Showing posts with label Admission. Show all posts
Showing posts with label Admission. Show all posts

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தமிழக அரசு திடீர் நிபந்தனை

 

Tamil_News_lrg_3612252

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என, நுழைவு நிலை வகுப்பில், மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.


அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மாநில அரசே பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.


ஆனால், அந்த கட்டணத்தை அரசு எப்போதும் மொத்தமாக தருவதில்லை; படிப்படியாக வழங்கி வந்தது. அதைக்கேட்டு, தனியார் பள்ளிகளும் குரல் கொடுத்து வந்தன.


திடீர் நிபந்தனை


அரசு பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கக் கூடாது என, திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


தற்போது இந்த திட்டத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்., 22 முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, நலிந்த பிரிவு, எச்.ஐ.வி., பாதித்த குழந்தை, மாற்றுத்திறனாளி குழந்தை, துாய்மை பணியாளர் குழந்தை ஆகியோருக்கு, உரிய ஆவணங்கள், சான்றுகள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மாணவர் வசிப்பிடத்தில் இருந்து, 1 கிலோ மீட்டர் துாரத்திற்குள் இருக்கும் பள்ளிகளில் முதலில் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த துாரத்துக்குள் அரசு பள்ளிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர அறிவுறுத்த வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் உரிய கட்டமைப்பு மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டால், எப்படி சேர்க்க முடியும் என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இலவச சேர்க்கை வேண்டாம்


இதற்கிடையில், 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு நிதி வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.


சங்கத்தின் தலைவர் அருமைநாதன், பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனு:

தனியார் பள்ளிகள், ஏழை மாணவர்களிடம் இருந்து, புத்தகம், சீருடை, டைரி, ஷூ, டை போன்றவற்றுக்கும், கராத்தே, நீச்சல், சுற்றுலா, ஆண்டு விழா போன்றவற்றுக்கும் கணிசமான தொகை வசூலிக்கின்றன. இதை செலுத்தாத குழந்தைகள், பல வகைகளில் அவமதிக்கப்படுகின்றனர்.


இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், பெரும்பாலும் தனி விதமாகவே நடத்தப்படுகின்றனர். ஏழை குழந்தைகள் அருகில் உள்ள அரசு சார்பு பள்ளிகளில் சேராமல், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்து விடுகின்றனர்.


இதனால், அரசு பள்ளிகளில் சேர்க்கை படிப்படியாக குறைந்து, சில இடங்களில் பள்ளிகளை மூடும் நிலைமை உருவாகிறது. எனவே, தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் தொகையை நிறுத்தி, அதை இன்னும் கூடுதலாக அரசு பள்ளிகளை வலுப்படுத்த பயன்படுத்தலாம்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்., 12க்கு முன் 4 லட்சம் மாணவர்கள் சேர்க்க உத்தரவு.

 


2024-2025 கல்வியாண்டில் 5 வயது முடிந்த மாணவர்களை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை ஏப்ரல் 12 ம் தேதிக்குமுன்பாக சேர்க்க வேண்டும் என்றும், அதனை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யவும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் ஆரம்பம்; விண்ணப்பிப்பது எப்படி?

 

KVS Admission 2024: கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான பதிவு செயல்முறையை இன்று (ஏப்ரல் 1) தொடங்கும். கேந்திரிய வித்யாலயாக்களில் 2024-25 கல்வியாண்டுக்கு 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. https://kvsonlineadmission.kvs.gov.in/index.html ஆனது ஒன்றாம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை 2024 வழங்கும்.


ஆங்கிலத்தில் படிக்கKVS Admission 2024-25: Kendriya Vidyalaya Class 1 registration begins; how can I apply?

KVS இல் 1 ஆம் வகுப்பில் சேர்க்கைக்கு பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயது ஆறு ஆண்டுகள். மார்ச் 31, 2024 அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கும் வயது கணக்கிடப்படும்.

KVS சேர்க்கை 2024: எப்படி விண்ணப்பிப்பது?

படி 1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்https://kvsonlineadmission.kvs.gov.in/index.html  

படி 2: முகப்புப் பக்கத்தில், பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: தேவையான சான்றுகளைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்

படி 4: KVS சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்

படி 5: தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்

படி 6: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

படி 7: எதிர்கால குறிப்புக்காக KVS சேர்க்கை படிவத்தைப் பதிவிறக்கவும்

ஒரே குழந்தைக்கு ஒரே வித்யாலயாவில் பல விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஒரே கேந்திரிய வித்யாலயாவில் ஒரே குழந்தைக்கு பல பதிவு படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், கடைசி விண்ணப்பம் மட்டுமே சேர்க்கை செயல்பாட்டில் பரிசீலிக்கப்படும். இரட்டை ஷிப்ட் கேந்திரிய வித்யாலயாவில், சேர்க்கை நோக்கத்திற்காக ஒவ்வொரு ஷிப்டும் தனி வித்யாலயாவாக கருதப்படும் என கே.வி.எஸ் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்க, நடுநிலைப்பள்ளி த.ஆ. கவனத்திற்கு

 தொடக்க, நடுநிலைப்பள்ளி த.ஆ. கவனத்திற்கு


Health dept மூலம் பெறப்பட்ட 5+ குழந்தைகளின் தகவல்கள் மாணவர் சேர்க்கைக்காக EMIS  தளத்தில் - HM individual  web login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது  . 


த. ஆ. செய்யவேண்டியவை:


1. Login emis.tnschools.gov.in -

user name : 8 digit id, password: ****@yr of birth. 


2. Select *"Admission calls for parent"*


3. அதில் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தொடர்பு கொண்டு அவர்கள் கூறும் தரவுகளை உள்ளீடு செய்து இப்பணியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். 


4. குழந்தைகள் வேறு, குடியிருப்பு/ ஒன்றியத்தில் இருப்பதாக கூறினாலும் அவர்கள் கூறும் சேர்க்கை சார்ந்த  தரவுகளை உள்ளீடு செய்துவிடுங்கள். 


இதன் மூலம் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளலாம்



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழிகாட்டு நெறிமுறைகள்

 

மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் ஆகிய முத்தரப்பின் தலையாய கடமை ஆகும். அந்த வகையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் ( 2024 - 25 ) 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் பின்வரும் நடை முறைகளை பின்பற்ற அரசு ஆணையிடுகிறது. அரசு பள்ளிகளில் தரமான, இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் வண்ணம் பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப் படுத்த வேண்டும்.

அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகள் மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஅரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றுடன் தற்காப்புக் கலை பயிற்சி, கல்விச்சுற்றுலா மற்றும் இலக்கிய மன்றம், விநாடி வினா போட்டி, கலைத் திருவிழா உள்ளிட்ட கல்விசாரா இணை செயல்பாடுகள், விளையாட்டு போட்டிகள் பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி போன்றவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். அரசு பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத உள் இட ஒதுக்கீடு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5சதவீத உள் இட ஒதுக்கீடு, அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க மாதம் தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை ஆகியவற்றை பெற்றோ ருக்கு எடுத்துக் கூற வேண்டும்.


கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு களை பிரித்து கொடுத்து சேர்க்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

 எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி  அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகள் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  

முதற்கட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மார்ச் 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 


மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மார்ச் 28-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும்  தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.


ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.  ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு!

 


IMG_20240315_204117

பள்ளிக் கல்வி -பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் , தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது . 


G.O-81- நாள் -15.03.2024👇

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது

 1214424

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துவிட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வரும் கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.


இதையடுத்து, வழக்கத்தைவிட முன்னதாக இந்த ஆண்டு சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டன. மாணவர் சேர்க்கையை முன்வைத்து பல்வேறு விழிப்புணர்வு விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதுவரை 1.04 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,946 குழந்தைகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்தபடியாக கிருஷ்ணகிரியில் 8,803 பேரும், சேலத்தில் 8,774 பேரும் சேர்ந்துள்ளனர்.


இதுதவிர, அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்க உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சம் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளும் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.




🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கடந்த 5 நாட்களில் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர் சேர்ப்பு - பள்ளிக்கல்வித்துறை தகவல்

 


images(27)

கடந்த 5 நாட்களில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். மொத்தத்தில் 5 லட்சம் பேரை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண் டும் என்ற இலக்கை நோக்கி பள்ளிக்கல்வித்துறை தீவிர மாக செயல்பட்டு வருகிறது.


