HSS HM Panel Preparation - Dir Proceeding

01.01.2022 ல் உள்ளவாறு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம் - ஊட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்விற்கான உத்தேச கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

!


IMG_20220517_164823

HSS HM Panel Preparation - Dir Proceeding - Download here...


 

எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 - எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்பான மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

.


IMG_20220517_115428


IMG_20220517_115437




மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குநர்களின் தெளிவான விளக்கம் - ஆசிரியர் கூட்டணி அறிக்கை!

 17.05.2022

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்:36/2001

மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி  பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குனர்களின் தெளிவான அறிக்கை..

பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரின் தெளிவான அறிவிப்புக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 20ஆம் தேதி வரை பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து நிலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உணரவேண்டும். மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்தவர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தடையின்மைச் சான்று பெற்று வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள் தயக்கமின்றி செல்லலாம். நேற்று இரவு ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள்   தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது "இயக்குநரகத்தின் சார்பில் நாங்கள் தெளிவாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்பு வழங்கி விட்டோம்..  எவ்வித தயக்கமின்றி அவரவர்கள் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்."  சங்க வித்தியாசமின்றி ஆசிரியர்களின் நலனுக்காக தான் நாம் சங்கம் நடத்தி வருகின்றோம். சங்கத் தலைவர்கள்  அவரவர்கள் முழு பொறுப்பேற்று பணி முடித்த ஆசிரியர்களை விடுவித்து அனுப்பி வைப்போம். எவராவது நடவடிக்கைகள் எடுத்தால் தகவலினை தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.


ஆட்சியின் மீது வெறுப்புணர்வை ஆசிரியர்களுக்கு நாளுக்கு நாள் பீறிட்டு எழச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு சிலர் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்பதே எதார்த்த உண்மையாகும். மாணவர்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பது, ஆசிரியர்கள் 20 ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்வது,  அப்புறம் 20 ஆம் தேதி வரை வரத் தேவையில்லை என்று சொல்லுவது இப்படி எல்லாம் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு உள் நோக்கத்தோடு திட்டமிட்டு ஆசிரியர்களை பழிவாங்குகிறார்கள்  என்று  பேச வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காலம் வரும் போது இதனை நாங்கள் நிருபிப்போம் ...

வாழ்த்துகளுடன்...

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.

அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.

க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.

G.O-120- NHIS-அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 2021 - விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

G.O-120- NHIS-அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 2021 - விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!


அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 2021 - விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

👇👇👇👇👇👇👇👇👇

Click here todownload pdf file

 


அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 மாதத்தில் 6.18 லட்சம் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் +1, ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 6.18 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதத்தில் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 2021-22-ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.



மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 தற்போது அதனை மே 20 வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

தொகுப்பூதிய முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 மாத ஊதியம் வழங்கத் தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

PTA மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 மாத ஊதியம் வழங்கத் தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - முழுவிவரம் : ( Application Form Direct Link)


ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பிக்கும் இணையதள இணைப்பு.


Tamil Nadu Education Fellowship - Application Form - View here  

 ஃபெல்லோஷிப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக , நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது . இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு , கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக " இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை " என நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

 

இத்திட்டங்கள் அனைத்தும் , அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அடிப்படை எண்ணறிவு , எழுத்தறிவைப் பெறுவதில் தொடங்கி , உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற வேண்டும் என்ற உயரிய இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளன . ஆர்வமும் , திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச , எழுத , படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்

விண்ணப்பம் செய்யும் காலம் : ஏப்ரல் 22 , முதல் ஜூன் 15 , 2022 வரை 

பணிக்காலம் : ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை 

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும்.

 மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் , பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட அரசு எடுத்து வரும் இச்சிறந்த முன்முயற்சியில் இணைந்து செயலாற்ற வாருங்கள் !

 


IMG_20220516_192722

IMG_20220516_192732

SMC உறுப்பினர்கள் விவரங்களை Emis இல் பதிவேற்றம் செய்ய அதற்கு தேவைப்படும் விவரங்கள்:


பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்ய அதற்கு தேவைப்படும் விவரங்கள்:

1. Name 

2. Gender 

3.Community 

4.Category(parent) 

5.Sub-category (not community ) 

6.Aadhar number 

7.Educational qualification 

8.literacy status 

9.Occupation 

10.Class of child 

11.Section of child 

12.Name of child 

13.Address 

14.Phone number 

15.Is the individual an ITK volunteer? 

16.Photograph (if available )

17.Submit.

 


அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விவரம் EMIS ல் பதிவேற்றம் செய்தல் -சார்பு-SMC - Updation..

SMC - Updation..

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
-ந.க.எண்449/C7;SS.SMC/2021-22, நாள் /5.05.2022

பொருள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விவரம் EMIS ல் பதிவேற்றம் செய்தல் -சார்பு