Maternity Leave Guidelines
சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
ULLAS TRUST ENRICHMENT PROGRAMS | 9 – ம் வகுப்பு முதல் 12 – ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி பயில்வதற்கான தேவையான உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
பள்ளிக்கல்வித்துறை - கூகுள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
கூகுள் நிறுவனம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.
05.05.2022 முதல் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கான கோவிட் - 19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!
Term III - Model Question paper | மூன்றாம் பருவத் தேர்வு மாதிரி வினாக்கள் - தமிழ் / ஆங்கில வழி -120 pages-Pdf file
EER Format - primary & Middle Schoolspdf file
Click here to download pdf file
10, 11, 12 பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு
துறை அலுவலர்களுக்கான பணிகள்: Click here
முதன்மைக் கண்காணிப்பாளருக்கான பணிகள்: Click here
வழித்தட அலுவலர்களுக்கான பணிகள்: Click here
வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களின் கடமைகள்: Click here
ஆய்வு அலுவலர்களின் பொறுப்புகள்: Click here
மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநருக்கான பணிகள்: Click here
பறக்கும் படை உறுப்பினர்களின் நியமனமும் கடமைகளும்: Click here
அவசர உதவி தொலைபேசி எண்கள்: Click here
படிவங்கள் : Click here
தேர்வுக் கால அட்டவணைகள்: Click here
இல்லம் தேடி கல்வி-- 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை ஆய்வு (Baseline Survey) 6.5.2022 க்குள் முடிக்க உத்தரவு
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அடிப்படை ஆய்வினை வரும் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டங்களிலும் அனைத்து கறப்பாக செயல்பட்டு வருகிறது. மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலையினை அறிந்து கொள்வது மிக முக்கியம். எனவே அதனை அறிந்து கொள்ளும் விதமாக கற்றல் மாணவர்கள் அடைவுகளின் அடிப்படையில் குறைந்தபட்சம் அடையவேண்டிய அனைத்து பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு 16 கைப்பேசி செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் மையத்திற்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை ஆய்வினை மேற்கொண்டு 6.05.2022 க்குள் முடிக்க வேண்டும். அடிப்படை ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அதனை மேற்கொள்ளும் விதம் குறித்த வழிகாட்டுதல்கள் https://www.youtube.com/watch?v=b1RY8LkD84g&feature=youtu.be&ab_channel=TNSCERT காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தன்னார்வலர்களுக்கும் ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் , மாவட்ட ஆட்சியர் ஒருங்கணைப்பாளர்கள் மற்றும் வட்டாச்சியர் ஒருங்கணைப்பாளர்கள் வாயிலாக தகவல் தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் வரையறை செய்து ஆணை வெளியீடு.
பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
Lab Assistant Duties - Proceeding - Download here
மாணவர் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் முன்னெடுப்புகள் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் குறித்து செய்தி வெளியீடு!
ஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.
அவரது அறிக்கை:
* மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்
* இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள், பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த வழிவகை செய்யப்படும்
* விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என, மாணவர்களின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்
* கலைத் திருவிழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள், கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்
* மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற, மலை சுற்றுலா தலங்களில், கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்
* வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மன நலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்
* செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்க, பள்ளிதோறும் காய்கறி தோட்டங்கள் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், சத்துணவில் பயன்படுத்தப்படும்
* மாநில சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட, ஏற்பாடுகள் செய்யப்படும்
* அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 'ஸ்டெம்' எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த, புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
* தேவைப்படும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்படும்
* மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும், நற்பண்புகளை உருவாக்கவும், பெற்றோரும், பள்ளியும், அரசும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்த, தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.
முன்கூட்டியே கோடை விடுமுறை - அறிவிப்பு விரைவில் வெளியாகும் . அமைச்சர் அன்பில் மகேஷ்
'பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி' - அமைச்சர் அன்பில் மகேஷ்
வரும் கல்வியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கண்டர மாணிக்கத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அதனால், சில விருப்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு திவீர முயற்சி எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் மாநில கல்வி துறை ஒரு சிறந்த மாற்றம் பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.