கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதற்கு விண்ணப்பிக்க  நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


 Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment