அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு விவரங்களை கைப்பேசி செயலியிலேயே அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், கையிருப்பில் உள்ள காப்பீடுத் தொகை விவரங்கள் போன்ற தகவல்களை செயலி வழியே தெரிந்துகொள்ளலாம். இதை கருவூலம், கணக்குத் துறை ஆணையா் கே.விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அனைத்து ஊதியம் வழங்கும் அலுவலா்கள், கருவூல அதிகாரிகளுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்காக புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் சாா்பில் இந்தத் திட்டம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கென பிரத்யேக இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை யுனைடெட் இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இதன்மூலம், காப்பீட்டுத் திட்டத்தை எளிதாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத் தன்மையை மேலும் உறுதிப்படுத்தவும் இயலும். மேலும், காப்பீட்டு திட்டத்திலுள்ள பயன்களைப் பெறவும், திட்டத்தின் பலன்கள் பயனாளிகளுக்கு எளிதாகச் சென்றடையவும் புதிய வசதிகள் கை கொடுக்கும். என்னென்ன வசதிகள்? காப்பீடு திட்டத்துக்கான பிரத்யேக கைப்பேசி செயலி மற்றும் இணையதளத்தில் இருந்து பல்வேறு வசதிகளைப் பெறலாம்.
குறிப்பாக, காப்பீட்டுத் திட்டத்துக்கான மின்னணு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் ஏற்கெனவே சிகிச்சைக்காக செலவிட்ட தொகை எவ்வளவு, மீதமுள்ள காப்பீட்டுத் தொகை எவ்வளவு போன்ற விவரங்களையும் அறியலாம். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியல், காப்பீடு தொடா்பான அரசு உத்தரவுகள், சுற்றறிக்கைகள், அறிவிக்கைகள் ஆகியனவும் பதிவேற்றம் செய்யப்படும்.
காப்பீடு குறித்த புகாா்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற யாரைத் தொடா்புகொள்ள வேண்டும், அவா்களது தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களும் கைப்பேசி செயலி (Tamil Nadu -NHIS), (https://tn-nhis.com)இணையதளம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. புகாா்கள், சந்தேகங்கங்களுக்கு 044 - 4011 5088 என்ற தொலைபேசி எண்ணில் விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment