'சைமா' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி-வினா, செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 'சைமா' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குழு பாடல், விநாடி-வினா, கேரம், செஸ், பேச்சு, கட்டுரை, கலை, ஓவியம், மாறுவேடம் என பலதரப்பட்ட போட்டிகள் இடம்பெறும்.
அந்த வகையில் 2024-ம் ஆண்டு 'கோல்டு வின்னர்-சைமா குழந்தைகள் விழா' போட்டிகள் ஜன.6, 7-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளன. ஓவியம் மற்றும்மாறுவேட போட்டிக்கு குறிப்பிட்டநாளில் நேரடியாக வந்து பங்கேற்கலாம். மற்ற போட்டிகளுக்கு பள்ளிகள் வழியாக மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். எல்கேஜிமுதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துவகுப்பு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
மாணவர்களுக்கு பரிசு: சென்னை திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் உள்ள என்கேடி தேசிய பயிற்சி கல்லூரிவளாகத்தில் போட்டிகள் நடைபெறும். வெற்றிபெறும் மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக போட்டிகளில் வென்று அதிகபுள்ளிகள் எடுக்கும் பள்ளிக்கு ஒட்டுமொத்த கோப்பை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் உண்டு.
ஜன.4-க்குள் முன்பதிவு: போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள், ஜன.4-க்குள் மாணவர்களின் பெயர் விவரங்களை முன்பதிவுசெய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 93611 19723என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என 'சைமா' அமைப்பின் செயலாளர் சஞ்சீவி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment