தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து , வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி , கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான ஒளிபரப்பினை தொடங்கி வைத்தார்.
நாளை ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலின் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது.
இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் வரும் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மகளிர் கல்விக்காக மிகப்பெரிய திட்டம்? - அமைச்சர் பொன்முடி
மகளிருக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக நிரம்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
கேள்வி நேரத்தின்போது மண்ணச்சநல்லூர் உறுப்பினர் கதிரவனுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் மகளிர் கல்விக்காக மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், எந்தக் கல்லூரியில் மாணவியர் சேர்ந்தாலும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெண்கள் அவ்வளவாக சேருவதில்லை எனவும், இந்த எண்ணிக்கையை உயர்த்தவே உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் இதன்மூலம் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள பெண்கள் இடங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக நிரம்பும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், உயர் கல்வித்துறைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகள் பல, அதில் அரசின் சார்பாக 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக 10 கலைக் கல்லூரிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1 கலைக் கல்லூரியும் என்று மொத்தம் 21 கலைக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi Tech Labன் தற்போதைய நிலை குறித்து அறிக்கை கோருதல் சார்பு
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi Tech Labன் தற்போதைய நிலை குறித்து அறிக்கை கோருதல் சார்பு
பள்ளி மானியத் தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - SPD வெளியீடு.
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகையை (Composite School Grant) மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள்.
EMIS Portal- லில் நிதித் தொகுதியில் மாற்றங்கள் :
1. பெறப்பட்ட மொத்தத் தொகையில் 1/5 வரை ரொக்கமாக செலவழிக்கலாம்.
2. பள்ளிகள் ஜூன் 1 , 2021 முதல் இன்று வரை வருமானத்தைப் பதிவிடலாம் . தொகை , கணக்குத் தலைப்பு அல்லது தேதியில் பிழை ஏற்பட்டால் , இந்தத்தகவலைத் திருத்தலாம்.
3. வாங்கிய தேதியிலிருந்து 7 நாட்கள் வரை பள்ளிகள் தங்கள் விலைப்பட்டியலை பதிவேற்றலாம் . ஒரு முறை பதிவேற்றிய விலைப்பட்டியலைத் திருத்த இயலாது . விலைப்பட்டியல் விவரங்கள் தவறாக இருந்தால் , விலைப்பட்டியல் நீக்கப்பட்டலாம் மற்றும் புதிய விலைப் பட்டியலை பதிவிடலாம்.
4. பள்ளிகள் ஜூன் 1 , 2021 முதல் கொள்முதலுக்கான விலைப்பட்டியலைப் பதிவேற்றலாம் . தற்போதைய தேதியின் படி ஏழு நாட்களுக்கு முன்புள்ள செலவினங்களைப் பதிவு செய்ய AAM ( Audit & Accounts Management ) இன் ஒப்புதலை Invoice பெறுதல் அவசியம் . அதுவரை , விலைப்பட்டியல் நிலுவையில் உள்ளதாகக் குறிக்கப்படும்.
5. போதுமான ஆவணங்கள் இல்லாவிட்டால் , AAM விலைப்பட்டியலை ( குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே ) , குறிப்புகளுடன் நிராகரிக்கலாம் . பள்ளிகள் இந்த விலைப் பட்டியலை நீக்கலாம் மேலும் AAM யின் கருத்துகளுக்கு ஏற்ப பதிய ஒன்றை பதிவேற்றலாம்.
6. பள்ளிகள் செலவினத்தையும் தேதியையும் மட்டும் திருத்தலாம் . எனினும் , கணக்குத் தலைப்பைத் திருத்த முடியாது . இது போன்ற பதிவிடலில் , பள்ளி செலவினத்துடன் இணைக்கப்பட்ட விலைப்பட்டியலை நீக்கி விட்டு புதிய ஒன்றை பதிவேற்றலாம்.
பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate ) பெற்று மாவட்ட அளவில் தொகுத்து ( தொடக்க நிலை / இடைநிலை தனித்தனியாக ) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் மாநில திட்ட இயக்ககத்திற்கு 10.04.2022 -- க்குள் தவறாமல் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கையொப்பமிடப்பட்டது அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி!
'ஒன்பதாம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பருடன் மாணவர் சேர்க்கை நிறுத்தி கொள்ளப்படும். அதன்பின், மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதி விலக்கு காரணமாக, டிசம்பர் வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், பல தனியார்பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.
13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி பயிற்சி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியின், மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மாநில திட்ட இயக்குனர் சுதன் அனுப்பிய சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, தொழிற்கல்வி, முதுநிலை, உடற்கல்வி, கணினி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு, கணினி வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
வரும், 14ம் தேதி முதல் ஆன்லைன் வழியில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. தமிழகம் முழுதும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 13 ஆயிரத்து, 131 பேர் இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு 14.03.2022 அன்று ஒருநாள் இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 14.03.2022 அன்று ஒருநாள் இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர கோரிக்கை!
தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர கோரிக்கை!
தமிழக பட்ஜெட் 2022: கலைஞரின் கனவுத் திட்டமான அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக தமிழக அரசு கொண்டு வர வேண்டும் ..!!!
