பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
Lab Assistant Duties - Proceeding - Download here
Education and Information
பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
Lab Assistant Duties - Proceeding - Download here
அவரது அறிக்கை:
* மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்
* இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள், பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த வழிவகை செய்யப்படும்
* விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என, மாணவர்களின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்
* கலைத் திருவிழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள், கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்
* மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற, மலை சுற்றுலா தலங்களில், கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்
* வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மன நலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்
* செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்க, பள்ளிதோறும் காய்கறி தோட்டங்கள் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், சத்துணவில் பயன்படுத்தப்படும்
* மாநில சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட, ஏற்பாடுகள் செய்யப்படும்
* அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 'ஸ்டெம்' எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த, புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
* தேவைப்படும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்படும்
* மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும், நற்பண்புகளை உருவாக்கவும், பெற்றோரும், பள்ளியும், அரசும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்த, தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.
வரும் கல்வியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கண்டர மாணிக்கத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அதனால், சில விருப்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு திவீர முயற்சி எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் மாநில கல்வி துறை ஒரு சிறந்த மாற்றம் பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் மையத்தில் பயிலக் கூடிய குழந்தைகளுக்கு பேஸ்லைன் சர்வே(Baseline survey) ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பேஸ்லைன் சர்வே(Baseline survey) மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும் நமது இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலரால் கீழே உள்ள PDF file-ல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Baseline survey FAQ - Download here...
மேற்கண்ட file-ஐ download செய்து Baseline survey-வை சிறப்பாக முடிக்கவும்.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பொத்தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்த பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். எனவே தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் கூறியுள்ளது.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ளது. 2021- 2022ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகளுக்கான செயல்முறை தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் அனைத்து பாடங்களில் இருந்துகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்த ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான வினாக்கள் 2021- 2022ம் ஆண்டிற்கான மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதன் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் சற்று கூடுதலாக கவனம் செலுத்தி அனைத்து பாடங்களையும் படித்து தெரிந்து இருக்க வேண்டும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள் நல்வழிகாட்டுவார்கள். பிள்ளைகளின் கவனம் படிப்பில் இருக்கும்படியாக அவர்களின் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.