போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழிப்புணர்வு பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ' போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக , பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் 11.08.2023 அன்று அனைத்துவகை பள்ளிகளிலும் , உயர் மற்றும் மேல்நிலை வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் . இத்துடன் இணைக்கப்பட்டுள்ள போதைப்பழக்கத்திற்கு எதிரான பெருந்திரள் உறுதிமொழி ஏற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தவும் , நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் விவரங்களை , இணைப்பில் கண்டுள்ள படிவம் -1 இல் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் பெற்று மாவட்ட அளவிலான விவரங்களை படிவம் -2 இல் பூர்த்தி செய்து இவ்வியக்ககம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் , நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் படிவம் - 2 - ஐ dad.ebcid@gmail.com மற்றும் இவ்வலுவலக மின்னஞ்சல் msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் 11.08.2023 பிற்பகல் 4.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://enforcementbureautn.org/pledge என்ற இணைய இணைப்பினை பயன்படுத்தி மின்னணு உறுதிமொழி ஏற்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பதுடன் உறுதிமொழி ஏற்றமைக்கான மின்னணு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரிவித்து மின்னணு உறுதிமொழி ஏற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment