பள்ளி வானவில் மன்ற செயல்பாடுகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல் SPD செயல்முறைகள்

 பள்ளி வானவில் மன்ற கருத்தாளர்கள் பருவம் -II, III செயல்பாடுகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல்  SPD செயல்முறைகள்

மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக வானவில் மன்றமானது ( நடமாடும் அறிவியல் ஆய்வகம் ) நவம்பர் 28 , 2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 13210 அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . 710 வானவில் மன்ற கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டு . பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் , பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித சோதனைகள் நடத்துவதற்காக அறிவியல் மற்றும் கணிதக் கருவிகளுடன் கட்டமைக்கப்பட்ட அட்டவணையின்படி பள்ளிகளுக்கு சென்று பயிற்சி அளிக்கின்றனர்.


 தற்போது 710 வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பருவம் II மற்றும் II- க்கான அறிவியல் மற்றும் கணிதக் கருவிகள் இணைப்பு -1 ல் வழங்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளவாறு கொள்முதல் செய்து வழங்கப்பட வேண்டும் . இதற்கான நிதி மாவட்ட வாரியாக இணைப்பு -2 ல் உள்ளவாறு விடுவிக்கப்படுகிறது . மேலும் பொருட்கள் கொள்முதல் செய்யும் போது Tamil Nadu Transparency in Tenders Act விதிமுறைகளை பின்பற்றவும் , எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் செலவினங்கள் மேற்கொள்ளவும் , செலவினங்கள் மேற்கொண்ட பின்னர் பயன்பாட்டு சான்றிதழ் வழங்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

 இணைப்பு : 1 மற்றும் II

Moblile Science Lab_Science kit - 2023-24- Download here...

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு, உணவூட்டுச் செலவினம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 

குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு, உணவூட்டுச் செலவினம் உயர்வு - ஆண்டுக்கு ₹4114 கோடி கூடுதல் செலவினம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

IMG_20240131_174649


தமிழ் நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் . குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் . அதன்படி , 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

 தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி , தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ . 1.33 எனவும் . உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ . 0.46 எனவும் . எரிபொருளுக்கான செலவினம் ரூ .0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . உணவூட்டுச் செலவினம் தற்போது வழங்கப்பட்டு வருவது மற்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் மேற்காணும் அட்டவணையில் கண்டுள்ளவாறு :

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம்!

 

மத்திய அரசு அறிவிப்பு - அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம்! அரசு பெண் ஊழியர்கள், தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


பிள்ளையை நியமிக்கலாம்


அரசு ஊழியர்கள் மரணத்துக்கு பிறகு, அவர்களது வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வாழ்க்கை துணை மறைந்த பிறகுதான், தகுதியுள்ள ஒரு பிள்ளைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில், இந்த விதிமுறையை மத்திய அரசு மாற்றி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு, கணவருக்கு பதிலாக, தனது பிள்ளைகளில் தகுதியான ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமிக்கலாம். இதுகுறித்து தங்கள் துறைத்தலைவரிடம் அவர்கள் எழுத்துமூலமாக எழுதி தர வேண்டும்.


பிரதமர் கொள்கை


இதன்மூலம், கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுைம தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.


பிரதமர் மோடி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை அளிக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மைனராக இருந்தால்..


ஒரு அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்த நிலையில், அவருக்கு தகுதியுள்ள பிள்ளை இல்லாவிட்டால், அவருடைய கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும். ஒருவேளை அவரது பிள்ளை மைனராக இருந்தாலோ, மனவளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலர் என்ற முறையில், கணவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த பிள்ளை, ‘மேஜர்’ ஆன பிறகு, பிள்ளைக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும். மரணம் அடைந்த பெண் ஊழியரின் பிள்ளை, தகுதிநிலையை எட்டாவிட்டாலும், பிள்ளைக்கே ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் (05.02.2024 - 09.02.2024) பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 IMG_20240130_211631

தொடக்கக் கல்வி - RIE ( Mysuru ) - பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு Training on Toy based Pedagogy for key Resource Persons at Preparatory and Middle stages ( 5 days Training Programme ) A 05.02.2024 முதல் 09.02.2024 வரை RIE ( Mysuru ) யில் வழங்குதல் - ஆசிரியர்களை தெரிவு செய்து ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 30-01-2024...

DEE Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Calendar - February 2024

 பிப்ரவரி - 2024 நாள்காட்டி.

( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )


* 03-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.


* 10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD (  தேதி மாற்றத்திற்கு உட்பட்டது )


* 17-02-2024 - சனி - 4,5  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD

(  தேதி மாற்றத்திற்கு உட்பட்டது )


* 20-02-2024 -செவ்வாய் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD


* 21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD 

* 22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD


வரையறுக்கப்பட்ட  விடுப்பு ( RL )


* 07-02-2024 - புதன் - ஷபே மீரஜ்


* 14-02-2024 -புதன் - சாம்பல் புதன்.


💥பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாள்கள் இல்லை.


*CRC / CPD பயிற்சி தேதி மாறுதலுக்கு உட்பட்டது


Feb 2024 Calendar.pdf - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பிப்ரவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

 Local%20holiday

அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு - திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - பிப்ரவரி 3ஆம் தேதி பணி நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிப்பு

 1188821

 மத்திய பல்கலை.களில் முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ )ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 26-ல் தொடங்கி ஜனவரி 24-ம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10th Maths - Public Exam 2024 - Centum Mark Task Questions - 1

 10th Maths - Public Exam 2024 - Centum Mark Task Questions ( Chapter -1 ) - Download here

10th Maths - PTA Questions Collection - T/M & E/M - Download here

Thanks and Regards 
M.Abbas Manthiri 
B.T.Assistant 
Ilahi orientatal Arabic high school Cumbum- Theni dt


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

January Month - School Children's Movie - Haridos Direct Link

 


IMG_20240124_222850

ஜனவரி மாத சிறார் திரைப்படம் ஹரிதாஸ் டவுன்லோட் செய்வதற்கான நேரடி லிங்க்


January Month - School Children's Movie - Haridos Direct Link👇

Click here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED- PARENTS - MOBILE APP NEW VERSION 0.0.24

 IMG_20240125_082641

TNSED- PARENTS - MOBILE APP


New Version 0.0.24

Update date - 23.01.2024


New Update


observer / RP login updation, observer OoSC updation and Bug fixes.


Direct Link

👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை

 

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை...

பள்ளிக்கல்வி - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிலிருந்து நேரடி பணிநியமனம் செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய கால் அட்டவணை ஆணை வெளியிடப்படுகிறது .👇


G.O--26- நாள் -24.01.2024 - Download here


*பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்தல் -01.05-க்குள்

*மேற்படி கண்டறியப்பட்ட உபாரி பட்டதாரி ஆசிரியர்களை தேவை உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் -31.05

*அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்தல் -30.06

*பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் மதிப்பீடு-01.07

*காலி பணியிடங்களில் நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்பப்பட வேண்டிய நாள்-15.07


*தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாள் -31.01 க்குள்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

26.01.2024 - கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் பங்கு

 கிராம சபைக் கூட்டம் - ஜனவரி 26 - 2024 

ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் , ஆசிரியர் பிரதிநிதி , பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். 


பள்ளி வளர்ச்சி , கற்றல் கற்பித்தல் , உட்கட்டமைப்பு , மாணவர் பாதுகாப்பு , இடைநிற்றல் மற்றும் உயர்கல்வி தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை கிராமசபைக் கூட்டத்தில் முக்கிய கூட்டப் பொருளில் ஒன்றாக இணைக்க வேண்டும். 


கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யவும் மற்றும் பிரச்சனைகள் களையவும் ஒத்துழைப்பு வழங்க கோருதல்.


கிராம சபைக் கூட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பார்வை அலுவலர்கள் ( CEO , DEOs , APOs , BEOs , DCs மற்றும் BRTEs ) மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் அனைவரும் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டும்.

IMG-20240125-WA0010




பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

 

exam1.jpg?w=360&dpr=3


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு தேதிகள், வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.


தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்குமுன் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்.12 முதல் 24-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப். 12 முதல் 17-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப். 19 முதல் 24-ஆம் தேதி வரையும் செய்முறைத் தோ்வு நடத்தி முடிக்க வேண்டும்.


இதையடுத்து மாணவா்களின் செய்முறைத் தோ்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பிப்ரவரி 5 முதல் 17-ஆம் தேதிக்குள் தோ்வுத் துறை (‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவா்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூா்த்தி செய்து மாவட்ட தோ்வுத்துறை அலுவலகங்களில் சமா்பிக்க வேண்டும். தோ்வின் போது மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.


அதேபோல், தோ்வுக்கு வருகை புரியாதவா்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். தோ்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக செய்ய வேண்டும்.


இதுதவிர செய்முறை தோ்வுக்கான புறத்தோ்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியா்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 - உறுதி மொழி

 தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 -  உறுதி மொழி

1706030911248

இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் , ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு , நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் , சுதந்திரமான , நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும் , ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம் , இனம் , சாதி , சமூகத் தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதியளிக்கிறோம் .



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மட்டுமே கொடி ஏற்ற வேண்டும் - ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்கக கடிதம்..

 குடியரசு தினம்  மற்றும் சுதந்திர தினம்... கொடியேற்றுவதற்கான ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்கக கடிதம்...  ( அரசுப்பள்ளிகளில்  தலைமை  ஆசிரியர் மட்டுமே  கொடி  ஏற்ற வேண்டும்... அவர்  இல்லாத  பட்சத்தில்  பொறுப்பு  தலைமை ஆசிரியர்  தான்  கொடியேற்ற  வேண்டும்..





🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குனருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடல்

 

TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குனருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு திருமதி.ஸ்ரீதேவி அவர்கள் அளித்த பதிலுரைகள்....


கேள்வி 1 : எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியர்கள் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்? மண்டல ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் 10 பதிவேடுகள் உள்ளடக்கிய CHECK LIST வைத்திருந்து அதில் உள்ள பதிவேடுகள் உள்ளதா என்று கேட்கிறார்கள்?.

 

 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:

 

 பாடக்குறிப்பு மட்டும் எழுதினால் போதும். அதற்கும் ஒரு Format வெளியிட்டுள்ளோம்.. ஆகவே அதை மட்டும் fill செய்தால் போதும்.. மற்ற WORK DONE , ACHIEVEMENT CHART, LEARNING OUTCOMES RECORD , C&D GRADE REGISTER என எதுவும் தேவையில்லை.. அதிகாரிகள் தவறான புரிதலில் உள்ளார்கள்.. இது குறித்து ஆசிரியர்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்துள்ளதால் விரைவில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கின்றோம்..

 

கேள்வி 2 : 

எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு TLM தயாரிக்க அதிக செலவாகிறது.. ஆகவே TLM தயாரிக்க நிதி ஒதுக்கி அதிலிருந்து ஆசிரியர்களுக்கு நிதி கொடுத்தால் நாங்கள் TLM செய்வதற்கு மிக உதவியாக இருக்கும்.

 

மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:

 இதுவரை எவ்வளவு செலவழித்துள்ளீர்கள்..? 

ஆசிரியர்:

 2500₹

 


மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:

 எண்ணும் எழுத்தும் திட்டம் வந்த பிறகு தான் TLM க்கு செலவாகிறது என்று தொடர்ந்து ஆசிரியர்கள் புலம்புகிறீர்களே... அப்போ இதற்கு முன் TLM இல்லாமல் தான் வகுப்பறைக்கு சென்றுள்ளீர்களா...? TLM இல்லாமல் வகுப்பறைக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்களாகிய உங்களுக்கு தெரியாதா.. ? B. Ed. & D. T. Ed., பயிற்சியில் எதற்காக TLM தயாரிக்க கற்றுக் கொடுத்தார்கள்.. அதெல்லாம் பயிற்சியோடு முடிந்துவிட்டதா.. மூன்று மாதங்களுக்கு ₹.2500 செலவழிக்க மாட்டீர்களா.. உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் TLM தயாரிப்பதற்கும் சேர்த்து தான்.. இது செலவில்லை.. INVESTMENT.. நாம் எப்படி கல்வி கற்று வந்தோம்.. என்னுடைய அறிவியல் ஆசிரியர் பல்வேறு விதமான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளைக் கொண்டு கற்பித்தார்.. அவரைப் போன்ற ஆசிரியர்களால் தான் நான் இன்று இந்த பதவியில் இருக்கிறேன்.. நீங்களும் அது போன்ற ஆசிரியர்களிடம் பயின்றதால் தான் இன்று இந்த பணியில் உள்ளீர்கள்.. ஆகவே TLM தயாரிப்பதை செலவாக கருததீர்கள்.. நானும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி நிதி ஒதுக்குவது குறித்து பேசுகிறேன்.

 


SCERT JD Madam:

பல கோடிகள் ஒதுக்கீடு செய்து எண்ணும் எழுத்தும் KIT கொடுத்துள்ளோம்.. ஆசிரியர்கள் அதை பயன்படுத்துங்கள்.. TLM என்றால் கடையில் விற்கும் chart உள்ளிட்ட பொருள்களை வாங்கி தயாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..  

Real objects பயன்படுத்துங்கள்.. நான் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது ஒரு ஆசிரியர் வகுப்பறையில் Jasmine படத்தை chartல் வரைந்து ஒட்டியுள்ளார்.. 

இது வீண் செலவு இல்லையா.. நீங்கள் Jasmine காண்பிக்க விரும்பினால் சிறிது பூக்களை எடுத்துச் சென்று காண்பியுங்கள்.. முடிந்த வரை Real Objects எடுத்து செல்லுங்கள் LOW COST MATERIAL உபயோகியுங்கள்.. 

 


கேள்வி 3: 

உண்மைப் பொருள்களை எடுத்து சென்றால் அதை அன்றைய வகுப்பறையில் மட்டும் பயன்படுத்திவிட்டு எடுத்து விடுவோம்.. பார்வையிட அதிகாரிகள் வரும் போது வகுப்பறையில் TLM இருக்காதே.. அப்பொழுது நாங்கள் என்ன செய்வது?


SCERT JD Madam:* உங்களது பாடக் குறிப்பில் துணைக்கருவிகள் தலைப்பில் உண்மை மாதிரிகள் என்று குறிப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.. அதிகாரிகளிடம் அதைக் காண்பித்தால் போதுமானது.. நீங்கள் உண்மையிலேயே பயன்படுத்தி இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் விசாரிப்பார்கள்.. குழந்தைகள் பொய் கூற மாட்டார்கள்.. 


 கேள்வி 4:  

பாடல் களத்தில் பாடல்களை எல்லாம் எழுதி வைக்க வேண்டுமா? பாடல்களை நாங்கள் கற்றுக் கொடுக்க போகிறோம் பின்பு எதற்கு பாடலை Chart ல் எழுதி வைக்க வேண்டும்?


SCERT JD Madam :


  மீண்டும் மீண்டும் ஆசிரியர்கள் இதையே தான் கேட்கிறீர்கள்.. பாடல் களத்தில் எவ்வளவு பொருள்கள் வைக்க வேண்டியுள்ளது... கதைக் களத்தில் என்ன வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் களங்களை நிரப்புவதில் தான் பதற்றமடைகிறீர்கள்.. களங்கள் என்பது மாணவனை Motivate செய்வதற்கு.. பாடல் களத்துக்கு நீங்கள் சென்று டம்மி மைக் எடுத்தால் மாணவன் மிகுந்த மகிழ்ச்சி ஆகி விடுவான் ... ஐ ஆசிரியர் பாடல் பாட போகிறார் என்று... அவன் மிகுந்த மகிழ்வுடன் பாடலை பாட முன் வருவான். கதை களத்தில் ஒரு Mask ஐ கொடுக்கும்போது அதை மாட்டிக்கொண்டு அவன் மகிழ்ச்சியுடன் அந்த விலங்காகவே தன்னை நினைத்து கதையை கூறுகிறான்..  

இவ்வளவு தான் நமக்கு தேவை..  

களங்கள் என்பது மாணவர்களுக்கு ஒரு Motivation காக மட்டுமே.. ஆகவே பாடல்களை எழுதி ஒட்ட வேண்டியதில்லை.. 



கேள்வி 5:

 ஒரு ஆசிரியையின் பள்ளிக்கு இரண்டு தினங்களுக்கு முன் BEO பார்வையிட சென்றுள்ளார்.. அவர்கள் வகுப்பறையில் உள்ள சுவற்றில் 70% Fill பண்ணியுள்ளார்.. அதைப் பார்த்த BEO இது பத்தாது ஆகவே அவர்கள் வகுப்பறைக்கு அருகில் உள்ள LKG & UKG வகுப்பறை சுவற்றையும் நிரப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.. தற்போதைய பாடத்திற்கு தேவைப்படுவதை தாண்டி சுவற்றை மட்டும் நிரப்பி வைப்பது எப்படி சாத்தியமாகும்..?

 


மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:


 நீங்கள் Polite ஆக அந்த BEO விடம் என்ன மாதிரி ஒட்டலாம் என்று கூறுங்கள் என்று கேளுங்கள்..  

அவர்கள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக சென்று விடுவார்கள்.. ஏனெனில் அவர்களுக்கே இதைப் பற்றி தெரியாது.. என்னடா BEOs பத்தி நாங்களே இப்படி சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்.. அவர்களுக்கு தற்போது தான் கொஞ்சமாக கொஞ்சமாக பயிற்சி கொடுக்கிறோம் நிறைய அலுவலர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லை.. நாங்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறோம்..  


கேள்வி 6 :

ஒரு தலைமை ஆசிரியரிடம் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் சந்தேகம் கேட்டுள்ளார்.. அது என்னவென்றால் மூன்றாம் வகுப்பில் உள்ள அரும்பு மாணவர்கள் அவர்களது பயிற்சி புத்தகத்தில் அரும்புக்கான செயல்பாடுகளை மட்டும் செய்வார்களா இல்லை அனைத்து செயல்பாடுகளும் செய்கின்றனரா? என்று கேட்டுள்ளார்.. ஆகவே மூன்றாம் வகுப்பு அரும்பு மாணவர்கள் எந்த செயல்பாடு செய்ய வேண்டும்?

 

SCERT JD Madam:

அரும்புக்கான செயல்பாடு மட்டும் செய்தால் போதுமானது.. எழுத்துக்களே அறியாதவன் தான் அரும்பு மாணவர்.. ஆகவே அவர்களுக்கு மலர் புத்தகத்தில் உள்ள அனைத்து செயல்பாடும் செய்ய வேண்டியதில்லை.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News