3 , 4 , 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம்
3 , 4 , 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை
நடப்பு கல்வியாண்டில் 3 , 4 , 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அனைத்து மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
அரசுப் பள்ளிகளில் பழுதான நிலையில் உள்ள கட்டிடங்கள் விவரங்களை செயலியில் பதிவேற்ற உத்தரவு
அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள, பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை செயலி வழியே பதிவு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த கல்விப் பொறியாளர்களால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இடிக்கும் பணிகள்: அதனடிப்படையில், பள்ளிகளில் பழுதான, இடிக்க வேண்டியவகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் இதர கட்டிடங்களின் விவரங்கள் பள்ளிக்கல்வி செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேவையற்ற கட்டிடங்களை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பணிகளின் தற்போதைய நிலையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கல்வி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் தற்போதைய நிலையை, அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்களுடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அளித்து, அதற்குரிய புகைப் படங்களையும் பதிவேற்ற வேண்டும். கூடுதலாக ஏதேனும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் எனில், அதுகுறித்த விவரங்களையும் தெரிவிக்கலாம்.
அதேபோல, மாவட்ட அளவிலான கல்வித் துறை அலுவலர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் இடிக்க வேண்டிய கட்டிடங்களின் நிலையை தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை அகற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்படுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
பள்ளிப் பார்வையின் போது BEO's BRTE's மாதிரி வகுப்புகள் எடுக்கலாமா? - RTI Letter
பள்ளிப் பார்வையின் போது வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO’S) , ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) தேவைப்படின் மாதிரி வகுப்புகள் எடுக்கலாம் - ஆர்.டி.ஐ பதில் கடிதம் வெளியீடு.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி - Batch wise teachers name list avail
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் 05.10.2023 முதல் மதுரையில் நடைபெற உள்ளது...தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Batch wise teachers name list avail- pdf
Middle HM Training - 2023-24 @ Madurai - Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Selection List Of NAAN MUDHALVAN UPSC Scholarship Exam - 2023
SELECTION LIST OF NAAN MUDHALVAN UPSC PRELIMINARY SCHOLARSHIP EXAM - 2023👇
Click here to join whatsapp group for daily kalvinews update
தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள்
தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிந்து கொள்ளலாம்.உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியில் இயங்கும்,
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஜூன், ஜூலை 2023, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
விடைத்தாள்களை மறுகூட்டல், ஒளி நகல் பெற விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அக்., 3ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ பதிவேற்றம் செய்யலாம்.
Click here to join whatsapp group for daily kalvinews update
SNA கணக்கிலிருந்து பணம் அனுப்புவதற்கு முன் உள்ளீடு செய்ய வேண்டிய COMPONENTS CODE FOR GRANTS
SNA COMPONENTS CODE FOR GRANTS
தொடக்க , நடுநிலை பள்ளிகளுக்கு
COMPOSITE GRANT ELEMENTARY
COMPONENTS CODE-F. 01.18
YOUTH AND ECO CLUB ELEMENTARY
COMPONENTS CODE -F. 01.12.01
உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளுக்கு
COMPOSITE GRANT SECONDARY
COMPONENTS CODE -F. 03.12
YOUTH AND ECO CLUB SECONDARY
COMPONENTS CODE- F. 03.06
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (ஆண்டு 2020)!!!
DSE - PET & PD Duties Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
30 வருடம் பணி நிறைவு - Super Grade வழங்குவது சார்ந்து - கல்வி அலுவலரின் சுற்றறிக்கை
தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் (Management Service ) பணியாற்றிய பணி காலத்தையும் சேர்த்து ஒரே பதவியில் 30 வருடம் பணி நிறைவு - Super Grade வழங்குவது சார்ந்து - கல்வி அலுவலரின் சுற்றறிக்கை
Super Grade instructions
Click here for latest Kalvi News
அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் SMC தீர்மானங்களை இணைக்க SPD உத்தரவு
அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் SMC தீர்மானங்களை இணைத்தல் மற்றும் SMC உறுப்பினர்கள் கலந்து கொள்ளுதல் சார்ந்த SPD செயல்முறைகள்
Proceedings Grama Sabha 02.10.2023
Click here for latest Kalvi News
தமிழ்நாட்டை பின்பற்றும் தெலங்கானா… காலை உணவுத் திட்டம் அறிமுகம்!
தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் தற்போது அமலில் உள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
காலை உணவுத் திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க உள்ளது. திட்டம் குறித்து அறிந்து கொள்ள அண்மையில் தெலங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர்.
இந்நிலையில், தெலங்கானா முழுவதும் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 2ம் தேதி முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தசரா பரிசாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைக் கொண்டு வருவதாக அம்மாநில ஆளுங்கட்சியினர் கூறியுள்ளனர். இத்திட்டத்திற்காக தெலங்கானா அரசு ஆண்டுக்கு ரூ.400 கோடி செலவிட உள்ளது.
Click here for latest Kalvi News
உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு- நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்கள் - SPD செயல்முறைகள்!
உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு- நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்கள் - SPD செயல்முறைகள்!
CG Class Proceeding - Download
Click here for latest Kalvi News
பணியாற்றுவோருக்கான தொழில் படிப்புகள்: ஏஐசிடிஇ வழிகாட்டுதல்கள் வெளியீடு
பணியாற்றுவோருக்கான தொழில் படிப்புகள் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து தொழில்நுட்பக் கல்விநிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் அனுப்பிய சுற்றறிக்கை:
ஏஐசிடிஇ-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் பணியில் இருப்போருக்கு பிஇ, பிடெக், டிப்ளமா பிரிவில் தொழில்நுட்பப் படிப்புகளை பயிற்றுவிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கென சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, என்பிஏ அங்கீகாரம் பெற்ற படிப்புகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கல்விநிறுவனமும் 3 படிப்புகளை மட்டுமே வழங்க வேண்டும். ஒரு படிப்பில் 30 பேரை மட்டுமே சேர்க்க வேண்டும்.குறைந்தபட்சம் 10 பேராவது ஒரு படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
இதில் சேருபவர்கள் கல்வி நிறுவனத்தில் இருந்து 50கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறான விதிகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இவ்வாறு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
Click here for latest Kalvi News
‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் தென்னிந்திய பள்ளி, கல்லூரி மாணவர்களை ஜப்பான் அழைத்து செல்ல திட்டம்
ஜப்பான் அரசின் ‘சகுரா சயின்ஸ்’திட்டத்தின்கீழ் தென்னிந்திய பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஜப்பான்அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கல்வி நிறுவனங்களில் நிர்வாகிகள் ஜப்பான் பயணம் செய்கின்றனர்.
இந்திய மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் 12 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்திய மாணவர்களை ஜப்பான் அரசு ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் ஜப்பானுக்கு இலவசமாக அழைத்து செல்கிறது. அங்கு ஜப்பான் நாட்டில் நோபல் பரிசு பெற்ற மிகச் சிறந்த ஆளுமைகளை மாணவர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்து அறிவுசார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உதவி செய்கிறது.
இந்நிலையில், ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்துஅறிந்துகொள்ள, தென்னிந்தியாவில் உள்ள தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆர்வமுள்ள பள்ளி, கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜப்பானுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள், முதல் உலக மூத்தக்குடி நிறுவனமும், கேசிசிஎஸ் இந்தோ - ஜப்பான் நிறுவனமும் இணைந்து செய்துள்ளன. முதல்கட்டமாக 10 கல்விநிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். இவர்களுக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.
முதல் உலக மூத்தக்குடி நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கேசிசிஎஸ் இந்தோ ஜப்பான்நிறுவன நிறுவனரும், டோக்கியோதமிழ் சங்கத்தின் மூத்த மைய குழு உறுப்பினருமான கருணாநிதி காசிநாதன் முன்னிலை வகித்தார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன், ஜப்பான் நாட்டுக்கு செல்லும் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், டீன்கள், முதல்வர்கள் உட்படஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கருணாநிதி காசிநாதன் பேசுகையில், ‘இந்தியா,ஜப்பானுக்கு இடையிலான கல்விவளம், மாணவர்களின் கல்வி உதவித்தொகை தொடர்பாக ஜப்பான் அரசை கல்வி நிறுவன நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர்.
மேலும், அங்குள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்துதான், ’சகுரா சயின்ஸ்’ திட்டத்தில் மாணவர்கள் பயன்பெற முடியும் என்பதால், அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு இந்த குழுவை அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சியாளர்களுடன் சந்திப்பு நடைபெறும். பின்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்.
ஜப்பான் செல்லும் கல்வி நிறுவன நிர்வாகிகள் குழு இந்தியா திரும்பிய பிறகு, அந்தந்த கல்விநிறுவனங்களில் படிக்கும், ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் தலா 10 மாணவர்கள் என மொத்த100 பேர் ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் ஜப்பானுக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Click here for latest Kalvi News
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களையும் இனி இவர் ஆய்வு செய்வார்!!!
அனைத்து மாவட்ட கலெக்டர்களும், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; எண்ணும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்க வேண்டும்' என, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அவர் கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசால் உருவாக்கப்பட்ட, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறை சூழலில், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும்.
காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், சுற்றுப்புறத் துாய்மை, கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.
ஆய்வுகளுக்காக பள்ளிப் பார்வை, போன் செயலியை பயன்படுத்தலாம். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும், முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வு செய்வதையும், வகுப்பறைகளை கண்காணிப்பதையும், போன் செயலி வழியே உறுதி செய்யலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update
list of Schemes in School Education
பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள்
list of Schemes in School Education pdf - Download here
' எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' - பள்ளித் தூய்மை உறுதிமொழி
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பர் 1,2023-லிருந்து ஒவ்வொரு வாரமும் வாரத்தின் முதல் நாளன்று, பள்ளித்தூய்மை உறுதிமொழி கட்டாயம் இறைவணக்கத்தில் எடுத்தல் – தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!
School Education - Project Veer Gatha 3.0 - appointment of Nodal Officer at District instructions communicated - Reg
Click here for latest Kalvi News
அரசு பள்ளிகளில் 6000 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை முடிவு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் மேனிலைப் பள்ளிகளில் 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 1000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தொடக்கப் பள்ளிகளில் 2000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. அதேபோல நடுநிலைப் பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்துள்ளது.
நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை கொடுக்க பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கணக்கு பாடங்களுக்கு மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தமிழ், சமூக அறிவியல் பாடங்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்பதால் அந்த பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதால் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடுநிலைப் பள்ளிகளில் பணி நியமனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தகுதியடைந்தவர்களுக்கு மீண்டும் பணிநியமனத்துக்கான தேர்வை நடத்தாமல், தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. அதன் பேரில், விரைவில் சுமார் 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
Click here for latest Kalvi News