NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , 2022-23 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும் , மேலும் , 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை ( Renewal application ) புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 விண்ணப்பங்கள் புதியதாகவோ புதுப்பித்தல் செய்யவோ National Scholarship Portal என்ற இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு 10.01.2023 அன்றுடன் பணிகள் முடிக்கப்பட்டது.

மேலும் , பார்வை 1 இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விவரத்தினை புதுடில்லி , மத்திய கல்வித் துறைக்கு உரிய காலத்திற்குள் அளித்திட மாணவர்களுக்கு உரிய தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட பள்ளித் தலைமையாசிரியர் மூலம் மாணவர்களை அறிவுறுத்திட  அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் , இதுநாள் வரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது . எனவே , மாணவர்களுக்கு உரிய தொகை சென்றடைய ஏதுவாக மாணவர்களின் ஆதார் எண்களை உடன் வங்கிக் கணக்குடன் இணைத்திட உரிய நடவடிக்கை மேற்கெள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment