பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவு.

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் நவம்பர் 21-முதல் ஏப்ரல்-22 வரை 6 மாதத்திற்கான ஊதியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவு. 


இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள்களை அந்தந்த பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்யலாம் - CEO

இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள்களை அந்தந்த பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்






பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை எளிய மக்களுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொள்கை அடிப்படையில் ஆட்சி செய்கிறோம். நாங்கள் அரசியல் லட்சியவாதிகள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் முதல்-அமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையான உரிமை பெற்று தரப்படும். தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல. வளர்ந்த மாநிலமாகும்.
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

நிதி துறையில் ஒற்றை சாளர முறையில் பயனாளிகளுக்கு சலுகைகள் சென்றடைய சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டம் வரும் ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும்.

19 சட்ட மசோதாக்கள் இதுவரை நிலுவையில் உள்ளது. இதனால் அரசாணை வெளியிட முடியவில்லை.

பல சட்டங்கள் கவர்னரும், ஜனாதிபதியும் கையெழுத்திடாமல் நிலுவையில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியாத நிலை உள்ளது.


நிபுணர்கள் குழு துறை வாரியாக கலந்து ஆலோசித்து எங்களுக்கு உதவி செய்கிறார்கள். பல்வேறு அறிவுரைகளையும் வழங்குகின்றன.

இல்லம் தேடி கல்வி திட்டம், குறு-சிறு நடுத்தர தொழில்களுக்கும் நிபுணர்களின் பங்களிப்பு உள்ளது. ஒரு ரூபாய் கூட வாங்காமல் பொருளாதார நிபுணர்கள் சேவை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.



தொடக்கக் கல்வி - 2022-23 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 95 வட்டாரக் கல்வி அலுவவர்களுக்கு ( Direct Recruitment BEOs ) நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு தயார்படுத்துவதற்கான அறிமுகப் பயிற்சி 28.03.2022 முதல் 30.03.2022 வரை மூன்று நாள்கள் - உண்டு உறைவிடப் பயிற்சி வழங்குதல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 


ITK - பணியில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க நிதி விடுவிப்பு.

இல்லம் தேடிக் கல்வி திட்டம் - தன்னர்வலர்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் குறுவள மைய அளவில் நடைபெற்ற கல்விகண்காட்சியினை ஆவணப்படுத்துதல் மற்றும் சான்றிதழ் அச்சிட்டு வழங்குதலின் செலவின விவரம் - நிதி விடுவித்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.










Public Exam - மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு கூடுதல் அவகாசம்!

10,11ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு.

பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி

*கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி
 
பொதுத்தேர்வு நடைபெறும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது

"பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள்" - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது,..

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். 

சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் 

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப்பள்ளிகளில் சமீபகாலமாக மாணவர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆசிரியர்கள் ஆளாகி வருகின்றனர் 

இதனால் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்ற ஆசிரியர்களின் குரல் ஓங்கியுள்ளது

பிற உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா?


தமிழகத்தில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்."

" தமிழகத்தில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற, மாணவிகள் ஆறு முதல் 10ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும். 

அதே வேளையில், இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில்,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட் உரையில்,பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்  என்றார் மகாகவி.ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989 ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது.மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்றுமேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில்இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. 

இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவுசெலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.


புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார்.மேலும் உயர்கல்வித் துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்..தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதற்கேற்ப, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இம்மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது."

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | தமிழ் | இலக்கணம் | மயங்கொலிச் சொற்கள் | KalviTv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | தமிழ் | இலக்கணம் | மயங்கொலிச் சொற்கள் | KalviTv








Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | தமிழ் | இலக்கணம் | மயங்கொலிச் சொற்கள் | KalviTv

வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | சமூக அறிவியல் | சமூக அறிவியல் ஓர் அறிமுகம் | அலகு 1 | KalviTv

வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | சமூக அறிவியல் | சமூக அறிவியல் ஓர் அறிமுகம் | அலகு 1 | KalviTv





வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | சமூக அறிவியல் | சமூக அறிவியல் ஓர் அறிமுகம் | அலகு 1 | KalviTv

Class 6 | Bridge course | English | Grammar | Types of Pronouns | Unit 3 | KalviTv

Class 6 | Bridge course | English | Grammar | Types of Pronouns | Unit 3 | KalviTv







Class 6 | Bridge course | English | Grammar | Types of Pronouns | Unit 3 | KalviTv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | அறிவியல் | நமது சுற்றுச்சூழல் | அலகு 1 | KalviTv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | அறிவியல் | நமது சுற்றுச்சூழல் | அலகு 1 | KalviTv





Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | அறிவியல் | நமது சுற்றுச்சூழல் | அலகு 1 | KalviTv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | கணக்கு | வடிவியல் | அலகு 1 | KalviTv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | கணக்கு | வடிவியல் | அலகு 1 | KalviTv





Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | கணக்கு | வடிவியல் | அலகு 1 | KalviTv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | சமூகஅறிவியல் | வரலாற்றுச்சான்றுகள் |அலகு 2 | KalviTv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | சமூகஅறிவியல் | வரலாற்றுச்சான்றுகள் |அலகு 2 | KalviTv






Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | சமூகஅறிவியல் | வரலாற்றுச்சான்றுகள் |அலகு 2 | KalviTv

வகுப்பு 6 | இணைப்பு பாடப் பயிற்சி | தமிழ் | படித்தல் திறன், பயிற்சி திறன் | அலகு 1 | Kalvi Tv

வகுப்பு 6 | இணைப்பு பாடப் பயிற்சி | தமிழ் | படித்தல் திறன், பயிற்சி திறன் | அலகு 1 | Kalvi Tv






வகுப்பு 6 | இணைப்பு பாடப் பயிற்சி | தமிழ் | படித்தல் திறன், பயிற்சி திறன் | அலகு 1 | Kalvi Tv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | கணக்கு | எண்களின் கூட்டலும், பெருக்களும் | KalviTv

Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | கணக்கு | எண்களின் கூட்டலும், பெருக்களும் | KalviTv






Class 6 | வகுப்பு 6 | இணைப்புப் பாடப் பயிற்சி | கணக்கு | எண்களின் கூட்டலும், பெருக்களும் | KalviTv


கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து , வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி , கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான ஒளிபரப்பினை தொடங்கி வைத்தார்.






நாளை ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலின் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் குண்டம் நாளான நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தால், இந்த விடுமுறை பொருந்தாது. முன்கூட்டியே தேர்வுகள் அறிவித்தபடி நடக்கும்.

மேலும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது.

இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் வரும் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மகளிர் கல்விக்காக மிகப்பெரிய திட்டம்? - அமைச்சர் பொன்முடி


மகளிருக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக நிரம்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
கேள்வி நேரத்தின்போது மண்ணச்சநல்லூர் உறுப்பினர் கதிரவனுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் மகளிர் கல்விக்காக மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், எந்தக் கல்லூரியில் மாணவியர் சேர்ந்தாலும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டார். 

ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெண்கள் அவ்வளவாக சேருவதில்லை எனவும், இந்த எண்ணிக்கையை உயர்த்தவே உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார். 

மேலும் இதன்மூலம் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள பெண்கள் இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக நிரம்பும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உயர் கல்வித்துறைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகள் பல, அதில் அரசின் சார்பாக 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக 10 கலைக் கல்லூரிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1 கலைக் கல்லூரியும் என்று மொத்தம் 21 கலைக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi Tech Labன் தற்போதைய நிலை குறித்து அறிக்கை கோருதல் சார்பு

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi Tech Labன் தற்போதைய நிலை குறித்து அறிக்கை கோருதல் சார்பு




5TH STD -LESSON PLAN GUIDE- 3rd TERM

5TH STD -LESSON PLAN GUIDE- 3rd TERM 
5TH STD -LESSON PLAN GUIDE- 3rd TERM 




பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - SPD வெளியீடு.

2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு - பள்ளி மானியத்‌ தொகையை (Composite School Grant) மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்.


EMIS Portal- லில் நிதித் தொகுதியில் மாற்றங்கள் :

1. பெறப்பட்ட மொத்தத் தொகையில் 1/5 வரை ரொக்கமாக செலவழிக்கலாம்.

2. பள்ளிகள் ஜூன் 1 , 2021 முதல் இன்று வரை வருமானத்தைப் பதிவிடலாம் . தொகை , கணக்குத் தலைப்பு அல்லது தேதியில் பிழை ஏற்பட்டால் , இந்தத்தகவலைத் திருத்தலாம்.


3. வாங்கிய தேதியிலிருந்து 7 நாட்கள் வரை பள்ளிகள் தங்கள் விலைப்பட்டியலை பதிவேற்றலாம் . ஒரு முறை பதிவேற்றிய விலைப்பட்டியலைத் திருத்த இயலாது . விலைப்பட்டியல் விவரங்கள் தவறாக இருந்தால் , விலைப்பட்டியல் நீக்கப்பட்டலாம் மற்றும் புதிய விலைப் பட்டியலை பதிவிடலாம்.

4. பள்ளிகள் ஜூன் 1 , 2021 முதல் கொள்முதலுக்கான விலைப்பட்டியலைப் பதிவேற்றலாம் . தற்போதைய தேதியின் படி ஏழு நாட்களுக்கு முன்புள்ள செலவினங்களைப் பதிவு செய்ய AAM ( Audit & Accounts Management ) இன் ஒப்புதலை Invoice பெறுதல் அவசியம் . அதுவரை , விலைப்பட்டியல் நிலுவையில் உள்ளதாகக் குறிக்கப்படும்.

