கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழக மாணவர்களின் கற்றல் திறன் சற்று குறைந்துள்ளது

தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழக மாணவர்களுடைய கற்றல் அடைவுத் திறன் சற்று   குறைந்துள்ளது. மத்திய அரசின் National assessment survey புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

கற்றல் அடைவுத் திறன் புள்ளிவிவரங்களில் தமிழக மாணவர்கள் சில பாடங்களில் தேசிய சராசரிக்கு  இணையாகவும், சிலவற்றில் தேசிய சராசரியைக் காட்டிலும்  அதிக சதவீதத்தையும் பெற்றுள்ளனர்.

கற்றல் அடைவு திறன் குறித்து தேசிய அளவில் மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம்  இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வகையில்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கடந்த ஆண்டு இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டது.   தமிழகத்தில் 4145 பள்ளிகளில் 19100 ஆசிரியர்களிடம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 253 மாணவர்களிடம் மொழிப்பாடம் கணிதம் சமூக அறிவியல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்த விபரங்கள் பெறப்பட்டது.

தமிழக மாணவர்கள் இவற்றில் முன்னிலை:
மூன்றாவது படிக்கும் மாணவர்களில்  46 சதவீத மாணவர்கள் கணித பாடத்தில் ஆயிரம் எண்கள் வரை எழுதவும் படிக்கவும் தெரிந்தனர். இது தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாகும்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் புரிந்து கொள்வதும் எழுதுவதிலும் சிக்கலான வார்த்தைகளை அறிந்து வைத்திருப்பதிலும் தேசிய சராசரி க்கு இணையாக உள்ளனர். அந்த வகையில் தேசிய சராசரி 43 சதவீதத்தை தமிழக மாணவர்கள் எட்டியுள்ளனர்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தமிழகத்தின் சராசரி தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வரலாற்றின் கால நிகழ்வுகளை வேறுபடுத்துவதில்  தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர் அந்த வகையில் தமிழகத்தின் சராசரி 38 சதவீதமாகவும் தேசிய சராசரி 37 சதவீதமாகவும் உள்ளது.
எதில் குறைவு:  
10ம் வகுப்பில் 16% மாணவர்கள் மட்டுமே தினசரி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எண்களைக் கொண்ட தீர்ப்பதில் முன்னிலை பெற்றுள்ளன.
10ம் வகுப்பு மாணவர்களுள் அறிவியல் பாடத்தில் 85% தமிழக மாணவர்கள் அடிப்படை அறிவியல் அறிவில்  குறைவாக உள்ளனர். 13 சதவிகிதத்தினர் மட்டுமே அடிப்படை அறிவியல் பாட அறிவை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
3  சதவீத ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே மொழிப்பாடத்தில் எழுத படிக்கும் வகையில் திறன்  பெற்று உள்ளனர். 27 சதவீத மாணவர்கள் சுற்றுப்புறச்சூழல் அறிவியல் பாடத்திலும் 21சதவிகித மாணவர்கள் கணித பாடத்திலும்  திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

மாணவர்களுடைய கற்றல் அடைவுத் திறன் குறைந்ததற்கு கொரொனொ தாக்கம் காரணமாக அமைந்துள்ளது.




CAPACITY-BUILDING- COURSE- Tentative KEY ANSWERS

CLICK HERE TO VIEW -CAPACITY BUILDING COURSE-2- KEY 👇


CLICK HERE TO VIEW -CAPACITY BUILDING COURSE-3- KEY 👇


CLICK HERE TO VIEW- Capacity Building course -4 key   👇



CLICK HERE-To view capacity Building training key -5 👇



Click here to view capacity building training key-6  👇



பள்ளிப் பதிவேடுகளை கணினிமயமாக்குதல் , தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் (முதற்கட்டமாக 30 பதிவேடுகள்) மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

30 பதிவேடுகள் பட்டியல் : 



 (Proceedings of the School Education Commissioner for computerization of all school records (initially 30 records) and deletion of unwanted records) - Download here

Calendar for teachers professional development -2022-23

 

Calendar for teachers professional development -2022-23

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி - ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை - அனைத்து மாதங்களுக்கும்- pdf file


2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி - ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை - அனைத்து மாதங்களுக்கும்- pdf file


பள்ளி மாணவர்களுக்கு வழங்க 5 கோடி புத்தகங்கள் தயார்..!

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2022-23 ம் கல்வியாண்டில் வழங்குவதற்கு 5 கோடியோ 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அளிப்பதற்காக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  ஜூன் 13 ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ந் தேதியும், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும்  போது மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 2022 ம் ஆண்டு திருத்தப்பட்ட பாடப்புத்தங்கள் அச்சிடப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 7ம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கும், 8 முதல் 12 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு  முழு புத்தகம் என 3 கோடியே 35 லட்சத்து  63 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும்  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100 அடி வேளச்சேரி - தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை,  அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம் ஆகிய இடங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சலுகை

தமிழகம் முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகின்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.

இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும்.


இந்த நிலையில் ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி விடைத்தாளை திருத்த ஏதுவாக பல சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி உள்ளது. அதில் ஒன்று ஆசிரியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள மையத்தில் விடைத்தாள் திருத்தலாம் என அறிவித்துள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரும் ஆண்டில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை? - வெளியானது புதிய அறிவிப்பு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு 210 நாட்கள், வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னை, வரும் கல்வி ஆண்டுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று வெளியிட்டார்.

 இதன்படி, ஆசிரியர்களுக்கு 210 நாட்கள் வேலை நாட்களாவும், அரசு விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து, 148 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 நாட்கள் இதர பணி நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2022- 2023 கல்வியாண்டின் 6-8 ( UPPER-PRIMARY) ஆசிரியர்களுக்கு குறுவளமைய நாட்கள் (CRC) மற்றும் பயிற்சி நாட்கள்‌

2022- 2023 கல்வியாண்டின் 6-8 ( UPPER-PRIMARY) ஆசிரியர்களுக்கு குறுவளமைய நாட்கள் (CRC) மற்றும் பயிற்சி நாட்கள்‌

2022- 2023 கல்வியாண்டின் 1-5 ஆசிரியர்களுக்கு குறுவளமைய நாட்கள் (CRC) மற்றும் பயிற்சி நாட்கள்‌

2022- 2023 கல்வியாண்டின் 1-5 ஆசிரியர்களுக்கு குறுவளமைய நாட்கள் (CRC) மற்றும் பயிற்சி நாட்கள்‌



1-5 CRC DAYS AND TRAINING SCHEDULE.pdf - Download here

2021-2022- TPF/GPF Account Slip published

2021-2022ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip )/ பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.

 *கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய  https://www.agae.tn.nic.in/onlinegpf/ என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி 8.30 மணிக்கு வழங்கப்படும்- அமைச்சர் தகவல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-




முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பள்ளி திறக்கும் நாளில் இத்திட்டம் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. திட்டம் தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படும்.

அவர்கள் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். இதில் மாற்றம் இருக்காது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


1.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Break Fast எப்போது?

ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது

பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்

எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு

2.நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

3.கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்புகிறது கல்வியாண்டு

வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) 210 வேலைநாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளது

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் கட்டாயம்

4.நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது

பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை. 

5.10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு. 



அடுத்த கல்வியாண்டின் பொதுத்தேர்வு தேதிகள் - அமைச்சர் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தொடங்கவிருக்கும் தேதிகளை அறிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23வகை  சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம்
வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஜூன் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கும், ஜுன் 27ஆம் தேதியன்று 11ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் துவக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பொது தேர்வுகள் எப்போது?

அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள், 2023ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 3ஆம் தேதி 10 வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள்  பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும் என்று கூறினார்.


நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். அந்த வகையில் மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள், உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

நீட் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் திருத்த வாய்ப்பு..

நீட் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்த, மே27இரவு 9மணி வரை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கி உள்ளது.



இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு யு.ஜி-2022 நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் கடந்த 6-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த வாரம் 15-ந் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது. மேலும் மே 20-ந்தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது.

கடைசி நாளான 20-ந்தேதி அன்று நாடு முழுவதிலும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். குறிப்பாக தமிழகத்தில் திரளான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்த, விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை நாளை மறுநாள் வரை மே24 முதல் 27-ந்தேதி இரவு 9 மணி வரை திருத்தங்களைச் செய்ய விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்பிறகு, விவரங்களில் எந்தத் திருத்தமும் செய்ய முடியாது.

எனவே திருத்தம் செய்வதற்கு மேலும் வாய்ப்பு வழங்கப்படாது என்பதால், திருத்தத்தை மிகவும் கவனமாக செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.