ULLAS TRUST ENRICHMENT PROGRAMS | 9 – ம் வகுப்பு முதல் 12 – ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி பயில்வதற்கான தேவையான உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

2022-23 ஆம் கல்வியாண்டில் உல்லாஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பாக “ULLAS TRUST ENRICHMENT PROGRAMS” என்ற திட்டத்தின் அடிப்படையில் அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 – ம் வகுப்பு முதல் 12 – ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி பயில்வதற்கான தேவையான உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


பள்ளிக்கல்வித்துறை - கூகுள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து


கூகுள் நிறுவனம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

தொழில்நுட்பம் மூலம் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்துகொள்ள 'Google Road Along' என்ற செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

 முத்தமிழ் மொழிபெயர்ப்பு, இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடம் திட்டத்தில் நூல்களையும் வெளியிட்டார்.

05.05.2022 முதல் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கான கோவிட் - 19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

05.05.2022 முதல் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கான கோவிட் - 19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!



Term III - Model Question paper | மூன்றாம் பருவத் தேர்வு மாதிரி வினாக்கள் - தமிழ் / ஆங்கில வழி -120 pages-Pdf file

மூன்றாம் பருவத் தேர்வு மாதிரி வினாக்கள் - தமிழ் / ஆங்கில வழி -120 pages-Pdf file


ஊக்க ஊதிய உயர்வு - CEO செயல்முறைகள்!

 ஊக்க ஊதிய உயர்வு - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

IMG_20220504_200701

IMG_20220504_200722

IMG_20220504_200712

EER Format - primary & Middle Schoolspdf file

EER Format - primary & Middle Schools pdf file

Click here to download pdf file

10, 11, 12 பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு

அறை கண்காணிப்பாளர் களுக்கான அறிவுரைகள்: Click here

துறை அலுவலர்களுக்கான பணிகள்: Click here

முதன்மைக் கண்காணிப்பாளருக்கான பணிகள்: Click here

வழித்தட அலுவலர்களுக்கான பணிகள்: Click here

வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களின் கடமைகள்: Click here

ஆய்வு அலுவலர்களின் பொறுப்புகள்: Click here

மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநருக்கான பணிகள்: Click here

பறக்கும் படை உறுப்பினர்களின் நியமனமும் கடமைகளும்: Click here

அவசர உதவி தொலைபேசி எண்கள்: Click here

படிவங்கள் : Click here

தேர்வுக் கால அட்டவணைகள்: Click here

இல்லம் தேடி கல்வி-- 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை ஆய்வு (Baseline Survey) 6.5.2022 க்குள் முடிக்க உத்தரவு

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அடிப்படை ஆய்வினை வரும் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இல்லம்‌ தேடிக்‌ கல்வி மையங்கள்‌ 1 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ மாவட்டங்களிலும்‌ அனைத்து கறப்பாக செயல்பட்டு வருகிறது. மையங்களுக்கு வரும்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ நிலையினை அறிந்து கொள்வது மிக முக்கியம்‌. எனவே அதனை அறிந்து கொள்ளும்‌ விதமாக கற்றல்‌ மாணவர்கள்‌ அடைவுகளின்‌ அடிப்படையில்‌ குறைந்தபட்சம்‌ அடையவேண்டிய அனைத்து பாடங்களுக்கும்‌ அடிப்படை ஆய்வு 16 கைப்பேசி செயலியில்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.


தன்னார்வலர்கள்‌ மையத்திற்கு வரும்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ அடிப்படை ஆய்வினை மேற்கொண்டு 6.05.2022 க்குள்‌ முடிக்க வேண்டும்‌. அடிப்படை ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ள விதம்‌ மற்றும்‌ அதனை மேற்கொள்ளும்‌ விதம்‌ குறித்த வழிகாட்டுதல்கள்‌ https://www.youtube.com/watch?v=b1RY8LkD84g&feature=youtu.be&ab_channel=TNSCERT காணொளியில்‌ கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தன்னார்வலர்களுக்கும்‌ ஆசிரியர்கள்‌, பயிற்றுநர்கள்‌ , மாவட்ட ஆட்சியர் ஒருங்‌கணைப்பாளர்கள்‌ மற்றும்‌ வட்டாச்சியர்‌ ஒருங்‌கணைப்பாளர்கள்‌ வாயிலாக தகவல்‌ தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பகலில் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் வெயிலின் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.  

இந்த நிலையில், தமிழகத்தில்  1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு  எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் 1- 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் வெயிலின் தாக்கம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

 




2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 12 வாரத்தில் பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


Judgement Order Copy - Download here

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் வரையறை செய்து ஆணை வெளியீடு.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்க்கண்டுள்ள பணிகள் மற்றும் பொறுப்புகள் வரையறை செய்து ஆணையிடப்படுகிறது.

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை  செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

Lab Assistant Duties - Proceeding - Download here

IMG_20220502_145308


IMG_20220502_145316

IMG_20220502_145324



மாணவர் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் முன்னெடுப்புகள் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் குறித்து செய்தி வெளியீடு!

மாணவர் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை  வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் முன்னெடுப்புகள் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் குறித்து செய்தி வெளியீடு!

சிறந்த கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல வாழ்க்கைக் கல்வியும் கூட ! அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் , மாணவர் நலன் , மகிழ்ச்சியான கற்றல் சூழல் , ஆசிரிய- மாணவ நல்லுறவு மேம்பட தமிழ்நாடு அரசு , நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது . கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் கற்றல் கற்பித்தல் , உடல் - மன நலனில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக , பள்ளிகள் திறக்கப்பட்டபின்னரும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு மாணவர்களை கவனித்து அரவணைத்து சிறந்த வகுப்பறைச் சூழலை உருவாக்கி வருகின்றனர் . ஆசிரியர் தமது கற்பித்தல் பணியுடன் மாணவர்களின் மனநலம் மேம்பட அவர்களோடு தொடர்ந்து உரையாடுவதில் உள்ள சிரமங்களையும் அரசு உணர்ந்திருக்கிறது . இந்தச் சிக்கல்களைக் களையும்வண்ணம் அரசு பின்வரும் நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது.


மாணவர் குறித்து பெற்றோருடைய கருத்தையும் ஆசிரியரின் கருத்தையும் இரு தரப்பும் உணர்ந்து கொள்ள ஏதுவாக , மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும் . கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடைவெளியால் செயல்படாமல் இருக்கும் இலக்கியம் , கவின்கலை , சூழலியல் சார்ந்த மன்றங்கள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்த வழிவகை செய்யப்படும் . மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது , விளையாட்டு , நுண்கலை , இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து , அவர்தம் முழுத்திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள் பள்ளி , வட்டார , மாவட்ட , மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும் . இசை , நாடகம் , கவிதை , கதை சொல்லல் , பொம்மலாட்டம் , நாட்டுப்புறக் கலைகள் , ஓவியம் , கூத்து , புகைப்படக் கலை , நடனம் போன்ற பல திறன்களை வெளிப்படுத்தும் வண்ணம் கலைத் திருவிழாக்களும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.


கலை விளையாட்டுத் திறன்களிலும் மன்றச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் . மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் பள்ளிப் பாடங்கள் தவிர , சூழலியல் , தலைமைத்துவம் , மனித உரிமை , சமூக நீதி , பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் போன்ற பொருண்மைகளில் பயிற்சிகள் அளிக்கப்படும் 
மாணவர்களுக்கு தொழில்நுட்பத்திலும் கணினியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கணினி நிரல் மன்றங்களும் எந்திரனியல் மன்றங்களும் ஏற்படுத்தப்படும் . 

மேலும் இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking இல் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் . வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம் குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல் , போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல் , தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் . 

மாணவர்கள் நல்ல உடல்நலத்தோடு இருந்தால் மட்டுமே கல்வியில் கவனம் செலுத்த முடியும் என்பதால் உடலியக்க நிபுணர்கள் ( Physio theraphists ) வாயிலாக சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும் . செயல்வழிக்கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிதோறும் காய்கறித் தோட்டங்கள் மாணவர்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவற்றில் விளையும் காய்கறிகள் . பழங்கள் , கீரைகள் பள்ளியின் சத்துணவில் பயன்படுத்தப்படும்.
மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்படும் . மாணவர்களிடம் தலைமைப்பண்பு , நல்லொழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த விழுமியங்களை வளர்க்க மண்டல மாநில அளவில் சாரண சாரணியர் முகாம்கள் நடத்தப்படும் . மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்து அவர்தம் படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களுக்கென பல்வேறு இதழ்கள் வெளிவரவிருக்கின்றன.


3 - 5 வகுப்பு மாணவர்களுக்கு ' ஊஞ்சல் ' என்கிற இதழும் .6-9 மாணவர்களுக்கு ' தேன் சிட்டு ' என்கிற இதழும் வெளிவரவிருக்கின்றன . மேலும் , ஆசிரியர்களுக்கென நாட்டிலேயே முதல்முறையாக ‘ கனவு ஆசிரியர் ' என்கிற இதழும் வெளிவரவிருக்கிறது . மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் இவ்விதழ்களுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.


அன்றாட நிகழ்வுகளிலும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களிலும் உள்ள அறிவியலை அறிந்துகொள்ள வழிசெய்யும் வகையில் ' எங்கும் அறிவியல் யாவும் கணிதம் ' என்கிற புரிதலோடு அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கென STEM எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது . நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும் . 

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில் நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும் . மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும் நற்பண்புகளை உருவாக்கவும் பெற்றோரும் பள்ளிக்கூடமும் அரசும் இணைந்து அரசும் இணைந்து செயல்படவேண்டிய தேவை இருக்கிறது . அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும்.









ஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.

கோடை விடுமுறையில், மலை சுற்றுலா தலங்களில் சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவது உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

* மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்

* இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள், பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த வழிவகை செய்யப்படும்

* விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என, மாணவர்களின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்

* கலைத் திருவிழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள், கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்

* மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற, மலை சுற்றுலா தலங்களில், கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்

* வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மன நலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்

* செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்க, பள்ளிதோறும் காய்கறி தோட்டங்கள் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், சத்துணவில் பயன்படுத்தப்படும்

* மாநில சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட, ஏற்பாடுகள் செய்யப்படும்

* அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 'ஸ்டெம்' எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த, புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

* தேவைப்படும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்படும்

* மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும், நற்பண்புகளை உருவாக்கவும், பெற்றோரும், பள்ளியும், அரசும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்த, தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

முன்கூட்டியே கோடை விடுமுறை - அறிவிப்பு விரைவில் வெளியாகும் . அமைச்சர் அன்பில் மகேஷ்

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கோடை வெயில் அதிகமாக இருப்பதால் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததே மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படக்காரணம் எனவும் அமைச்சர் பேட்டி அளித்தார்.




பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

பொதுத் தேர்வு எழுத உள்ள 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு நாட்களில் தெரிந்து கொள்ள வேண்டியவை!

IMG_20220502_221439

'பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி' - அமைச்சர் அன்பில் மகேஷ்

வரும் கல்வியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம், கண்டர மாணிக்கத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், அதனால், சில விருப்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு திவீர முயற்சி எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.


மேலும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் மாநில கல்வி துறை ஒரு சிறந்த மாற்றம் பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. 




மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ .65,500 / - எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? - RTI Reply Letter.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ .65,500 / - எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா ? இல்லையா ? என்ற விவரம் வழங்கவும்




TNEMIS இனிமேல் TNSED- பெயர் மாற்றம் SCHOOL APP NEW UPDATE Version 0.0.23


TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23


UPDATED ON 01 MAY  2022


RTE Attendance Added & BMI Bug Fixed.


TN EMIS SCHOOL APP


New Updated Link.











9 வட மாவட்டங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

9 வட மாவட்டங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!


Additional 3000 posts- pay authorization letter.pdf 

'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022

 'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022