Showing posts with label Tax. Show all posts
Showing posts with label Tax. Show all posts

Income Tax - April 2024 பிடித்தம் Automatic ஆக செய்துள்ளது எவ்வாறு?

 income-tax-1



1 . கரூர் ,நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு pay roll run நாமே ரன் செய்து கொள்ளலாம் எனும் பொழுது ஒருமுறை schedule run கொடுத்தால் போதுமானது .ஐந்து நிமிடத்திற்குள் ரிசல்ட்டின் பெயர் வந்துவிடும். மற்ற மாவட்டங்களுக்கு centralized run செய்து விட்டார்கள்.


2. வருமான வரி பிடித்தமானது new regime  என்று தேர்வு செய்து பிடித்தவர்களுக்கு எந்த ஒரு குழப்பமும் இன்றி Month gross X 12 months = Income என்று கால்குலேட் செய்து அதனுடன் இரண்டு மாத DA arrear add செய்து total income calculate ஆகி வந்துள்ளது. பின்னர் standard Deduction 50000 கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சரியாக வருகின்றது.இங்கு ஐடி மற்றும் செஸ் என்று தனியாக காண்பிக்கப்படும் .


IT மற்றும் cess இரண்டையும் 11 மாதங்களாக divide செய்து மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படுகிறது.


இதன்படி பார்க்கும் பொழுது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரிக்கும் cess வித்தியாசம் காண்பிக்கப்படும். ஆனால் 11 மாதம் என்று பார்க்கும் பொழுது சரியே.


நாங்கள் மார்ச் மாதமும் பிடித்து மேற்கொள்ள வேண்டும் அந்தத் தொகை இங்கு வரவில்லை என்ன செய்வது என்று புலம்ப வேண்டாம் 12 வது மாதம் அதாவது 2025 பிப்ரவரி மாதத்தில் நாம் வருமான வரி பிடித்த மேற்கொள்ளப்படும் பொழுது அத்தகையையும் சேர்த்து தான் காண்பிக்கப் போகின்றோம்.


3. அடுத்ததாக old ரெஜிமுக்கு வருவோம் old  ரெஜிம் கொடுத்தவர்கள் எந்தெந்த விதியின் கீழ் exception கேட்டிருந்தார்களோ அந்தந்த விதியின் கீழ் தொகையினை enter செய்திருந்தால் மட்டுமே இங்கு deduct செய்துவிட்டு மீதம் உள்ளவற்றிற்கு இன்கம் டேக்ஸ் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். Attachment செய்திருக்க வேண்டியது இல்லை🏹vj🏹


Old regime என்று தேர்வு செய்தவர்கள் தொகையினை உள்ளீடு செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டோமெட்டிக்காக new ரெஜிமிற்கு மாறி இருக்கும். அப்பொழுது வருமான வரி பிடித்தம் அதிகமாக தான் வரும். குறிப்பாக வீட்டுக் கடன் பெற்றவர்கள் சரியாக தொகையினை உள்ளீடு செய்திருந்தால் சரியாக வந்திருக்கும்.


இதனை மாற்றம் செய்வது எவ்வாறு என்று தகவல் பெறப்பட்ட பின்னர் பதிவிடப்படும்.


வாழ்த்துக்கள்


1. அந்தந்த மாவட்டமே ரன் செய்வது போன்று முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்ற CTA and wipro team 


2. Income tax பிடித்தம் தானாகவே சரியாக deduct மேற்கொள்வது போன்று program செய்த team 


3. ⁠ GPF Proposal online வழிமுறையில் எளிமையாக்கிய CTA and wipro team 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் :

 

Income Tax Regime Selection Process

வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் : 

1 ) 2 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 11 லட்சம் வரை old regime ok . 

2 ) 1 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 10 லட்சம் வரை old regime ok . 

3 ) Housing Loan இல்லை என்றால் 8.5 லட்சம் வரை old Regime ok ( Savings - 80C 1.5 லட்சம் இருந்தால் ) மற்றபடி ஏனைய வருமான தாரர்கள்  New Regime ஐ தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

INCOME TAX SELF DECLARATION 2024-25. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை

 


IMG_20240304_114614_wm

INCOME TAX SELF DECLARATION 2024-25


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை.


மார்ச் 10 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.


OLD REGIME


NEW REGIME


கட்டாயம் நிதி ஆண்டிற்கு ஒருமுறை தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் தானாகவே NEW REGIME தேர்வாகி விடும்.


நிதி ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நாம் தேர்வு செய்ய இயலும்.


Explanation - Pdf files - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்!

 .com/

தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


வழக்கமாக தனக்கான வருமான வரியை ஊழியரே தோராயமாக முடிவு செய்து மாதந்தோறும் பிடித்தம் செய்ய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரிடம் தெரிவிப்பர். பலர் பிடித்தமே செய்யாது டிசம்பர், ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் மட்டும் பிடித்தம் செய்வர். சிலர் ஊதியத்திற்குமேல் வரி வரும் சூழலில் தனியாக Online / வங்கி செலான் மூலம் பிப்ரவரியில் வரி செலுத்துவர்.


ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வருமான வரியை வசூலித்துக் கட்டவும், இறுதி நேரத்தில் ஊழியர் தனியாக Online / வங்கி செலான் மூலம் கட்டுவதைத் தவிர்க்கவும் வேண்டுமென கண்டிப்பான முறையில் வருமானவரித்துறை கருவூலகங்களை அறிவுறுத்தி வருகிறது. இதைப் பின்பற்றாத ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அபராதம் விதிப்பதும் கடுமையாக்கப்பட்டுள்ளது.


இத்தகைய சிக்கல்களை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு, வரும் வரியாண்டு முதல் ஊதியத்திற்கு ஏற்ப வருமானவரியானது மாதாந்திர தவணை அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும் வசதி தமிழ்நாடு அரசின் IFHRMS (களஞ்சியம்)ல் நடைமுறைக்கு வர உள்ளது.


இதன்படி, வரும் ஆண்டிற்கான ஆண்டு மொத்த ஊதியத்தை வைத்து ஊழியருக்கான வருமான வரி எவ்வளவு என்பதைத் தோராயமாக IFHRMS (களஞ்சியம்) மென்பொருளே கணக்கீடு செய்து அதிலிருந்து மாதாந்திரத் தவணையை மதிப்பிட்டு மாதந்தோறும் தானாகவே பிடித்தம் செய்துவிடும். ஊதிய உயர்வு & அகவிலைப்படி உயர்வின் போதும் அதற்கேற்ப வரியில் மாற்றம் ஏற்படும்.


அதன் முதல்படியாக, ஊழியர்கள் தாங்கள் எம்முறையில் (OLD / NEW) வரிக் கணக்கீடு செய்ய உள்ளனர் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து தங்களது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்குத் தெரியப்படுத்தி உரிய தரவுகளை மார்ச் 10ஆம் தேதிக்குள் IFHRMSல் பதிவேற்ற வேண்டும் என்று கருவூலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எந்தமுறையில் என்று தெரிவிக்கவில்லை எனில், தானாகவே New Regime முறையில் வரி கணக்கிடப்படும். 


டிசம்பர் மாதத்தில் இதில் வரித் திருத்தங்களில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பழைய வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்ய விரும்புவோர் தங்களது வரித்தளர்வு தொடர்பான சேமிப்புகளை இந்த வாரத்திலேயே (தோராயமாகக்) கணக்கிட்டு முடிவு செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டு பின்னர் மற்றொரு வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளும் வசதி உள்ளதா என்பதும், இறுதி மாதங்களில் வரித்தளர்வுகளில் தேவையான கூடுதல் திருத்தங்களைச் செய்து கொள்ளும் வசதி உள்ளதா என்பதும் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தபின்னர்தான் தெரியவரும்.


வங்கிகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இந்நடைமுறைதான் உள்ளது. வரி விதிப்பு முறையை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதேநேரம் டிசம்பர் மாதத்திலேயே சேமிப்புகள் / கடன்கள் / கல்விச் செலவுகள் தொடர்பான அனைத்து ரசீதுகளையும் சமர்ப்பித்தாக வேண்டிய நிலையும் அங்கு உள்ளது. அவர்களுக்குத் தனியே IT படிவம் தயார் செய்து அளிக்க வேண்டிய தேவையுமில்லை. அந்த மென்பொருள் மூலமே Form 16A & 16B என அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தமது Login மூலம் இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.


இத்தகைய முழுமையான வசதி IFHRMS (களஞ்சியம்)ல் இருக்குமா என்பது திட்ட செயலாக்கத்திற்குப் பின்பே தெரியவரும். இவையெல்லாம் இருக்குமெனில், Audit Consultancy மூலம் TDS & Form16 பணியை மேற்கொள்ள ஊழியர்களிடமிருந்து தனியே பணம் வசூல் செய்யப்படுவது முற்றுப்பெறும்.


நினைவில் கொள்க.


Form 16Aல் மாதந்தோறும் & காலாண்டு வாரியாகப் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி தொடர்பான விபரங்கள் இருக்கும்.


Form 16Bல் ஓராண்டிற்கான ஊதியத்திற்கு எவ்வாறு வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற முழுமையான விபரம் இருக்கும். அதாவது நாமளிக்கு IT படிவத்தின் அனைத்துத் தரவுகளும் இதில் இருக்கும்.


நாம் தயாரித்து அலுவலகத்தில் அளிக்கும் IT படிவம் என்பது ஒரு மாதிரி தான். அது நமது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலகத்தைத் தவிர்த்து வேறெங்கும் எந்தவகையிலும் பயன்படாது / பொருட்படுத்தப்படாது. இப்படிவத்தை அடிப்படையாக வைத்து IT Web Pageல் TDS செய்யும் போது, TRACES எனப்படும் இந்திய வருமான வரித்துறையின் TDS Reconciliation Analysis and Correction Enabling System மூலம் தரவிறக்கப்பட்டு வழங்கப்படும் Form 16B தான் அதிகாரப்பூர்வ IT படிவம். வங்கிகளில் கடன் கோரும்போதும், வருமான வரி தொடர்பான இதர பயன்பாடுகளுக்கும் இந்த Form 16Bயைத்தான் கேட்பர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News