சபாநாயகர் அப்பாவு மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பு குறித்தான எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.
அதே சமயத்தில், கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின் போது, புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், கணினி ஆசிரியர்கள் நீண்ட வருட கோரிக்கையான தொடக்க கல்வியில் கணினி அறிவியல் பாடதிட்டத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும், அடிப்படை ஊதியத்தில் பி.எட் பயின்ற கணினி அறிவியல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக பட்ஜெட் 2022:
இதுகுறித்து பி.எட் கணினி அறிவியல் பயின்ற வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, தனியார் பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைப்பதில்லை. இன்றைய கணினி உலகத்தில், அரசு பள்ளி மாணவர்கள் வேலை வாய்ப்பில் பின்தங்குகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்கள், கணினி அறிவியல் பாடத்திட்டத்தை அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தி அசத்தினார். அதன்பின் வந்த அதிமுக ஆட்சி கணினி அறிவியல் கல்வி திட்டத்தை முடக்கிவைத்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய கணினி கல்வி கிடைக்காமல் பள்ளி படிப்பை முடித்து வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேற்றக்கோரி, மத்திய, மாநில அரசுகளிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அரசுகள் எங்கள் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணிக்கிறது
கணினி ஆசிரியர்கள்
திமுக ஆட்சி 2021ல் ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகும் கூட, கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு நிலைகளில் பல முறை மனு அளிக்கப்பட்டு, 1100 தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை தெரிவித்து வந்தோம். ஆனால், எந்த முன்னேற்றம் இல்லை.
முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்த போது, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கோரிக்கையின் தன்மையை என்னவென்று புரிந்து கொள்ளாமல், அதனை உயர் அதிகாரிகள் வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மாறாக, மாவட்ட முதன்மை கல்வி கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
முதன்மை கல்வி அலுவலர்களும், இது மாநில அரசின் கொள்கை முடிவு என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கின்றனர். அடிப்படை புாிதல் இல்லாமல், முதல்வர் தனிப்பிரிவில் இதுபோன்று அதிகாரிகள் பணியாற்றுவது எந்தவொரு மக்கள் பிரச்னைக்கும் தீர்வு அளிக்காது. பள்ளி கல்வி அமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது, அவர் இந்த விஷயத்தில் அமைதி காப்பது, அரசின் கொள்கை முடிவு என்னதான் என்று கேள்வி கேட்க தோன்றுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் நலன் கருதி தொடக்க கல்வியில் கணினி கல்வி அறிமுகம் செய்ய வேண்டும், இது சார்ந்து இருக்கும் கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பாக வெளியிட்டு, அதனை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் காலிப்பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடம் - 15.03.2022 முதல் 14.03.2025 வரை ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளி மேலாண்மைக் குழு - SMC Social Audit Form
அனைத்து மேற்பார்வையாளர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு.
பள்ளி மேலாண்மைக் குழு - பள்ளி வளர்ச்சி திட்டம். (SMC - SDP) 2020-2021 (Last Academic year) கல்வியாண்டிற்கு கீழ்கண்ட படிவத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் 12.03.2022 க்குள் பூர்த்தி செய்து,EMIS இல் 13.03.2022 க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
2020-2021 ஆண்டிற்கான SMC தலைவர் கையொப்பம் பெறுதல் வேண்டும்)
மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...
SMC உறுப்பினர்கள்
2021 - 2022 மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...
1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்)
2. து.தலைவர் - 1 IED மாணவரின் பெற்றோர் (பெண்)
3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)
4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்
5. பெற்றோர்கள்(பெண்) - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)
6. பெற்றோர்கள்(பெண்)
7. பெற்றோர்கள்(பெண்)
8. பெற்றோர்கள்(பெண்)
9. பெற்றோர்கள்(பெண்)
10 பெற்றோர்கள்(பெண்)
11. பெற்றோர்கள்(பெண்)
12. பெற்றோர்கள்(ஆண்)
13. பெற்றோர்கள்(ஆண்)
14 பெற்றோர்கள்(ஆண்)
15 பெற்றோர்கள்(ஆண்)
16. பெற்றோர்கள்(ஆண்)
17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர்
இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.
18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.
19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1
20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1
மொத்தம் - 20 நபர்
50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
SMC - SDP 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!
SMC - SDP 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!
பள்ளி மேலாண்மைக் குழு (SMC - School Management Committee) - பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SDP - School Development Plan) 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 449/ C7/ SMC/ SS/ 2021, நாள்: -03-2022 - இணைப்பு : சமூகத் தணிக்கை ஆய்வுப் படிவம் (Social Audit Questionnaire - SAQ) 2020 - 2021...
மார்ச் 16, 17 - ல் பள்ளிகள் ஆய்வு செய்ய குழு அமைத்து இயக்குநர் உத்தரவு.
ஏற்கனவே 3 மண்டல ஆய்வு நடைபெற்ற நிலையில் தற்போது நான்கவது கட்டமாக சேலம் மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குழு வருகிற மார்ச் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு செய்து 17ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தங்களது பள்ளி ஆய்வு கருத்துக்களை எடுத்துரைப்பர் என பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.