காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல் முறைகள்

 அனுப்புநர்: க.இளம்பகவத். இ.ஆ.ப, திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்/ மாநிலத் திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை 06. 

பொருள்: 
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தமிழ்நாடு பார்வை: 

பெறுநர்: முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள், 

நக.எண்:1519/முகஉதி/ஒபக/2023, நாள்: 21.04.2023 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து வகை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துதல்-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பாக. 
1. அரசாணை நிலை எண்: 43, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந 4 -1) துறை, நாள்: 27.07.2022 2. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - முதலைமைச்சரின் காலை உணவுத் திட்டம் சார்ந்த திட்ட செயலாக்க வழிகாட்டு நெறிமுறைகள், நாள்: 27.08.2022. 3.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண்:2223/C7/SMC/ஒபக/2022, நாள்:07.09.2022 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குதல் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 2022-23ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி, நகராட்சி. கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டமானது 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் கீழ்க்காணும் குறிக்கோள்களை அடையும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment