பள்ளிகள் திறப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன.

 பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

இது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.

 பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது. பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வி கொள்கை: வரும் 15ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். 

அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்தது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

 இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், மாநில கல்வி கொள்கையை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். 

கல்வி கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் : அமைச்சர் அறிவிப்பு

கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், எல்கேஜி , யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. 

எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.இதற்க்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் . 

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த்துள்ளார் .

எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார் .

பல்வேறு தரப்பு கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் முதன்மைச் செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை...pdf

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் முதன்மைச் செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை...pdf

Click here to download pdf file 

ஈடு செய்யும் விடுப்பு விண்ணப்பம்-PDF

ஈடு செய்யும் விடுப்பு விண்ணப்பம்-PDF

ஈடு செய்யும் விடுப்பு குறித்து வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணை

ஈடு செய்யும் விடுப்பு குறித்து வழிக்காட்டு நெறிமுறைகள்

G.O-62- DATED-13.03.2015-பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு

GO.62 SCL EDN DEPT DATED.13.03.2015 - SPECIAL CL FOR PRIMARY & MIDDLE SCHOOL TEACHERS REG ORDER CLICK HERE..

கோடைக் கொண்டாட்டம் - சிறப்பு பயிற்சி முகாம் - அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

கோடைக் கொண்டாட்டம் - சிறப்பு பயிற்சி முகாம் - அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

IMG_20220607_180940

GO NO : 101 , DATE : 03.06.2022 - Download here...

ஆணை : 

2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்ன பொழுது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளார் ; 13 , கோடைக் கொண்டாட்டம் சிறப்புப் பயிற்சி முகாம் : " மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் , கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும் , கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தளங்களில் நடத்தப்படும் . பள்ளிப் பாடங்களைத் தவிர்த்து சூழலியல் , தலைமைத்துவம் , மனித உரிமை , சமூக நீதி , பெண்ணுரிமை மற்றும் எதிர்காலவியல் போன்ற பொருண்மைகளில் ரூ .50 இலட்சம் மதிப்பீட்டில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

விடுமுறை நாட்களில் பணி செய்தால் ஈடுசெய் விடுப்பு (Compensatory Holiday) எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான பொது (பல்வகை)த் துறையின் அரசாணை 2218, நாள் : 14.12.1981...

விடுமுறை நாட்களில் பணி செய்தால் ஈடுசெய் விடுப்பு (Compensatory Holiday) எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான பொது (பல்வகை)த் துறையின் அரசாணை 2218, நாள் : 14.12.1981...

.

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் (LKG, UKG வகுப்புகள்) - பள்ளிக்கல்வித்துறை முடிவு

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்  (LKG, UKG வகுப்புகள்) - பள்ளிக்கல்வித்துறை முடிவு

பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்களுக்கு இந்த வகுப்புகள் தான் - அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் தகவல்.
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், 

மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், திட்டமிட்டபடி வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் திறப்பு தேதியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-32-ஆம் கல்வி ஆண்டுக்காக வரும் 13-ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 13-ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மாணவ, மாணவிகளுக்கு நல்லது, கேட்டது எடுத்துச்சொல்ல முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும். இதன்பிறகு, மற்ற வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். இதனால் மாணவர்கள் கட்டாயம் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், ஜூலை, செப்டம்பர் மாதம் அடுத்தடுத்த தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்படும் வரும் தேர்வுகளில் மாணவர்கள் அப்சென்ட் ஆகாமல் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு Maths முதல் பருவம்

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு Maths முதல் பருவம்

Click here to download 

எண்ணும் எழுத்தும் - ஆசிரியர் கையேடு பருவம் 1 - English

எண்ணும் எழுத்தும் - ஆசிரியர் கையேடு பருவம் 1 - English 

Click here  to Download

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் 5 நாட்களும் TNSED Mobile App மூலம் Training Attendance பதிவு செய்ய

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் 5 நாட்களும் TNSED Mobile App மூலம் Training Attendance பதிவு செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்

முதலில் App - update செய்ய வேண்டும்

நேற்றுடன் கோடை விடுமுறை நிறைவு - இன்று முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் இறுதி தேர்வுகள் முடிந்து, மே, 14 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில், மே, 20 வரை, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். அவர்களுக்கு, மே, 20 முதல் ஜூன், 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.இரண்டு வார விடுமுறையே முடிந்த நிலையில், விடுமுறை நாட்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள், இன்று முதல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள எண்ணும், எழுத்தும் என்ற மாணவர்களுக்கான எழுத்தறிவித்தல் திட்டம், 13ம் தேதி முதல்வரால் துவங்கப்பட உள்ளது. அதற்கு முன், ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

இதனால், கோடை விடுமுறையை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில், இன்று முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு தமிழ் முதல் பருவம் | Ennum Ezhuthum - Tamil 1st Term Teachers Guide

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு தமிழ் முதல் பருவம்

மாற்றுச் சான்றிதழ் (Student Transfer Certificate )வழங்கும் வசதி தற்பொழுது EMIS -யில் வழங்கப்பட்டுள்ளது

மாற்றுச் சான்றிதழ் (Student Transfer Certificate )வழங்கும் வசதி தற்பொழுது EMIS -யில் வழங்கப்பட்டுள்ளது . Terminal class only