தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்.5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதேபோல், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம்தேதி வரை நடத்தப்பட்டது.
இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.
இதைத் தொடர்ந்து 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19)வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11-ம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும்.
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment