறியீடு (Quick Response Code) வழியாக பாடக் கருத்துகள் எளிமையாக்கப்பட்டு கற்றல் செயல்பாடு நடைபெறுகின்றது என்பதைப் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூற வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணைய வழி (Online class) பாட கற்பித்தல் பற்றியும் புலனக்குழு (Whatsapp Group) வழி ஆசிரியர்-மாணவர் பாட பரிமாற்றங்கள் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தெரிவித்தல் வேண்டும்.


* மாணவர்கள் சேர்க்கை பற்றி சமூக வலைதளங்களில் ஆடியோ / வீடியோ பதிவுகள் இடம் பெறச் செய்யலாம். பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம்.







18.6.2022 CRC TRAINING QUIZ QUESTION AND ANSWERS

எண்ணும் எழுத்தும் களங்கள் - PICTURES

+2 தேர்வு முடிவு TLM - ஐ ஆன் - லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான தேர்வுத்துறையின் அறிவுரைகள்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை -6 – 2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலைப் பொதுத் தேர்வுகள் - மே 2022 , தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) – அனைத்துப் பள்ளிகளும் ஆன் - லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பான செயல்முறைகள்.




IMG_20220617_124251



கல்வித்துறையில் மாற்றம் தொடக்க, மேல்நிலையை பிரிக்க முடிவு

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாற்றம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

 தனியார், உதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல், உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் பெறுதல் போன்று அனைத்திற்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து வருகிறது. இதை மீண்டும் பழைய முறைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

நர்சரி, தொடக்க, நடுநிலை பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உயர், மேல் நிலை பள்ளிகளை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலரை நியமிக்க உள்ளது. அதே போன்று பள்ளி அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல் போன்றவற்றிற்கு அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் இணை இயக்குனருக்கே செல்கிறது. இதற்காக தமிழக அளவில் 9 மண்டலங்களை ஏற்படுத்தி மண்டலத்திற்கு ஒரு இணை இயக்குனரை நியமிக்க உள்ளனர்.

மதுரையில் இன்று (ஜூன் 18) முதல் 25 வரை கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான கருத்தரங்கு நடக்க உள்ளது.அதில் இந்த மாற்றத்தை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசிக்க உள்ளனர்.

 ஜூலை 'முதல் தமிழகத்தில் மீண்டும் தொடக்க கல்வி, மேல்நிலை கல்வியை தனியாக பிரித்து நிர்வகிக்கும் அறிவிப்பை அரசு வெளியிடும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்கக்கல்வித்துறை மலை சுழற்சி பொது மாறுதல் அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதலின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.




IMG-20220617-WA0009

IMG-20220617-WA0010

IMG-20220617-WA0010

IMG-20220617-WA0007


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி 7 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது. தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டது. மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவதால் ஓராண்டு கட்டாய பணி அமல்படுத்தப்பட்டுள்ளது.

CRC TRAINING - Online Link ( 18.06.2022 )

IMG_20220617_232251

(18.06.2022)  நடைபெறவுள்ள CRC TRAINING - ல் பங்குபெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த link- ஐ பயன்படுத்தவும்.

https://linktr.ee/CRC1

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

எண்ணும் எழுத்தும் - HandBook Guide For Teachers / TLM List / நான்கு களங்கள் / Animal Mask

1 - 3rd எண்ணும் எழுத்தும் -Hand Book Guide For Teachers -Tamil - Click Here


1 - 3rd எண்ணும் எழுத்தும்-HandBook Guide For Teachers- English- Click Here


1 - 3rd எண்ணும் எழுத்தும்- Hand Book Guide For Teachers -Maths -Click Here


எண்ணும் எழுத்தும் - Hand Book Guide For Teachers - மொட்டு - Click Here


எண்ணும் எழுத்தும் - Hand Book Guide For Teachers - அரும்பு - Click Here


எண்ணும் எழுத்தும் - Hand Book Guide For Teachers - மலர் - Click Here


மாணவர்கள் விளையாட விலங்குகள் மாஸ்க் - Animal Mask - Click Here


நான்கு களங்களுக்கான படங்களுடன் கூடிய தலைப்புகள் - Click Here


எண்ணும் எழுத்தும் - TLM List - Tamil - Click Here


எண்ணும் எழுத்தும் - TLM List - English - Click Here


எண்ணும் எழுத்தும் - TLM List - Maths - Click Here




 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

இல்லம் தேடி கல்வி.. கூகுள் செயலி உதவியுடன் 263கோடி சொற்கள் வாசித்து அசத்திய மாணவர்கள்

Reading Marathon: கூகுள் செயலி உதவியுடன் மாணவர்கள் வாசித்த 263 கோடி சொற்கள் வாசிக்கும் திறன் மேம்பட உதவியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 1.81 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை காலத்தில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக 12 நாட்கள் ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டி நடைபெற்றது.

 




சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் ' கூகுள் ரீட் அலாங்க் ' ( Google read along ) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கைபேசி செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை மாணவர்கள் வாசித்து உள்ளனர் .

வாசிப்புப் பழக்கத்தைத் மாணவர்களிடையே ஏற்படுத்திடும் வகையில் இந்த நிகழ்வில் 18.36 லட்சம் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் . மாணவர்கள் 12 நாட்களில் 263.17 கோடி சொற்களை சரியாக வாசித்துச் சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மொத்தம் 9.82 லட்சம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்து உள்ளனர்.

இதுகுறித்து, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் பேசிய இல்லம் தேடி கல்வித்திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத்,  தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த சாதனையை செய்வதற்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் , ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மிகப்பெரிய ஊக்க சக்தியாக திகழ்ந்துள்ளதாக தெரிவித்தார் .


413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 லட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் 49.19 லட்சம் மற்றும் மேலூர் வட்டாரம் 41.72 லட்சம் ஆகியவை இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெற்றுள்ளதாக கூறிய அவர்,
நுண்ணறிவு செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்வு மாணவர்கள் வாசகங்களை வாசிக்கு திறனை மேம்படுத்தியிருப்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக கூறினார்.

முதலில் சொற்களை வாசிப்பதில் தடுமாற்றமாக இருந்த மாணவர்கள் தற்பொழுது தடையின்றி வாசித்து, பாராட்டுகளை பெற்று வருவதகவும் அவர் தெரிவித்தார்.

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது?

மலை சுழற்சி மாறுதலானது 2021-2022ல்  விடுபட்ட பதவிகளுக்கு மட்டும் நடைபெறவுள்ளது.

40% உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மலை சுழற்சியிலிருந்து விலக்கு வழங்கப்படவுள்ளது.

2021-22 கலந்தாய்வுக்கு முந்தய காலிப்பணியிடங்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

அனேகமாக நாளையோ அல்லது வெள்ளியன்று அறிவிப்பு வெளியாகி சனியன்று கலந்தாய்வு நடைபெறும் எனத்தெரிகிறது...

இதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள... ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகளும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடக்குறிப்பு ஆசிரியர் சுயவிவரம் - மாதிரி -Bio-Data Lesson plan Bio- Data(2022-2023)

Lesson plan Bio- Data(2022-2023)