மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

 



தமிழகத்தில் கோடை விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. இரண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதால் இவ்வளவு நாட்கள் தாமதமானது. தேர்வு அட்டவணையின் படி நடந்திருந்தால் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு (ஏப்ரல் 19) முன்பாகவே அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கும். ரமலான் பண்டிகை விடுமுறை காரணமாக 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 22 - அறிவியல், ஏப்ரல் 23 - சமூக அறிவியல் என்று மாற்றப்பட்டது.


கோடை விடுமுறை தொடக்கம்


இதில் ஒரு தேர்வு முடிவடைந்து விட்டது. இன்றைய தினம் கடைசி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதேசமயம் வரும் 26ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பணி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய கல்வியாண்டு


இவர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே கோடை விடுமுறை தொடங்கியது கவனிக்கத்தக்கது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஏப்ரல் முதல் வாரத்திலேயே ஆண்டு இறுதித் தேர்வுகளை நிறைவு செய்து விடுமுறை அறிவித்துவிட்டன. தற்போது புதிய கல்வியாண்டிற்கான திட்டமிடல்கள் தொடங்கியுள்ளன.


முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை


பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள், பள்ளி ஆய்வகங்களுக்கு தேவையான பொருட்கள், வகுப்பறைகள் பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளிக் கல்வித்துறை தரப்பினர் கூறுகையில், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ஆம் தேதி வியாழன் அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


மீண்டும் பள்ளிகள் திறப்பு


இதற்கேற்ப வெளியூர் பயணங்களை பலரும் திட்டமிட்டு வருகின்றனர். அதேசமயம் கடந்த ஆண்டை போல கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் ஜூன் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்கின்றனர்.


வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.



மேலும், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு பின்னரே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.


அதேநேரம், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment