பள்ளி காலை வழிபாட்ணு செயல்பாடுகள் - 06.02.2024

 

இந்திய அறவியற் கழகம்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

விளக்கம்:

 ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.


பழமொழி :

It is the pace that kills.

வேகம் விவேகம் அல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

அன்பும் இரக்கமும் நிறைந்த இதயமே மன வலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும். --தலாய் லாமா

பொது அறிவு :

1. இந்திய அறிவயற் கழகம் அமைந்துள்ள நகரம்?

விடை: பெங்களூர்

2. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

விடை: 1919

English words & meanings :

 when an ant becomes a spy we call him/her - inform-ant-informant

ஆரோக்ய வாழ்வு : 

கோவை கீரை : சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு கண்ட மருந்துகளைத் தடவத் தேவையே இல்லை. கோவைக்காயின் இலையை அரைத்து சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீதிக்கதை

 வலிமை மட்டும் போதாது

எருது ஓரிடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அது வழியாக நகர்வலம் வந்த எலிக்குஞ்சு ஒன்று, ஓடி வந்து எருதின் மீது விழுந்தது. இதனால் தூக்கம் கலைந்து பார்த்தது.

"டேய். எலிப் பயலே என் மீது விழுந்தா தூக்கத்தைக் கலைத்தாய், உன்னை என்ன செய்கின்றேன் பார்" என்றது.

பலசாலியான எருது முன்னால் பயந்தபடி நின்றது எலி. "தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று எந்தத் தவறும் செய்யவில்லை" என வேண்டியது.

"அதெல்லாம் முடியாது! என் பலம் தெரியாமல் என்னுடன் நீ விளையாடி விட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார்", என மிரட்டியதும், பயந்து எலி அருகில் இருந்த வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.

எருதுவும், எலியை விடுவதாக இல்லை. தன் கூரிய கொம்புகளால், எலி வளையைக் குத்தி பெயர்த்து எடுத்தது.

எருதின் கோபம் அதிகமானது. எலி வளையை இடிக்க இடிக்க வளர்ந்து கொண்டே சென்றது.

எலி அதன் வளையை மிகவும் நீளமாக அமைத்து இருந்தது. அதனால் எருது, எலியைப் பிடிக்க முடியாமல் போனது.

வீரமாக மோதிப் பார்த்து விட்டு மிகவும் களைப்புடன் படுத்து விட்டது எருது. இந்த நேரத்தில் எலி வளையை விட்டு வெளியில் வந்து பார்த்தது.

எதிரில் எருது களைப்பால் படுத்திருந்ததைப் பார்த்தது. மீண்டும் எலி வந்து, எருதின் மீது ஏறி விளையாடியது. எருதுக்கு கோபம் அதிகமானது. கோபம் வந்து என்ன செய்ய, எலியைத் தான் அதனால் பிடிக்க முடியவில்லையே.

எருது முன்னால் தாவிக் குதித்து நின்றது எலி. "நான் தெரியாமல் செய்த தவறுக்கும். உன்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு விட்டேன். நீ பெருந்தன்மையாக என்னை மன்னித்திருக்கலாம் அல்லவா.

உனக்கு எவ்வளவு தான் பலம் இருப்பினும் அவமானம் அடைந்தாயே! உடல் பலத்தால் மட்டும் யாரையும், வென்று விட முடியாது புரிந்து கொள்" என்றபடி எலி தாவிக் குதித்து வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.

எருதும் தன் தவறை உணர்ந்து வருந்தியது.


நீதி : எளியவரை எப்பொழுதும் வென்று விடலாம் என தவறாக நினைத்து விடக் கூடாது. உடல் வலிமையை விட மனவலிமையே வெற்றி பெறும்.

இன்றைய செய்திகள்

06.02.2024

*அரசியல் கட்சி பிரசாரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு.

*ஜார்க்கண்ட் சட்டப்பேரவை- நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி.

*பெண் விவசாயிகள் கருத்தரங்கு; 8ஆம் தேதி சின்னமனூர் வருகிறார் கவர்னர்.

*இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் கோஷ், ஆஸ்திரேலிய பாராளுமன்ற எம்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்; வானிலை ஆய்வு மையம்.

*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி.

Today's Headlines

*Prohibition of using children in political party campaigns;  Election Commission order.

 *Jharkhand Assembly- Sambhai Soren won the trust vote.

 *Women Farmers Seminar;   Governor is coming to Chinnamanur on  8th.

 *Varun Ghosh, of Indian origin, has been appointed as an Australian MP.

 *Dry weather likely to prevail in Tamil Nadu till February 11;  Meteorological Centre.

 *Second Test against England: Indian team got tremendous victory
 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment