NEET UG 2024: நீட் தேர்வு புதிய சிலபஸ் வெளியீடு; தெரிந்துக் கொள்வது எப்படி?

 தேசிய மருத்துவ ஆணையம் நீட் தேர்விற்கான (NEET UG 2024) புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் பாடத்திட்டத்தை https://nta.ac.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.



அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படிதேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பட்டதாரி மருத்துவக் கல்வி வாரியம்NEET UG 2024 பாடத்திட்டத்தை இறுதி செய்துள்ளது. பொது மக்களின் குறிப்புக்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்திலும் இந்தப் பாடத்திட்டம் பதிவேற்றப்பட்டுள்ளது.

"NEET UG 2024 க்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை புத்தகங்களைத் தயாரிப்பதற்கும்2024-25 ஆம் ஆண்டுக்கான NEET UG தேர்வுக்கு தயாராகுவதற்கும் பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது", என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

நீட் பாடத்திட்டத்தைத் தெரிந்துக் கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்https://nta.ac.in/Download/Notice/Notice_20231122154404.pdf

இதனிடையே, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை [NEET (UG)] – 2024 மே 52024 அன்று நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்கான முடிவுகள் ஜூன் 2024 இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment