குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு, உணவூட்டுச் செலவினம் உயர்வு - ஆண்டுக்கு ₹4114 கோடி கூடுதல் செலவினம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
தமிழ் நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் . குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் . அதன்படி , 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி , தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ . 1.33 எனவும் . உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ . 0.46 எனவும் . எரிபொருளுக்கான செலவினம் ரூ .0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . உணவூட்டுச் செலவினம் தற்போது வழங்கப்பட்டு வருவது மற்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் மேற்காணும் அட்டவணையில் கண்டுள்ளவாறு :
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment