தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும், 5ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஒன்று முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி வழங்கப்பட வேண்டும்.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் வருகைப்பதிவு சதவீதம், மாவட்ட அளவிலான தேர்வுகளின் மதிப்பெண் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பள்ளிகளின் தேர்வு கமிட்டி வழியே, தேர்ச்சியை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
வரும், 5ம் தேதிக்குள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து, தேர்ச்சி முடிவை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள், இந்த மாதம் வெளியிடப்பட உள்ளன.
0 Comments:
Post a Comment