32 படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை - உயர்கல்வித்துறை

 பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வரி வசூல், வணிக மேலாண்மை ஆகியன, பி.காம்., படிப்புக்கும்; எம்.ஏ., கூட்டுறவு, மாஸ்டர் ஆப் கார்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகியன எம்.காம்., படிப்புக்கும்; பி.ஏ., உளவியல், பி.ஏ., சமூகவியலுக்கும், அரசு வேலை பெறுவதற்கு இணையான படிப்பு அல்ல.


எம்.எஸ்சி., பயன்பாட்டு கணிதம், எம்.எஸ்சி., கணிதத்துக்கும்; எம்.எஸ்சி., சுற்றுச்சூழல் அறிவியல், எம்.எஸ்சி., நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண் உயிரியல் படிப்பு, எம்.எஸ்சி., நுண் உயிரியலுக்கும் இணையான படிப்பல்ல.


எம்.எஸ்சி., ஸ்பீச் லாங்குவேஜ் நோயியல், எம்.எஸ்சி., மறுவாழ்வு அறிவியலுக்கு இணையான படிப்பல்ல.


இவ்வாறு மொத்தம், 32 படிப்புகள் அரசின் வேலைவாய்ப்புக்கான பிரதான படிப்புகளுக்கு இணையானது அல்ல என, அறிவிக்கப்பட்டு உள்ளது.




Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment