உபரி பட்டதாரி ஆசிரியர்கள் BRTE ஆக மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பமா? - விருப்ப கடிதம் கொடுக்க உத்தரவு.

 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின்  எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் – உபரி பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வள மைய பயிற்றுநராக மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்... 

  மதுரை வருவாய் மாவட்டத்தில் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் வளமையத்தில் காலியாக உள்ள வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்தில் மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்பக் கடிதத்தினை சார்ந்த ஆசிரியர்களிடம் பெற்று 28.11.2023 அன்று மாலை 04.00 மணிக்குள் அனுப்பவேண்டும் . விருப்பமின்மை எனில் ' இன்மை ' அறிக்கையினை இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் சமர்ப்பித்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment