தமிழ்நாட்டில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..




தமிழ்நாட்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

எனினும், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்  கூறினார்.

இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கப்படும் என்றும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ல் தொடங்கும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் தொடங்கும் என்று கூறி உள்ளார்.



ஜூன் 1-இல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மே 5-இல் தொடங்கியது. முதலில் மொழிப் பாடங்கள், ஆங்கிலம் ஆகியவற்றுக்கும், அதன்பின் முக்கிய பாடங்களுக்கும் பொதுத்தோ்வு நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமையுடன் மொழி பாடங்கள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தோ்வுகள் நிறைவடைந்தன.

சில மாணவா்களுக்கு விருப்பப் பாடமான தொழிற்கல்வி தோ்வு மட்டும், வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவா்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு வரும் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பணிகளை ஜூன் 8-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மதிப்பெண் பட்டியல் சரிபாா்க்கப்பட்டு, ஜூன் 23-ஆம் தேதி தோ்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகள் வழங்க சிறப்பு பணி அலுவலர் உத்தரவு

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜுன் ஒன்று முதல் மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகளை பெற்று தன்னார்வலர்கள் மையங்களை நடத்திட சிறப்பு பணி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.




இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான வழங்கப்பட்டுள்ள கட்டகங்கள் , சுவரொட்டிகள் , அட்டைகள் மற்றும் கதை புத்தகங்கள் மையங்களுக்கு வழங்குவதற்கான வழிக்காட்டுதல் :


கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " அனைத்து மாவட்டங்களிலும் நன்முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு தற்பொழுது கற்றல் கற்பித்தலுக்கான மூன்றாவது கையேடு , சுவரொட்டிகள் ( Posters ) , அட்டைகள் தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை என பிரிவு வாரியாக மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக வழங்கப்பட்டுள்ள கையேடு . சுவரொட்டிகள் ( Posters ) , அட்டைகளின் எண்ணிக்கை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


 தன்னார்வலர்களுக்கு பிரிவு வாரியாக வழங்கப்பட்டுள்ள மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகளின் விவரம் பின் வருமாறு



Click Here to Download - Illam Thedi Kalvi - 3rd Module - Pdf

65500 ஐ அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கலாம் - RTI News

RTI மூலம் பெறப்பட்ட தகவல்

 இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( .பி.) துறை, நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி *வருடாந்திர* ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்ற தகவல் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

 Pay matrix அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதில் சில பல இடங்களில் எழுந்த சிக்கல்களுக்கு இத்தகவல் உதவும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நன்றி.





 


பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு தேர்ச்சி சாத்தியமா?

எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களை இடைநின்ற மாணவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் முழுமையாக செயல்படத்துவங்கி, இறுதித்தேர்வுகளும் முடிவடைந்து விட்டன.

இந்நிலையில்,'எமிஸ்' இணையதள வருகை பதிவேட்டில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பில் நீண்ட நாள் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை நீக்கம் செய்யக்கூடாது.


அனைத்து பணிகளையும் முடித்து தேர்ச்சி ஒப்புதல் வழங்குவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.பள்ளிக்கு நீண்ட நாள் வராத, தேர்வு எழுதாத குழந்தைகளையும் தேர்ச்சி பட்டியலில் சேர்த்து உயர் வகுப்பிற்கு அனுப்பி வைப்பது எந்த வகையில் சாத்தியம் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

அரசாணையின் படிசெயல்படணும்!



இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
கல்வித்துறையின் அரசாணை, 2017ன் படி, 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால், ஆண்டு இறுதித்தேர்வாவது எழுதி இருந்தால் அல்லது ஆண்டு இறுதியில் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிந்தால் ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு, 75 சதவீத வருகைப்பதிவை கணக்கில் கொள்ளாமலே தேர்ச்சி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒரு மாணவர் தொடர்ந்து, 7 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் வகுப்பு ஆசிரியர் பெற்றோரை விசாரிக்க வேண்டும். அடுத்த 7 நாட்கள் வரைவில்லை எனில் தலைமையாசிரியர் தலையிட வேண்டும். அடுத்த, 7 நாட்கள் வரவில்லை எனில் பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் விசாரித்து குழந்தை தொடர்ந்து பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொடர்ந்து, 30 நாட்கள் வராத மாணவர்களை, இடைநின்ற மாணவர் பட்டியல் கொண்டு சேர்த்து நீக்கம் செய்ய வேண்டும். சில ஆண்டுகள் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அடுத்தடுத்த உயர் வகுப்புகளுக்கு தொடர்ந்து தேர்ச்சி அளித்து அவர் இடைநின்ற மாணவர் என்ற கணக்கிற்கே கொண்டு வரப்படாமல் இருப்பது சரியல்ல.

ஊரடங்கில் 'ஆல்பாஸ்' நடைமுறை சரியாக இருந்தது. தற்போது பள்ளிகள் முழுமையாக இயங்குகின்றன. இந்நேரத்தில், பள்ளிக்கே வராத எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை 'ஆல்பாஸ்' மூலம் அடுத்த வகுப்புக்கு கொண்டு செல்வது பல நடைமுறை சிக்கல்களை உருவாக்குகிறது. மீண்டும், 2017 அரசாணையின் படி பழைய நடைமுறையினை கொண்டு வர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு,அவர்கள் கூறினர்.

ஒரு மாணவர் யாரென்றே தெரியாமல், தொடர்ந்து பெயர் மட்டும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவர்களை 'எமிஸ்' தளத்தில் இடைநிற்றல் பட்டியலில் சேர்க்கப்பட்டால்தான், ஆசிரியர் பயிற்றுநர்கள், அதுபோன்ற மாணவர்களை மீண்டும், பள்ளியில் சேர்க்கும் முயற்சியை மேற்கொள்வர்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகங்கள் மீண்டும் செயல்பாட்டில் உள்ளது| Capacity Building Training





TNTP இணையதளத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகங்கள் 4,5,6,7 மற்றும் 8 தற்போது மீண்டும்  செயல்பாட்டில் உள்ளது. பயிற்சியை நிறைவு செய்யாதவர்கள்  நிறைவு செய்யலாம்.

https://tntp.tnschools.gov.in/login

 


அரசு பள்ளி மாணவருக்கு ஆங்கில பேச்சு பயிற்சி

அரசு பள்ளிகளில், நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு :

அரசு பள்ளிகளில், நான்காம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் பேச்சு பயிற்சி அளிக்கப்படும்

இந்த திட்டத்தை செயல்படுத்த, அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த, அனைத்து வகையான ஆசிரியர்கள், முதலில்அடையாளம் காணப்படுவர். அவர்களுக்கு 'ஆன்லைனில்' அரை மணி நேர தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, வரும் 30, 31ம் தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பயிற்சி வகுப்பு நடக்கும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நான்காம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையான, 25 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பயன் பெறுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

SSLC Examination May 2022 - Valuation Camp Schedule

10th Public Examination May 2022 - Paper Valuation Camp Schedule 


EMIS Students TC Generation and Students promotion reg.

Kind Attention : 

EMIS Students TC Generation and Students promotion reg.

மாநில EMIS மையத்தில் இருந்து முறையான வழிகாட்டுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வரும் வரை youtube வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டாம். தகவல் தெரிவிக்கப்படும்.

- State EMIS Team

 

Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் National ICT Award 2020 & 2021க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 30-06-2022 

(Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021. Last day: 30-06-2022)...

>>> National ICT Award - Application Registration Instruction Manual for School Teacher...

>>> National ICT Award - Application Registration Instruction Manual for Teacher Educator...

English_20_21

Dear all, 

CIET, NCERT has announced the nomination for National ICT Award 2020 & 2021. Click on this link to apply : https://ictaward.ncert.gov.in/

>>> Login Website Link...