ITK Baseline Survey - தன்னார்வலர்களின் கவனத்திற்கு...

தன்னார்வலர்களின் கவனத்திற்கு..

நீங்கள் அனைவரும் உங்களிடம் பயிலக்கூடிய மாணவர்களுக்கு Baseline Survey செய்து வருகின்றீர்கள். சில பேர் அதை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில கருத்துக்களை உங்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

🔴ஒரு மாணவனுக்கு Baseline சர்வே எடுக்கும் பொழுத அவன் படிக்கக்கூடிய வகுப்பில் முதலில் survey மேற்கொள்ள வேண்டும்..

🔴ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்சம் 2 வகுப்புகளுக்கு  மேற்கொள்ளப்பட வேண்டும் .உதாரணமாக மூன்றாம் வகுப்பு பயிலக் கூடிய ஒரு மாணவன் தமிழ் பாடத்தில் உள்ள நான்கு கேள்விகளில் மூன்று கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்திருந்தால் (50% க்கு மேல் ) அம்மாணவனுக்கு Booster Level-ஆக நான்காம் வகுப்பு தமிழ் பாடம் சர்வேயில் ஓபன் ஆகும். இதனையும் அந்த மாணவன் முடித்தால் மட்டுமே தமிழ்பாடம் ஆனது முழுமையாக survey செய்யப்பட்டிருக்கும்.


🔴ஒருவேளை அம்மாணவன் மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கேட்கப்பட்டுள்ள நான்கு கேள்விகளில் ஒரு கேள்விக்கு மட்டுமே சரியாக பதில் அளித்திருந்தால் (50 % க்கு கீழ்) அம்மாணவனுக்கு முந்தைய வகுப்பான இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள LO மீண்டும் வலுவூட்டப்படும்.. இரண்டாம் வகுப்பு பாடத்திலும் 50  % கீழ் பெற்றிருந்தால் அதற்கு முந்தைய வகுப்பு ஓபன் ஆகும். இதனை அம்மாணவன் முடிக்க வேண்டும். அப்போதுதான் அம்மாணவனுக்கு தமிழ் பாடத்தில் முழுமையாக சர்வே முடிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம்..


🔴இதேபோன்று ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகவியல் என அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் 2 வகுப்புகளுக்கு சர்வே செய்யப்பட வேண்டும். அதாவது அந்த மாணவன் படிக்கக்கூடிய வகுப்பு மற்றும் அந்த மாணவனின் அடைவுத் திறனை பொருத்து அதற்கு முந்தைய வகுப்பு அல்லது அதற்கு அடுத்த வகுப்புக்குரிய வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே Baseline Survey-யானது முழுமையாக முடிக்கப்பட்டதாக கருத வேண்டும்.


பாடங்களில் உள்ள வண்ணங்களுக்கான விளக்கம்


🔴முதலில் ஒரு மாணவனுக்கு சர்வே ஆரம்பிக்கும் பொழுது அனைத்து பாடங்களும் சிவப்பு நிற வண்ணத்தில் இருக்கும். முதலில் ஒரு பாடத்தினை தேர்வு செய்து சர்வே  மேற்கொண்டு அந்த மாணவன் அந்தக் குறிப்பிட்ட பாடத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சரியான விடைகளை அளித்திருந்தால் அப்பாடமானது சர்வே முடிக்கப்பட்ட உடன் பச்சை நிறமாக மாறிவிடும்..


🔴ஒருவேளை அந்தப் பாடத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான சரியான விடைகளை அளித்திருந்தால் அப்பாடமானது சர்வே முடிக்கப்பட்ட பின்பும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். உடனடியாக அம்மாணவருக்கு  அதற்கு முந்தைய வகுப்பிற்கு survey மேற்கொள்ள வேண்டும். அதில் 50 % கும் மேற்பட்ட அடைவினைப் பெற்றால் மட்டுமே அந்த பாடம் பச்சை நிறமாக மாறும்.... 


அக்குறிப்பிட்ட மாணவன் அந்த குறிப்பிட்ட பாடத்தில் 50 சதவீத அடைவினை பெறும் வரை  survey மேற்கொள்ள வேண்டும்.இதனை தன்னார்வலர்கள் குழப்பிக்கொள்ளக்கூடாது.

(Submitted successfully என்று வந்தவுடன் உடனடியாக back பட்டனை press செய்யக்கூடாது. நீங்கள் எடுத்த சர்வே ஆனது serverல் update ஆவதற்கு 5 விநாடிகள் காத்திருந்து பின்னர் பேக் பட்டனை அழுத்தவும்)
வகுப்புகளும் வண்ணங்களும்:
🔴முதலில் நீங்கள் ஒரு பாடத்தை தேர்வு செய்து உள் நுழையும் பொழுது வகுப்பு நீல நிற வண்ணத்திலும் அதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் மஞ்சள் நிற புள்ளியும் காணப்படும் அப்படி என்றால் நீங்கள் இன்னும் சர்வே செய்யவில்லை. இப்படி இருக்கும் வகுப்புகளுக்கு நீங்கள் கட்டாயம் சர்வே செய்ய வேண்டும். ஒருவேளை சிவப்பு நிறவட்ட குறியீடு இருந்தால் அடைவு 50 % கீழ் உள்ளது என்று அர்த்தம். அடுத்து அதற்கு முந்தைய வகுப்பிற்கு survey மேற்கொள்ள வேண்டும் பச்சை நிற வண்ணத்தில் மாறும் வரை....

பச்சை நிற வண்ணத்தில் வந்தால் மட்டுமே ஒரு பாடத்தில் survey சரியாக முடிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.


குறிப்பு:

🔴ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒரு பாடத்தில் 50 % மேல் அடைவு பெற்றிருந்தால் இரண்டாம் வகுப்பு பாடம் ஓபன் ஆகும் ஒருவேளை 50 %  அடைவிற்கு கீழ் பெற்றிருந்தால் அதற்கு முந்தைய வகுப்பு ஓபன் ஆகாது..

🔴அதே போன்று ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் 50 % அளவிற்கு கீழாக அடைவு பெற்றிருந்தால் அதற்கு முந்தைய வகுப்பான ஏழாம் வகுப்பு பாடம் ஓபன் ஆகும். ஒருவேளை 50 % மேலாக அடைவினை பெற்றிருந்தால் அவனுக்கு அடுத்த வகுப்பிற்கான பாடம் ஓபன் ஆகாது...

🔴Baseline survey last date extend to 13.05.2022 இதற்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது. அதன் பின்னர் பள்ளிக்கு விடுமுறை என்பதால் விரைந்து முடிக்க வேண்டுகிறோம்.

மாநில இல்லம் தேடிக் குழு.


BEO- அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய படிவங்கள் & தேர்ச்சி விதிகள்-2021-2022

BEO- அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய படிவங்கள் & தேர்ச்சி விதிகள்-2021-2022

Annual Results Forms- pdf



ITK-இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறையில் செயல்படுவது குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு-PDF





ITK-இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறையில் செயல்படுவது குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு-PDF 


Click here to download file 

மகப்பேறு விடுப்பு - குழந்தை பிறந்து சிறிது காலத்தில் இறந்தாலும் 365 நாட்கள் மகப்பேறுவிடுப்பு வழங்கலாம்.-PDF

மகப்பேறு விடுப்பு - குழந்தை பிறந்து சிறிது காலத்தில் இறந்தாலும் 365 நாட்கள் மகப்பேறுவிடுப்பு வழங்கலாம்.-PDF


Click here to download MATERNITY LEAVE CLARIFICATION LETTER-PDF

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது - மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை.!

 கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆபாசமாக பேசுவது, மிரட்டுவது, மேஜை , நாற்காலிகளை உடைப்பது, ஆசிரியர்கள் முன்பு நடனமாடுவது, மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடுதல் போன்ற வீடியோக்களை பார்ப்போரை அதிர வைக்கிறது.

மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பதை வைத்துக்கொண்டு, ஆசிரியர்களிடம் அத்துமீறுவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும், அதிகமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாணவர்களின் செயல்களுக்கு கொரோனா ஊரடங்கு, போதைப்பழக்கத்திற்கு அடிமை போன்றவை காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.இதனை தடுத்திட பள்ளி கல்வித் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.

இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். அதேபோல், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது எனவும் தெரிவித்தார்.

எண்ணும் எழுத்தும் 6 ஆம் கட்ட பயிற்சி - விடைகள்





எண்ணும் எழுத்தும் 6 ஆம் கட்ட பயிற்சி - விடைகள்



Click here to download pdf

எண்ணும் எழுத்தும் 5 ஆம் கட்ட பயிற்சி - விடைகள்






எண்ணும் எழுத்தும் 5 ஆம் கட்ட பயிற்சி - விடைகள்


Click here to download pdf

எண்ணும் எழுத்தும் நான்காம் கட்ட பயிற்சி - விடைகள்






எண்ணும் எழுத்தும் நான்காம் கட்ட பயிற்சி - விடைகள்


Click here to download pdf
 

EMIS ATTENDANCE - தேர்வு நாட்களில் எப்படி பயன்படுத்துவது? - விளக்கம்!


 Today status update செய்வது எப்படி?

▪️TNSED schools app தற்போது play store-யில் download செய்து கொள்ளலாம்.


 ▪️மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணையை எடுத்துக் கொள்ளவும்.


 ▪️Today status-யில் partially working என தேர்வு செய்து கொள்ளவும்.


 ▪️Please select classes working today என்ற இடத்தில் காலை மற்றும் மதியம் தேர்வு எழுத உள்ள வகுப்புகளை select செய்து கொள்ளவும்.


 ▪️Today status ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய இயலும்.


 ▪️காலை மற்றும் மதியம் என பதிவு செய்ய இயலாது.எனவே மதியம் தேர்வு உள்ள வகுப்புகளையும் காலையிலேயே select செய்யவும்.ஆனால் வருகைப் பதிவு மதியம் பதிவு செய்யவும்.

 

▪️6,7,8 ஆம் வகுப்புகளை தேர்வு செய்ய வேண்டாம்.அவர்களுக்கு இன்று தேர்வு கிடையாது.


 

▪select செய்த வகுப்புகளில் எந்தெந்த வகுப்புக்கு காலையில் தேர்வு உள்ளதோ அந்த வகுப்பிற்கு மட்டும் காலையில் வருகைப்பதிவு செய்யவும்.


▪️மதியம் தேர்வு உள்ள வகுப்பிற்கு மதியம் வருகைப்பதிவு செய்யவும்.


 

▪️வருகின்ற புதன் மற்றும் வெள்ளி அன்று today status -யில் fully working என தேர்வு செய்யவும்.ஏனெனில் அன்று அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு உள்ளது.

 

TNPSC, TRB, TNUSRB - விண்ணப்பதாரர்களுக்காக பிரத்யேக கைபேசி செயலி !


அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அமைப்புகள், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய தேர்வுகளை நடத்தி வருகின்றன.


இந்நிலையில், அரசுத் தேர்வு விண்ணப்பதாரர்களை எளிதாக விண்ணப்ப பணிகளை மேற்கொள்வதற்காக புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.சட்டப்பேரவையில்  நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்


டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.


TNPSC, TRB, TNUSRB உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்பதாரர்களுக்காக பிரத்யேக கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.


தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை இந்த கைபேசி செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பையும் இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளலாம்.


மாநில குடிமைப் பணி அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் இடைக்கால பயிற்சிகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்துள்ளார்.


 


எண்ணும் எழுத்தும் நான்காம் கட்டக பயிற்சி - Quiz Questions & Tentative Answers





எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி - கட்டகம் 4 - வினாடி வினா - உத்தேச விடைகள் ( EEM -Ennum Ezhuthum Mission Training - Module 4 - Quiz Questions & Tentative Answers)


Ennum Ezhuthum Module 4 - Quiz Questions & Tentative Answers - Download here

எண்ணும் எழுத்தும் நான்காம் கட்டக பயிற்சி - Direct link |





EMIS இணையத்தில் ஆன்லைன் மூலமாக தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அடிப்படை திறனுக்கான எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடந்துவருகிறது. தற்போது நான்காம் கட்ட பயிற்சிக்கான இணைப்பு EMIS இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் EMIS இணையத்தில் தங்களது Teacher ID மற்றும் Password கொடுத்து உள்நுழைந்து பயிற்சியினை முடிக்கலாம்.....


பயிற்சி லிங்க்....

 https://tntp.tnschools.gov.in/dashboard?course=5

ஜூன் 23ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மே 5) துவங்கியது.

தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் இதில் அடங்குவர். பிளஸ் 2 தேர்வுகள் மே 28ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'வரும் ஜூன் 23ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அதன் பின்னர், ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.