ஓய்வு பெற உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

02.06.2022 முதல் 31.05.2023 வரை ஓய்வு பெற உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 


2022-2023 - ஆம் ஆண்டிற்கான , அனைத்துவகை ஆசிரியர் பணியிடங்களுக்கான. உத்தேச காலிப்பணியிட மதிப்பீடு தயார் செய்ய ஏதுவாக , 3105.2022 - ல் உள்ளவாறான காலிப்பணியிடங்கள் மற்றும் 2022-2023 - ஆம் கல்வியாண்டில் 02.06.2022 முதல் 31.05.2023 முடிய ஓய்வு பெறவுள்ளஅனைத்துவகை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 ல் ( EXCEL Format ) தயார் செய்து இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் ( jdpcc2018@gmail.com ) முகவரிக்கு 18.05,2022 க்குள் அனுப்பிவைக்கும்படியும் , அதன் அச்சு பகர்ப்பு நகலில் முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் இவ்வாணையரகத்திற்கு 20.05.2022 - க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் , இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) கட்டுப்பாட்டின் கீழ்வரும் பதவிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் எண்ணிக்கை விவரத்தினை படிவம் -2 ல் பூர்த்தி செய்து நேரடியாக இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) மின்னஞ்சல் ( dsew3sec @ gmailcom ) முகவரிக்கு அனுப்பிவைக்கும்படியும் , அவ்வாறே அச்சு பகர்ப்பு நகலில் முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் 20.05.2022 - க்குள் அனைத்து அனுப்பிவைக்கும்படியும் முதன்மைக் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

 


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம். முதன்முதலில் - தமிழில்...

IMG_20220520_153655

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம். முதன்முதலில் - தமிழில்...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும்: தேர்வுத்துறை




தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர்.

மேலும், 7,712 மாற்றுத்திறனாளி, தனித்தேர்வர், சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

 இந்த நிலையில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

State Level Ennum Ezhuthum Concept Training for KRPs - Relieving DIET Lecturers, BRTEs, Elementary School Teachers - SCERT Director Proceedings) ந.க.எண்: 2411/ ஈ2/ 2021, நாள்: 16-05-2022...

2022-2023ஆம் ஆண்டு எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி - DIETகல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுனர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு சார்ந்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன  இயக்குனரின் செயல்முறைகள் (State Level Ennum Ezhuthum Concept Training for KRPs - Relieving DIET Lecturers, BRTEs, Elementary School Teachers - SCERT Director Proceedings) ந.க.எண்: 2411/ ஈ2/ 2021, நாள்: 16-05-2022...



Click here to download pdf file 

எண்ணும் எழுத்தும் திட்டம் - மாநில அளவிலான பயிற்சி 2022-23 - தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான மாவட்ட வாரியான முதன்மைக் கருத்தாளர்கள் பட்டியல் (Ennum Ezhuthum Mission - State Level Training 2022-23 - District wise KRPs for Tamil, English and Mathematics Subjects)...

எண்ணும் எழுத்தும் திட்டம் - மாநில அளவிலான பயிற்சி 2022-23 - தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான மாவட்ட வாரியான முதன்மைக் கருத்தாளர்கள் பட்டியல் (Ennum Ezhuthum Mission - State Level Training 2022-23 - District wise KRPs for Tamil, English and Mathematics Subjects)...



3000 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை




கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3000 ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலை இருந்தது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாய சட்டம் அறிவுறுத்துகிறது. 


அதன்படி, 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், 5 ஆண்டுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொது தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு!

பொது தேர்வுகளில் பங்கேற்காத, 1.17 லட்சம் மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.




பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து, 1.17 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்வில்லை.இவ்வளவு நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும், பங்கேற்க முடியாத காரணங்களை கண்டறிந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு விரிவான அறிக்கை தர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த தேர்வர்கள் அனைவரையும், ஜூலையில் நடத்தப்படும் உடனடி தேர்வில் பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 


ஜூன் 13 கிடையாது ! பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு... கல்வித்துறை அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் இம்மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.

அதன்படி, 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ம் தேதி ஆரம்பித்து 31ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இதுதவிர 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. இதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கோடை விடுமுறை முடிவடைந்து அடுத்த மாதம் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 1 முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 13ம் தேதி பள்ளிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



IMG_20220517_213958

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 மற்றும் கணினி தொழிற்கல்வி ( நிலை 1 ) பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் 01.06.2022 முதல் 31.12.2023 முடிய ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியிட வாரியாக , பாடவாரியாக , தனித்தனி தாளில் Sheet ல் தட்டச்சு செய்து dsew3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.05.2022 மாலை 3.00 மணிக்குள் தவறாமல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 


தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி

அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு வாரம் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையின் பாட திட்ட தயாரிப்பு பிரிவான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி..ஆர்.டி., சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக, முதன்மை கருத்தாளர்களாக செயல்படும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும், 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மதுரையில் ஆறு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்

முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியை முடித்த பின், பள்ளிகள் திறந்ததும், மற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்கள் வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது