மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களை மீண்டும் தாய் பள்ளிக்கு திரும்ப உத்தரவு - Proceedings

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நாகப்பட்டினம் மாவட்டம், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள 216 பகுதி நேர பயிற்றுநர்களின் மார்ச்- 2024 தொகுப்பூதியமானது ஊதிய கேட்புப் பட்டியல் பெறப்படாமல் EMIS வழியாக பெறப்படும் வருகை புரிந்த நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படவுள்ளது. 

எனவே மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் மாற்றுப் பணி ஆணை இரத்து செய்யப்பட்டு அவர்களின் EMIS Profile மற்றும் தொகுப்பூதியம் பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக பணிவிடுவிப்பு செய்யுமாறு மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் அனைத்து பகுதி நேர பயிற்றுநர்களின் EMIS வருகையை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment