`ஒரு மாணவர் கூட இல்லாத 22 அரசுப் பள்ளிகள்’ - தொடக்கக் கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல்
Flash News : 7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
DEO அந்தஸ்தில் உள்ள 4 பேருக்கு, CEO ஆக பதவி உயர்வு. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
* மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட CEO - க்கள் மாற்றம்
* தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட CEO - ஆக நியமனம்.
* புதுக்கோட்டை CEO சத்தியமூர்த்தி , தஞ்சை மகாராஜா சரபோஜி சாஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக மாற்றம்.
* திருவள்ளூர் CEO ஆறுமுகம், பாடநூல் கழக துணை இயக்குநராக மாற்றம்.
* நாமக்கல் , உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு DEO - க்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி CEO - ஆக நியமனம்.
ITK - Reading Marathon வாசித்தல் பயிற்சியினை சிறப்பாக செயல்படுத்த சில ஆலோசனைகள்!
அதற்காக நீங்கள் Read Along செயலியை டவுன்லோட் செய்து உங்களது ஒன்றியத்தினை பதிவு செய்து( *ஒருமுறை block code கொடுத்து பதிவு செய்து விட்டால் அதை எக்காரணம் கொண்டும் ரீடிங் மாரத்தான் முடியும் வரை delete செய்து விடக்கூடாது* ), மாணவர்களைக் கொண்டு வாசிக்கும் பயிற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.
🔴ஒருவேளை மாணவர்கள் விடுமுறையில் வெளியூர்களுக்குச் சென்றிருந்தால் தற்போது மையங்களுக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் வாசிப்புப் பயிற்சி அளிக்கவும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி மையங்களுக்கு வருவதற்கு அறிவுறுத்தவும்..
இல்லம் தேடி கல்வி மொபைல் app-ல் தேதி வாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள் வாசித்தலுக்கு புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
🔴மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புத்தகங்களைப் படித்து முடித்த பிறகு கூடுதலாக நமது Read Along செயலியில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் செய்தும் வாசிக்கலாம்.
அந்த தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதை முடித்த பிறகு கூடுதலாக எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் வாசிக்கலாம்.
🔴 மாணவர்கள் வாசிக்கும்போது கூடுமானவரையில் சரியான உச்சரிப்பினை தெளிவாக உச்சரிக்க செய்து அதன்படி வாசிக்க பழக்குங்கள் அப்பொழுதுதான் மாணவர்கள் நிறைய ஸ்டார்களை போனசாக பெற இயலும். அதேபோன்று எவ்வளவு விரைவாக வாசிக்கிறார்கள் அதன் வேகத்தைப் பொருத்து ஸ்டார்கள் கூடுதலாக கிடைக்கும்.
ஒரு புத்தகத்தை ஓபன் செய்தால் அதனை முழுமையாக வாசித்து முடிக்கவும்.
🔴குழந்தைகள் ஆங்கிலக் கதைகள் வாசித்தலில் சிரமப்பட்டால் அவர்களுக்கு பிடித்த தமிழ்க் கதைகளையே நிறைய வாசிக்க சொல்லுங்கள் அவர்கள் விருப்பப் பட்டால் ஆங்கில கதைகளையும் வாசிக்கட்டும்.
மாணவர்கள் விரும்பினால் அவர்கள் வீடுகளிலும் வாசிப்பதற்கு ஏதுவாக அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் Read Along செயலியை இன்ஸ்டால் செய்து Block code பதிவு செய்து அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வழிகாட்டலாம்..
National Teachers Award 2022 - Direct Link
இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கீழே உள்ள இணைப்பில் தாங்கள் விவரங்கள் பதிவேற்றவும்.
Teachers can apply for national best teacher award Direct link - View here...
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்- நிதியமைச்சர் புதிய விளக்கம்
சென்னை மாநகராட்சி 1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி குழந்தைகளுக்கு அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு
இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மாணவ- மாணவிகளுக்கும் ஜூன் மாதம் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்.. துணைத்தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் - SCERT Proceedings
June 2022 - School Dairy - Leave, Working, RL & Training Days List
ஜூன் மாத கல்வி நாட்காட்டி
✅ 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் திருத்தும் பணி 2.6.22 முதல் தொடக்கம். வரும் 23-ம் தேதி +2 முடிவுகளும், 17-ம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளது
✅ BEO அலுவலக குறைதீர் நாள் - 04.06.2022
✅ 1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - 13.06.2022
✅ 1 முதல் 3 ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கட்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - 06.06.2022 முதல் 10.06.2022 வரை - 5 நாட்கள்.
✅ 4 மற்றும் 5 ம் வகுப்பு ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 - 2 நாட்கள்
✅ STEM TRAINING DIST LEVEL - 17.06.2022 ( 6-8 ம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கட்கு)
✅ 6 முதல் 8 ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH TRAINING - 24.06.2022
✅ CRC MEETING - 18.06.2022
✅ 20.06.2022 - 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு
✅ 27.06.2022 - 11 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு
✅ R.L -இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்
9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்
9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய கல்வித்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்தை பள்ளிக்கல்வித் துறை 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 670 பள்ளிகள் தேர்வாகின. அதில் முதல்கட்டமாக 67 பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 70 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி மற்றும் சமூகநலத் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் விவசாயம், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், சுற்றுலா, அழகு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த தொழிற்கல்வி பாடம் 2019-ம் ஆண்டு 184 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் 29,456 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில் வரும் கல்வியாண்டு (2022-23) முதல் 9, 10-ம் வகுப்பில் தொழிற்கல்வி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது; உயர்நிலை வகுப்புகளில் உள்ள தொழிற்கல்வி பாடத்தை நிறுத்துவதற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 2022-23-ம் கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் இடம்பெறாது. 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும்.
அதற்கேற்ப 184 பள்ளிகளில் உள்ள தொழிற்பயிற்சி ஆய்வகங்களின் உபகரணங்களை தலைமை ஆசிரியர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வழக்கம்போல் 11, 12-ம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை படிப்பார்கள் என்றனர்.
9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் நிறுத்தப்படுவதால், 150-க்கும் அதிகமான தற்காலிக பயிற்றுநர்கள் பணியை இழக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.