5. போதுமான ஆவணங்கள் இல்லாவிட்டால் , AAM விலைப்பட்டியலை ( குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே ) , குறிப்புகளுடன் நிராகரிக்கலாம் . பள்ளிகள் இந்த விலைப் பட்டியலை நீக்கலாம் மேலும் AAM யின் கருத்துகளுக்கு ஏற்ப பதிய ஒன்றை பதிவேற்றலாம்.

6. பள்ளிகள் செலவினத்தையும் தேதியையும் மட்டும் திருத்தலாம் . எனினும் , கணக்குத் தலைப்பைத் திருத்த முடியாது . இது போன்ற பதிவிடலில் , பள்ளி செலவினத்துடன் இணைக்கப்பட்ட விலைப்பட்டியலை நீக்கி விட்டு புதிய ஒன்றை பதிவேற்றலாம்.

பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate ) பெற்று மாவட்ட அளவில் தொகுத்து ( தொடக்க நிலை / இடைநிலை தனித்தனியாக ) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் மாநில திட்ட இயக்ககத்திற்கு 10.04.2022 -- க்குள் தவறாமல் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கையொப்பமிடப்பட்டது அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்




ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி!

 'ஒன்பதாம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.





தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பருடன் மாணவர் சேர்க்கை நிறுத்தி கொள்ளப்படும். அதன்பின், மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதி விலக்கு காரணமாக, டிசம்பர் வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், பல தனியார்பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியின், மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மாநில திட்ட இயக்குனர் சுதன் அனுப்பிய சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, தொழிற்கல்வி, முதுநிலை, உடற்கல்வி, கணினி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு, கணினி வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.


வரும், 14ம் தேதி முதல் ஆன்லைன் வழியில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. தமிழகம் முழுதும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 13 ஆயிரத்து, 131 பேர் இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு 14.03.2022 அன்று ஒருநாள் இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 14.03.2022 அன்று ஒருநாள் இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!







தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர கோரிக்கை!

தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர கோரிக்கை!


தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர வேண்டும் ..!!!
சபாநாயகர் அப்பாவு மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பு குறித்தான எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.


அதே சமயத்தில், கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின் போது, புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், கணினி ஆசிரியர்கள் நீண்ட வருட கோரிக்கையான தொடக்க கல்வியில் கணினி அறிவியல் பாடதிட்டத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும், அடிப்படை ஊதியத்தில் பி.எட் பயின்ற கணினி அறிவியல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழக பட்ஜெட் 2022:

இதுகுறித்து பி.எட் கணினி அறிவியல் பயின்ற வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, தனியார் பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைப்பதில்லை. இன்றைய கணினி உலகத்தில், அரசு பள்ளி மாணவர்கள் வேலை வாய்ப்பில் பின்தங்குகின்றனர்.



இதனை கருத்தில் கொண்டு, முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்கள், கணினி அறிவியல் பாடத்திட்டத்தை அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தி அசத்தினார். அதன்பின் வந்த அதிமுக ஆட்சி கணினி அறிவியல் கல்வி திட்டத்தை முடக்கிவைத்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய கணினி கல்வி கிடைக்காமல் பள்ளி படிப்பை முடித்து வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேற்றக்கோரி, மத்திய, மாநில அரசுகளிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அரசுகள் எங்கள் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணிக்கிறது

கணினி ஆசிரியர்கள்

திமுக ஆட்சி 2021ல் ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகும் கூட, கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு நிலைகளில் பல முறை மனு அளிக்கப்பட்டு, 1100 தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை தெரிவித்து வந்தோம். ஆனால், எந்த முன்னேற்றம் இல்லை.



முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்த போது, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கோரிக்கையின் தன்மையை என்னவென்று புரிந்து கொள்ளாமல், அதனை உயர் அதிகாரிகள் வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மாறாக, மாவட்ட முதன்மை கல்வி கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.



முதன்மை கல்வி அலுவலர்களும், இது மாநில அரசின் கொள்கை முடிவு என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கின்றனர். அடிப்படை புாிதல் இல்லாமல், முதல்வர் தனிப்பிரிவில் இதுபோன்று அதிகாரிகள் பணியாற்றுவது எந்தவொரு மக்கள் பிரச்னைக்கும் தீர்வு அளிக்காது. பள்ளி கல்வி அமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது, அவர் இந்த விஷயத்தில் அமைதி காப்பது, அரசின் கொள்கை முடிவு என்னதான் என்று கேள்வி கேட்க தோன்றுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் நலன் கருதி தொடக்க கல்வியில் கணினி கல்வி அறிமுகம் செய்ய வேண்டும், இது சார்ந்து இருக்கும் கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பாக வெளியிட்டு, அதனை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.



திரு வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.