உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் காலிப்பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடம் - 15.03.2022 முதல் 14.03.2025 வரை ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளி மேலாண்மைக் குழு - SMC Social Audit Form
அனைத்து மேற்பார்வையாளர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு.
பள்ளி மேலாண்மைக் குழு - பள்ளி வளர்ச்சி திட்டம். (SMC - SDP) 2020-2021 (Last Academic year) கல்வியாண்டிற்கு கீழ்கண்ட படிவத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் 12.03.2022 க்குள் பூர்த்தி செய்து,EMIS இல் 13.03.2022 க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
2020-2021 ஆண்டிற்கான SMC தலைவர் கையொப்பம் பெறுதல் வேண்டும்)
மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...
SMC உறுப்பினர்கள்
2021 - 2022 மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...
1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்)
2. து.தலைவர் - 1 IED மாணவரின் பெற்றோர் (பெண்)
3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)
4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்
5. பெற்றோர்கள்(பெண்) - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)
6. பெற்றோர்கள்(பெண்)
7. பெற்றோர்கள்(பெண்)
8. பெற்றோர்கள்(பெண்)
9. பெற்றோர்கள்(பெண்)
10 பெற்றோர்கள்(பெண்)
11. பெற்றோர்கள்(பெண்)
12. பெற்றோர்கள்(ஆண்)
13. பெற்றோர்கள்(ஆண்)
14 பெற்றோர்கள்(ஆண்)
15 பெற்றோர்கள்(ஆண்)
16. பெற்றோர்கள்(ஆண்)
17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர்
இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.
18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.
19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1
20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1
மொத்தம் - 20 நபர்
50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
SMC - SDP 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!
SMC - SDP 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!
பள்ளி மேலாண்மைக் குழு (SMC - School Management Committee) - பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SDP - School Development Plan) 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 449/ C7/ SMC/ SS/ 2021, நாள்: -03-2022 - இணைப்பு : சமூகத் தணிக்கை ஆய்வுப் படிவம் (Social Audit Questionnaire - SAQ) 2020 - 2021...
மார்ச் 16, 17 - ல் பள்ளிகள் ஆய்வு செய்ய குழு அமைத்து இயக்குநர் உத்தரவு.
ஏற்கனவே 3 மண்டல ஆய்வு நடைபெற்ற நிலையில் தற்போது நான்கவது கட்டமாக சேலம் மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குழு வருகிற மார்ச் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு செய்து 17ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தங்களது பள்ளி ஆய்வு கருத்துக்களை எடுத்துரைப்பர் என பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு .| DGE Proceedings And Apply Form
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு .| DGE Proceedings And Apply Form
மே 2022 , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள் , இவ்வியக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சோத் தவறிய தனித்தேர்வர்கள் . 09.03.2022 ( புதன் கிழமை ) முதல் 15.03.2022 ( செவ்வாய் கிழமை ) வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி , பதிவுக்கட்டணமாக ரூ .125 / - ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது .
மேலும் , அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உடன் , மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்து விட்டு , மே 2022 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு 09.03.2022 முதல் 16.03.2022 வரை அறிவியல் பாடம் கருத்தியல் உட்பட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கும் ( அனைத்து / தவறிய பாடங்கள் ) அச்சேவை மையங்களின் மூலம் தனியாக ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
குறிப்பு :
1. எட்டாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்று தேர்ச்சி அல்லது இடையில் நின்ற மாணாக்கர்கள் , தேர்வுத்துறையால் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு ( ESLC ) பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் நேரடித் தனித் தேர்வர்கள் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடம் கருத்தியல் / செய்முறைத் தேர்வு எழுத வேண்டும் .
2. 2012 - ஆம் ஆண்டிற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற மாணாக்கர்கள் அறிவியல் பாடத்தில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வெழுத வேண்டும் . அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 09.03.2022 முதல் 15.03.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் மையம் போன்ற முழுவிவரங்களை அறிய அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு : கல்வித் துறை அதிகாரிகள் தகவல்
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு
தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெறும். அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம்.
அதனால் 1 முதல் 5-ம் வகுப்புவரை பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத் துறை மூலமாக மாநில, மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மே 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் அனைத்து கல்விசார் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு, மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி வரை கோடைவிடுமுறை விடப்படும். விடுமுறை முடிந்து 2022-23 கல்வி ஆண்டுக்காக ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்குமார்ச் இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஏப்ரலில் பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடக்கும் என திருச்சியில் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்
அனைத்து தொடக்க/ நடுநிலை பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம் இரண்டாம் கட்டமாக 50% தொகை விடுவிப்பு
அனைத்து தொடக்க/ நடுநிலை பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம் இரண்டாம் கட்டமாக 50% தொகை விடுவிப்பு
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடைபெறுதல்- கூட்டப் பொருள் அனுப்புதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடைபெறுதல்- கூட்டப் பொருள் அனுப்புதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!
தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கான விதிகளில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு.
தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கான விதிகள் - பள்ளிக் கல்வித் துறை - தேர்வுத் தகுதியை மாற்றியமைத்தல் - சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு – புதிய அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!
ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு – புதிய அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!
ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நாளை தொடங்குகிறது. நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், 2021-22-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன்படி, அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை -1, உடற்பயிற்சி இயக்குநர் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நாளை தொடங்கும் நிலையில், 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
புதிய கல்வி கொள்கைப்படி பொது தேர்வில் மாற்றம்
புதிய கல்வி கொள்கைப்படி, திறன் வளர்ப்புக்கான கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள், பள்ளி பொதுத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை, அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு, மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு சார்பில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், கூடுதலாக திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடத்துக்கான, தேர்வு தேதிகள் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே, தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல், மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல், 10ம் வகுப்புக்கு இதுவரை தொழிற்கல்வி பாடமும், அதற்கான தேர்வும் கிடையாது. பிற மாநிலத்தவருக்கான விருப்ப மொழி பாடம் மட்டுமே கூடுதலாக இடம்பெறும். இந்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப மொழி பாடம் மட்டுமின்றி, கூடுதலாக தொழிற்கல்வி பாடத்துக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 10ம் வகுப்புக்கு மே 21; பிளஸ் 2க்கு மே 28ம் தேதி, திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.புதிய கல்வி கொள்கையில் அறிவுறுத்தப்பட்டு உள்ள தொழிற்கல்வி பாடங்கள், மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில், இந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டுள்ளன.
'தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம்' என அரசு அறிவித்தாலும், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், அதன் அம்சங்கள் படிப்படியாக அமலுக்கு வர துவங்கி உள்ளன.
பள்ளிகளில் வாரந்தோறும் கூட்டு உடற்பயிற்சி - பள்ளிக் கல்வி துறை உத்தரவு.
பள்ளி மாணவர்களுக்கு வாரந்தோறும் கூட்டு உடற்பயிற்சி நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது..
தமிழக பள்ளிக் கல்வி துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:உடற்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உடற்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.
மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்க, உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உலக உடற்திறனாய்வு தேர்வை, 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு நடத்த வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்களுக்கு, கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும்.மாணவ - மாணவியரை இரு அணிகளாக பிரித்து, அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகளை விளையாட வைத்து, ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரையும் பள்ளியில் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கேற்க பயிற்சி அளிக்க வேண்டும்.
உடற்பயிற்சிக்கான பாட குறிப்புகள், விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி, விளையாட வைத்த பதிவேடு, உடல் திறனாய்வு தேர்வு பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை முறைப்படி பராமரித்து, அதிகாரி களின் ஆய்வில் சமர்ப்பிக்க வேண்டும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை- பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது.
இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டு அதற்கு வரும் மே 21-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சமான தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு என்பதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தொழிற்கல்வி பாடத்துக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் தமிழ்நாடு அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை மாநிலம் முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பாடத்தை பயின்று வரும் நிலையில், அவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினர்.
மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை 500 மதிப்பெண்களுக்கே தேர்வு நடத்தப்படுகிறது என்றும், தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவசியமல்ல என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
2021-22 ஆண்டிற்கான அரசு பொது தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுக்கான கால அட்டவணை
2021-22 ஆண்டிற்கான அரசு பொது தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுக்கான கால அட்டவணை
Click here to download pdf
Click here to download pdf
EMIS Update: மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்துக்கு
அரசு மேல்நிலைப் பள்ளிகள் தங்கள் +2 மாணவர்களின் 1 முதல் 12 வரை படித்த பள்ளியின் விபரங்களை சேகரித்து வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் விரைவில் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வசதிகள் செய்யப்படும். மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் நலன் கருதி குறுகிய காலத்தில் இந்த தகவலை பதிவு செய்ய நேரிடும் என்பதால், இந்த தகவல்களை சேகரித்து தயாராக வைத்துக்கொள்ளும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- TN EMIS STATE TEAM
JEE Exam - முதல்நிலை தோ்வு: விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி
ஐஐடி உள்ளிட்டவற்றில் சோ்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ - மெயின்) முதல்நிலைத் தோ்வுக்கான அறிவிப்பை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
நிகழாண்டில் இரண்டு முறை முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 16 முதல் 21-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு மே 24 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இதில், முதல்கட்ட முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி நாளாகும்.என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற ஜேஇஇ தோ்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ - மெயின் (முதல்நிலை) மற்றும் ஜேஇஇ - அட்வான்ஸ்டு (முதன்மைத் தோ்வு) என இரண்டு பகுதிகளாக இந்தத் தோ்வு நடத்தப்படும்.
இதில் முதல்நிலைத் தோ்வு என்டிஏ சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும். ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி கல்விநிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும் என்பதோடு, இந்தத் தோ்வில் தகுதி பெறும் முதல் 2.5 லட்சம் போ் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும்.
இந்தச் சூழலில், 2022-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு அறிவிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.
இந்த முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மாணவா்களின் வசதிக்காக 4 முறை நடத்தப்பட்டது. அந்த 4 தோ்வுகளில் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதையே தகுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளும் வகையில் சலுகை அளிக்கப்பட்டது. நிகழாண்டில் இரண்டு கட்டங்களாக இந்த தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 16 முதல் 21-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு மே 24 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்ட முதல்நிலைத் தோ்வுக்கான பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி கடைசி தேதியாகும். இந்த தோ்வை ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் மட்டுமின்றி தமிழ், அஸ்ஸாமி, வங்காளி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது மொழிகளிலும் எழுதலாம்’ என்றாா்.
தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை வெளியீடு!!!
தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை வெளியீடு!!!
இணைப்பு: 33 வரையறுக்கப்பட்ட விடுப்புகளின் பட்டியல்