அரசுப் பள்ளிகளில்…


அரசுப் பள்ளிகளில் மாண வர் சேர்க்கைப் பணிகள் வழக் கத்தைவிட இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப் பட்டு விட்டது. தனியார் பள் ளிகளுக்கு நிகரான வசதி களுடன் அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறையும் பல்வேறு திட் டங்கள், வசதிகளை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நுட்ப ஆய் வகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், தொடக்கப் பள் ளிகளில் “ஸ்மார்ட் கிளாஸ் ரூம்” கொண்டுவரப்பட இருக்கிறது. இதுதவிர 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப் லெட்) வழங்கப்பட உள்ளது.


மாணவர் சேர்க்கை


இதுபோன்ற வசதிகள், அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கு கிடைக்கக் கூடிய நலத்திட்டங்கள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை பள் ளிக்கல்வித்துறை முன்னெ டுத்து சென்று கொண்டிருக் கிறது. இதற்காக ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் நிதியும் ஒதுக் கப்பட்டுள்ளது. அந்தவகை யில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


கடந்த 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. இதில் அதிக பட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 365 மாணவர் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


5 லட்சம் இலக்கு


இதுமட்டுமல்லாமல், அங்கன்வாடி மய்யங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள் ளவும், 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டு இருக்கிறது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை

 அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். இதனால், கல்வித்துறைக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவதோடு, அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.


தற்போது அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு போட்டி போடும் அளவுக்கு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களும், செயல்முறைகளும் தனியாரை மிஞ்சும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.இந்த முறை ஆன்லைன் மூலமும் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுவதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 45 லட்சம் மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்த கல்வியாண்டில் 10-15 லட்சம் பேர் வரை அரசு பள்ளிகளில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வரும் நாட்களில் ஆன்லைன் வழி மற்றும் நேரடி வழி சேர்க்கை முறை மூலம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதனால்


1 நேரடியாக சேர்க்கை நடைபெறும் போது ஏற்படும் முறைகேடுகள் ஆன்லைனில் தவிர்க்கப்படும்.


2 மாணவ மாணவியரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்ட முடியாது.


3 மாணவர்கள் எந்த பள்ளியில் அதிகம் சேருகிறார்கள், எங்கே பள்ளிகளில் தேவை அதிகம் உள்ளது என்பதை எளிதாக டிராக் செய்ய முடியும்.


4 போலி விண்ணப்பங்கள் பதிவு செய்வதை தவிர்க்க முடியும்.

இதற்காக இந்த வருடம் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நேரில் வரும் குடும்பங்களுக்கு, பள்ளியிலேயே ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் அட்மிஷன் செய்யப்படும். ஆதார் எண், ரத்தப்பிரிவு, பெற்றோரின் மொபைல் எண் ஆகியவை மூலம் ஆன்லைன் சேர்க்கை செய்யப்படும். அதோடு இவர்களின் சமூகப்பிரிவுகள் தொடங்கி இடஒதுக்கீடு வரை அனைத்தையும் பள்ளி கல்வித்துறை எளிதாக கண்காணிக்க இது வசதியாக மாறும்.


இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அதற்கு தேவையான இணையதள வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.


மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியும் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் ஊரகப் பகுதிகளில்தான் அமைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர். இங்கு கல்வியை நிறைவுசெய்து வெளியே வரும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.


பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சுய ஆர்வலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி இந்த முன்னெடுப்பு சிறந்த முறையில் நடைபெற ஒத்துழைப்பினை நல்குவதோடு மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் நிகழ்வினை தங்களுடைய கள ஆய்வுப் பணிகளின் ஒரு நிகழ்ச்சி நிரலாக பட்டியலிட்டு கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.


2024-25ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமான அளவில் உயர்ந்திட வேண்டும். மாணவர் சேர்க்கை பணி மற்றும் விழிப்புணர்வு சேர்க்கை பேரணி தங்கள் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கை செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர்

கூறியுள்ளார்.


* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறை தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர்.  அந்த வகையில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 548 குழந்தைகள் நிறைவு செய்து வெளியே வர இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக சேலத்தில் 19 ஆயிரத்து 242 குழந்தைகளும், அடுத்து மதுரையில் 18 ஆயிரத்து 127 குழந்தைகளும் உள்ளனர்.


மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படி, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலருடன் ஒன்றிணைந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்கை செய்திட வேண்டும்.


மேலும் வேறு பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள், மாணவர்களுக்கு அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இடங்கள் வழங்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கை விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

IMG-20240304-WA0020

ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - கல்வித்துறை அமைச்சர்தகவல்

 IMG_20240304_200304

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி  தகவல்

Press News - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News