CTET - அறிவோம் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!

 


60702_20231118161029

முக்கியத்துவம்

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் வாயிலாக, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு பள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசியராக பணிபுரியும் தகுதியை பெறலாம். மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சி.டி.இ.டி., அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்யலாம்.


தேர்வு விபரம்:


சி.டி.இ.டி., இரண்டு தாள்களை கொண்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கநிலை பிரிவுக்கு தாள் -1 எழுத வேண்டும். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பிரிவுக்கு தாள் -2 எழுத வேண்டும். இரண்டு பிரிவிலும் பணியாற்ற விரும்புபவர்கள் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.


கல்வித் தகுதி:


தாள் 1: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், தொடக்கக் கல்வியில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் இத்தேர்வை எழுதலாம்.தாள் 2: தொடக்கக் கல்வியில் இரண்டாண்டு டிப்ளோமா படிப்புடன் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எட்., இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.அல்லது 12ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, நான்கு ஆண்டு பி.ஏ.எட்., அல்லது பி.எஸ்சி.எட்., படிப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை: 


ctet.nic.in எனும் அதிகாரப்பூரவ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வுமுறை


தேர்வு இரண்டரை மணி நேரம் நடைபெறும். எம்.சி.கியூ., வகை கேள்விகளாக மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் கேட்கப்படும். பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ளும் சி.டி.ஏ.டி தேர்வில் பெற வேண்டும். நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. சி.டி.இ.டி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், இத்தேர்வை எழுதலாம். தேர்வில் தகுதி பெற்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதுபவர்களும் மீண்டும் தேர்வெழுதலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 


நவம்பர் 23தேர்வு நாள்: ஜனவரி 21, 2024விபரங்களுக்கு: https://ctet.nic.in/


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment