மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு

 


மத்திய பல்கலை.களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2024-25) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 27-ல்தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.


தற்போது பல்வேறு தரப்பின்கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


அதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஏதேனும் சிரமம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.


கூடுதல் விவரங்களுக்கு.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை / www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு

 IMG_20240401_061938

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு👇👇👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

AFTER +2 | உயர்கல்விக்கான வழிகாட்டி


IMG_20240401_061955

உயர்கல்விக்கான வழிகாட்டி AFTER +2

என்ன படிக்கலாம் ?

எங்கு படிக்கலாம் ?

எப்படி படிக்கலாம் ?

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 1224220

ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று (ஏப்ரல் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 20 முதல் ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறஉள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே உள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் சேர்த்து அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் இன்று (ஏப்ரல் 1) முதல் ஏப்ரல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கிடையே, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா வசதி உள்ளதால், அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50-ம், சான்றிதழ் மற்றும் இணையதள பதிவுக்கு ரூ.185-ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி (தட்கல்) பிரிவின் கீழ் ரூ.1,000 கூடுதல் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 8 மற்றும் 10-ம் தேதிகளில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Education Calendar - April 2024

 ஏப்ரல் 2024 - பள்ளி நாள்காட்டி

 

* ஏப்ரல் 1 திங்கள் வங்கி விடுமுறை


*ஏப்ரல் 2  செவ்வாய்  பள்ளி ஆண்டுத் தேர்வு தொடக்கம் [1- 9 வகுப்பு]


*ஏப்ரல் 7  ஞாயிறு  தேர்தல் பயிற்சி வகுப்பு (2)


*ஏப்ரல் 9  செவ்வாய் தெலுங்கு வருடப் பிறப்பு


*ஏப்ரல் 11  வியாழன்  ரம்ஜான் பண்டிகை


*ஏப்ரல் 13  சனி 1- 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை  விடுமுறை ஆரம்பம்


*ஏப்ரல் 18  வியாழன்   தேர்தல் பணி ஆணை பெறுதல் மற்றும் வாக்குச் சாவடி செல்லுதல்


*ஏப்ரல் 19  வெள்ளி  தேர்தல் பணி


*ஏப்ரல் 22,  திங்கள் அறிவியல் தேர்வு.


*ஏப்ரல் 23,  செவ்வாய்  சமூக அறிவியல் தேர்வு.


*[ஏப்ரல் - 22,23 அன்று தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால் போதும்.]


*ஏப்ரல் 23  செவ்வாய்  கள்ளழகர் வைகை எழுந்தருளல்.


*ஏப்ரல் - 6 - சனி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது எனவே குறைதீர் கூட்டம் நடக்காது..ஆனால் விண்ணப்பம் பெறப்படலாம்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

New Annual Exam Time Table for Classes 1 To 9

 மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 

புதிய அட்டவணை: (1முதல் 3 வரை)


02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்


புதிய அட்டவணை: (4  மற்றும் 5 வகுப்புகளுக்கு)


02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்


மூன்றாம் பருவத் தேர்வுகள்:


புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)


02.04.2024 தமிழ் 

03.04.2024 English

04.04.2024 உடற்கல்வி

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்


குறிப்பு:

1,2,3,6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.


4,5, 8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.

உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்வு தேதி மாற்றப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றமில்லை - பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

 

பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை திருத்தப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித் துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. தொடர்ந்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் முகாம்களாக மாற்றப்பட உள்ளன. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறி வித்தது.

ரம்ஜான் பண்டிகை: இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈகை பெருநாளை முன்னிட்டு தேர்வு தேதியை மாற்றியமைக்க எம்எல்ஏக்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

அதையேற்று அனைத்து விதமான பள்ளிகளிலும் 4 முதல் 9-ம்வகுப்புகளுக்கு ஏப்ரல் 10-ம் தேதிநடைபெற இருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதேபோல், ஏப்ரல் 12-ல் நடத்தப்படவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. அதன்படி, தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப் படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தேர்வு அட்டவணையில் கோடை விடுமுறை குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டுமா என கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில்எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. மாணவர்கள் ஏப்.8-ம் தேதிக்கு பின்னர் 2 தேர்வுகளை எழுத மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். அதாவது, ஏப்.22, 23-ம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வு களுக்கு வந்தால் மட்டும் போதும்.

திறப்பு தேதி பின்னர் அறிவிப்பு: எனினும், மாணவர் சேர்க்கை, தேர்வு மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் ஏப்ரல் 26-ம் தேதி வரை தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

IMG_20240331_081255


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

4 முதல் 9ஆம் வகுப்பு வரை அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் 23.04.2024 தேதிக்கும் மாற்றம் - Director Proceedings

 பார்வை (1)ல் காணும் செயல்முறைகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்க கோரி பார்வை (2) மற்றும் (3)ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.


அதனடிப்படையில், தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து அறிவுரைகள் வழங்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை (1)யில் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024ஆம் தேதிக்கும் 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

'இனி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் தேசிய தகுதி தேர்வு கட்டாயம்' - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பு!

 

தேசியத் தகுதி தேர்வினை (NET) பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது. இது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இளநிலை ஆராய்ச்சியாளருக்கான (Junior Research Fellowship) உதவித்தொகை அளிக்கும் வகையிலும், உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வுக்காகவும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இப்போது அதில் கூடுதலாக தேசிய கல்விக் கொள்கையின் மிக முக்கிய அம்சமான 'ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு' எனும் திட்டத்தின் கீழ் முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் இனி தேசிய தகுதித் தேர்வு கட்டாயம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. 


இதற்கு முன்பு தேர்வுமுறை 100% மெரிட் மூலம் மட்டுமே இருந்தது. அதிலும் ஒருமுறை தேர்ச்சி பெற்றாலே வாழ்நாள் முழுவதற்கும் செல்லுபடியாகும் என்ற முந்தைய நிலையை மாற்றி, முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கான தேர்வுகள் 70% மெரிட் மூலமும் 30% நேர்காணல் மூலமும் நடைபெறும் என்றும், ஓராண்டு காலத்திற்கு மட்டுமே இந்த தேர்ச்சி செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 தேர்ச்சி பெற்ற ஓராண்டு காலத்திற்குள் முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கை நடைபெறவில்லை என்றால் மீண்டும் மீண்டும் தேசிய தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய சூழல் உருவாகும். மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தனக்கேயுரிய முறையில் நுழைவுத்தேர்வினை நடத்தி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கையை இதுகாறும் நடத்தி வந்ததை மாற்றி இனி தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு' திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான 2 -ம் கட்ட பயிற்சி வகுப்பு அறிவிப்பு.

 

2024 மக்களவை தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி  - விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்


2024 மக்களவை தொகுதிக்களுக்கான பொதுத் தேர்தலை முள்ளிட்டு , 34 - விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வாக்குச் சாவடியில் பணிபுரிந்திட நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று 2 - ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது...

IMG-20240329-WA0020


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கக் கல்வி - பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு தேதிகளை மாற்றிக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings

 

தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் - தேர்வு தேதிகளை மாற்றிக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 28-03-2024


இறுதித் தேர்வுகள் நடத்துதல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்கக் கோரி பார்வை (3)ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால் அரசுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது.


அதன்படி, தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து கொள்ளஅனுமதி வழங்கப்படுகிறது.


பார்வை (1)யில் காணும் தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்ட 4 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை 104.2024 மற்றும் 12.04.2024 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 04.042024 மற்றும் 06.042024 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட உருது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கிட சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

19.04.2024 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை - Govt Letter

 தேர்தலை முன்னிட்டு 19.04.2024 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல் - தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்


Click Here to Download - Grant of Leave With Pay on 19.04.2024 in View of Election - Pdf


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ரம்ஜான் பண்டிகை: தமிழகத்தில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை மாற்றம்

 


1222575

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.


புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருந்தது. அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) - DEE Proceedings


அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB)...


மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது... 


DEO (DEE) -களுக்கு இயக்குநர் (DEE) செயல்முறைகள்....

 TAB for dee teachers - Proceedings - Download here 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6th to 9 th Standard Annual Exam Time table & Instruction

 IMG_20240327_150822

2023-2024ஆம் கல்வியாண்டிற்கான உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மூன்றாம் பருத் தேர்வும் , 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு முழுஆண்டுத் தேர்வும் 02.04.2024 முதல் 12.04.2024 முடிய நடைபெறவுள்ள இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மேலும் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகள் மற்றும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் முழுஆண்டுத் தேர்வினை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்திட அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

 பொதுவான அறிவுரைகள் : -

 6th  to 9 th  Standard Annual Exam Time table & Instruction - CEO Proceedings 👇👇👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CL LEAVE RULES - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கான விதிகள் !!

 CL LEAVE 𝙍𝙐𝙇𝙀𝙎


1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு: வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.


2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலா து.


4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற் கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில் லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).


5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )


6. தகுதிகாண்பருவம் முடித்தவர்- நிரந்தர பணியாளர் ஆண்டு துவக் கத்திலேயே பணி நிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற் செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்தி லேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)


7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.


8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்துவிட்டு பின்னர் இதற்கான 

விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10th Public Exam 2024 - Question And Answer

 

10th Public Exam 2024 - Question And Answer 


English  - Question Paper &  Answer Key - Win English - Download here

English  - Question Paper &  Answer Key - Download here

Answer Key Prepared by 
Mr.K.K.Chinna Raja
Mr.D Sivanandam
Mr.J.Jayaprakasam

B.T Asst. Teachers 
Christ The King Boys MHSS
Kumbakonam

Tamil - Question Paper & Full Answer Key - Download here 

Tamil - Question Paper & Answer Key - Mr Abbas Manthiri - Download here

10th Public Exam - Urdu Question Paper - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டு!!!

 அனைத்து தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் இணைந்து அனைத்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மடிக்கணினி இருக்கும் வகையில் திட்டமிட்டு மடிக்கணினிகளை நாளை மாலை 5 மணிக்குள் வழங்கிவிட்டு அதற்கான அறிக்கையை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டுகள் வந்து சேர்ந்துவிடும். அவற்றை முறையாக பெற்று ஸ்மார்ட் போர்டுகள் நிறுவப்பட உள்ள வகுப்பறையில் அவற்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏதுவான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இது மட்டுமன்றி அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கான கணினிகள் மற்றும் இதர சாதனங்கள் எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனுப்பப்படும் அவற்றையும் முறையாக பெற்று சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அவற்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் சிறப்பான முறையில் திட்டமிட்ட வகையில் இயங்குவதற்கு இணைய இணைப்பு மிகவும் அவசியமானது.


தலைமையிடத்திலிருந்து இணைய இணைப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது அனைத்து பள்ளிகளுக்கும் நிதி பெறப்பட்டு விட்டது.


அதை முறையாக பயன்படுத்தி இணைய இணைப்புகளை உடனடியாக பெற்று அதற்கான ஆவணங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் முழுக்க முழுக்க இணைய இணைப்பை நம்பியே உள்ளன.


எனவே தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு போதுமான அறிவுரைகளை வழங்கி அனைத்து பள்ளிகளும் இணைய இணைப்பினை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் பெற்று விட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*தொடக்கக் கல்வி இயக்குனர் இதை உன்னிப்பாக கண்காணித்து ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் நல்ல முறையில் முடித்து எதிர்வரும் கல்வி ஆண்டில் ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை அரசு பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*இப்பணியில் சுணக்கம் காண்பிக்கும் தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடக்க கல்வியை இயக்குனரை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News