மூன்றாம் பருவத் தொகுத்தறி வினாத்தாள்கள் SA 60 MARKS - வகுப்பு 1 முதல் 5 வகுப்பு
RTE 2022_2023 Admission - Dir Circular
Mutual & Union Transfer - Revised Counselling Schedule Published
மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம் சார்ந்து - திருத்திய கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் சார்பான அறிவுரைகள் , கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் எவ்வாறு பதிவேற்றம் செய்தல் மற்றும் கலந்தாய்விற்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் EMIS- ல் இணையதளத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய இயலாதநிலையில் கீழ்க்கண்ட திருத்திய காலஅட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து கல்வி அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள்.
Mutual & Union Transfer - Revised Counselling Schedule
சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? பல்வேறு கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.
சென்னை, ஆழ்வாா்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான ‘அன்பாசிரியா் விருது’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பான கல்விப்பணியோடு சமூக அக்கறையுடன் கூடிய மாணவா்களை உருவாக்கி வரும் 46 ஆசிரியா்களுக்கு, அன்பாசிரியா் விருதை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியது:
ஆசிரியா்கள் அனைவருமே பெருமைக்குரியவா்கள்தான். மாணவா்களுக்கு ஆசிரியா்கள் இரண்டாவது பெற்றோராகத் திகழ்கின்றனா். சமுதாயம் அறவழியில் நடைபெறுவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. முதல்வா் அமைத்துள்ள பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகவும், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாகவும் அரசுப் பள்ளி மாணவா்கள், அரசு ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி நிறைவடைந்துள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
நீட் தோ்வு தமிழகத்தில் இல்லாமல் செய்வதே அரசின் நோக்கம். அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 148 கோரிக்கைகளை பள்ளி கல்வித் துறையிடம் முன்மொழிந்துள்ளனா். இதில் 40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் ஏற்புடையதாக உள்ளன. முக்கியமாக அரசாணை 101, 108 ஆகியவற்றை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். அதை முதல்வா் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன்; பரிசீலனையில் உள்ளது.
சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளிகள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
EMIS- APP - & WEBSITE NOW WORKING | EMIS APP மற்றும் இணையதளம் இன்று வேலை செய்கிறது
CBSE Exam முதல் NEET Exam வரை - ஏப்ரல் மாதத்தில் முக்கியமான கல்வி நிகழ்வுகள்.!
இந்த ஏப்ரல் மாதத்தில், கல்வி சார்ந்த மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன. குறிப்பாக, முதல் முறையாக நடத்தப்பட உள்ள ஒற்றை கல்லூரி நுழைவுத் தேர்வு, 30 லட்சம் மாணவர்களுக்கு தொடங்க உள்ள சிபிஎஸ்இ தேர்வுகள், தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வு - ஜேஇஇ மெயின்ஸ் ஆகியவை இதில் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள முக்கிய தேர்வுகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சியூஇடி மாணவர் சேர்க்கை :
நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பல்கலைக்கழகங்களுக்கான ஒரே நுழைவுத் தேர்வு (சியூஇடி) நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கான பதிவு நடவடிக்கைகளை தேசிய திறனாய்வு முகமை (என்டிஏ) கடந்த 6ஆம் தேதி தொடங்கியது .
ஜேஇஇ மெயின்ஸ் அனுமதிச்சீட்டு :
ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு முதல் செஷனுக்கான அனுமதிச்சீட்டுகள் ஏப்ரல் 3ஆவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. பொறியியல் நுழைவுத் தேர்வின் முதல் அமர்வு என்பது ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு தேர்வுக்கான பதிவு என்பது ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதற்குப் பிறகு இரண்டாம் அமர்வுக்கான விண்ணப்ப நடவடிக்கை தொடங்கும். இரண்டாம் அமர்வு தேர்வு என்பது மே 24, 25, 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சிஐஎஸ்சிஇ வாரிய தேர்வுகள் :
சிஐஎஸ்சிஇ கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது.
இரண்டாம் பருவத் தேர்வுகள் 1.5 மணி நேர கால அளவில் நடைபெற உள்ளன. கேள்வித் தாள்களைப் படித்துப் பார்ப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். தேர்வு நடைபெறும் நாளில் நண்பகல் 1.50 மணியளவில் மாணவர்களுக்கு கேள்வித் தாள்கள் வழங்கப்படும்.
சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் :
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்க உள்ளன.
இரண்டு வகுப்புகளுக்குமே தேர்வு என்பது காலை 10.15 மணிக்கு தொடங்கும். கேள்வித் தாள்களை படிப்பதற்காக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
நீட் தேர்வு அறிவிக்கை :
நீட் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6 தேதி முதல் தொடங்கியது. ஏப்ரல் 6 தேதி முதல் மாணாக்கர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து வழிகாட்டுதல் - நான் முதல்வன் என்ற இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!
Click here to download Pdf file
6 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை!
SMC மறுகட்டமைப்பு நடைபெறும் நாட்கள் - SPD Proceeding
SMC
EMIS WEBSITE வரும் 17ந்தேதி வரை செயல்படாது
- TN School Education Department
சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது : தமிழ் நாடு அரசு
ஆண்டுதோறும் 100 சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது - பள்ளிக்கு ரூ.10 இலட்சம் ஊக்க நிதி வழங்கப்படும் சட்டப் பேரைவையில் பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் அறிவிப்பு.
சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
கல்வி , விளையாட்டு , மாணவர் மேம்பாடு . பள்ளிக் கட்டமைப்பு , பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு . இல்லம் தேடிக் கல்வி என அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் .
ஆண்டுதோறும் 100 தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் , கேடயமும் . பள்ளிக்கு ரூ .10 இலட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும் .
பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2022 - அமைச்சர் அறிவிப்பு.
- 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது
- 100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்
- 9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%
- 11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% -
- பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை
- அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் -
- பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை
click here to download pdf file
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய உத்தரவு.
அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமை ஒன்றியங்களின் பட்டியல் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு / அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி அலகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சார்பான நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் ஒட்டுமொத்த ஒன்றியங்களில் அதிகளவு எண்ணிக்கையில் காலிப்பணியிடம் உள்ள ஒன்றியங்களிலிருந்து 10 விழுக்காடுகளுக்கு மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்களாக ( Priority Block ) தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு கீழ்க்கண்டவாறு 40 ஒன்றியங்கள் முன்னுரிமை ஒன்றியங்களாக அறிவித்து பார்வை -2 ல்காணும் செயல்முறைகளின்படி.ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் வட்டாரங்களுக்கு மட்டுமே அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப் படும்.மற்ற ஒன்றியங்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப்பட மாட்டாது.
கற்றல் விளைவுகள் - எண் குறியீடு -pdf
Click here to download pdf file
ஜே.இ.இ.,(JEE) நுழைவு தேர்வு நாளை முதல் விண்ணப்பம்
TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23
இல்லம் தேடிக் கல்வி (ITK) Mobile App New Version Available Here!!!
Click here to download new version
பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு - PDF
பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு - PDF
Click here to download
பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!
புதிய கல்விக் கொள்கை..! வல்லுநர்கள் குழு..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில், பேராசிரியர்கள் எல்.ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்பட 13 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்திற்கான தனித்துவமான கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும் என்றும் மாநில கல்வி கொள்கை குழு, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (EMIS) சார்ந்த இடர்பாடுகள் மற்றும் ஆலோசனைகள், அவற்றிற்கான தீர்வுகள்...
Click here to download pdf -1
Click here to download pdf -2
Click here to download pdf -3
900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!
எண்ணும் எழுத்தும் பயிற்சி Module 3 - Question and Answer
- எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் – QUESTIONS - Download here
- எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் - ANSWER KEY - Download here
- எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் - 3rd Modules direct link - click here
கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் விவரங்கள்
எண்ணும் எழுத்தும் பயிற்சி - முன்றாவது கட்டகம் Direct Link
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி முதல், மே31ம் தேதி வரை தேர்வு நடைபெறும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே.5ம் தேதி தொடங்கி மே.28ம் தேதி முடிவடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டதாக அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது. அதில், 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை எனவும் 6-முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்ததுடன் கண்டிப்பாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால், 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத்தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
How to Change Marksheet Error
பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்றிரவு தேர்வு ரத்து என செய்தி வெளியான நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.