பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சமீபகாலமாக மாணவர்கள் அதிகம் விரும்பும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பை யார் படிக்கலாம்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கும். சமீபகாலமாக பொறியியல் படிப்புக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. அதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு அதிக ஆர்வம் உள்ளது.
இந்தநிலையில், ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பு எப்படிப்பட்டது? யார் படிக்கலாம்? என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
உலகம் இணையத்தில் இணைந்துள்ள நிலையில், அதிகமான தரவுகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதனை நிர்வகிக்க ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் தேவைப்படுகிறது.
ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பை கணித திறமை அதிகம் உள்ளவர்கள், கூர்நோக்கு சிந்தனை கொண்டவர்கள், புள்ளியியல் தரவுகளில் ஆர்வமுடையவர்கள், மற்றும் புத்தாக்க சிந்தனை கொண்டவர்கள் படிக்கலாம்.
ஆட்டோமேசன், சைபர் செக்யூரிட்டி, ஹெல்த் கேர், ஏவியேசன், ராக்கெட் தொழில்நுட்பம், வங்கி போன்ற பல்வேறு துறைகளில் அல்கரிதம் எக்ஸ்பர்ட், டேட்டா அனாலிஸ்ட், டெவலப்பர், ரோபாட்டிக்ஸ் ஸ்பெசலிஸ்ட், ஆர்ட்டிஃபிஷியல் இன்ஜினீயர் அண்ட் சயின்டிஸ்ட் போன்ற வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளன.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment