வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

 வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்புவோருக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 3ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், தொழலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு மக்களுக்கு நான்கு மாதங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, நான்கு மாத கால அவகாசம் மார்ச் 3ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் இணையதளத்தில், அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 3ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இந்த அதிக ஓய்வூதியம் பெற தகுதிபெறுவார்கள்?

ஊழியர்கள் மற்றும் முதலாளிகளில், ஊதிய உச்சவரம்பு ரூ 5,000 அல்லது ரூ 6,500 ஐ விட அதிகமாக சம்பளத்திலிருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு செய்தவர்கள்.

வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக இருந்த போது ஊழியர் மற்றும் முதலாளிகளில் கூட்டு இணைப்பினை பயன்படுத்தாதவர்கள்.

செப்டம்பர் 1, 2014 க்கு முன்பு உறுப்பினர்களாக இருந்த ஊழியர்கள் மற்றும் அந்த தேதியில் அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்தவர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.

அதாவது, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12 சதவீதம் தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் இதே தொகை ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் என இரு தரப்பினரிடமிருந்தும் பிடிக்கப்படும். இதில் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33 சதவிகிதம் தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழயர்களின் பங்கான 12 சதவிகிதம் மற்றும் தொழில் நிறுவனங்களின் 3.5 சதவிகிதம் சேர்ந்து தொழிலாளர் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு 8.65 சதவிகிதம் வட்டி தரப்படும்.

இநத் திட்டத்தின் கீழ் பயன்பெறவதற்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை ரூ.6500ல் இருந்து ரூ.15,000 ஆக கடந்த 2014ல் உயர்த்தப்பட்டது.

மேலும், அடிப்படை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெறும் தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், ஊதிய உச்சவரம்பின்றி, முழு தொகைக்கும் சேர்த்து 8.33 சதவிகித ஓய்வூதியம் செலுத்தலாம். அதாவது ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் ஊதியமாக பெற்றாலும், 15 ஆயிரம் என்ற வரம்பின்றி, முழு ஊதியத்தையும் கணக்கெடுத்து 8.33 சதவிகிதத்தை ஓய்வூதியத்துக்கு பங்களிக்கலாம்.

எனவே, புதிய அறிவிப்பின்படி, அதிகபட்ச ஓய்வூதியம் பெற பணியாளர்களும், தொழில் நிறுவனங்களும் கூட்டாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறை, இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வேளை, 2014ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பே அதிக ஊதியம் பெற்றவராக இருந்து, ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து அதை தொழிலாளவர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிராகரித்திருந்தால் அவர்கள் மே 3ஆம் தேதிக்குள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்னர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்தவர்கள், தற்போது பணியில் இருந்து அதிக ஓய்வூதிய வசதியை பெறாமல் இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஒருவேளை இவர்களின் விண்ணப்பங்கள் முன்பு நிராகரிக்கப்பட்டிருந்தாலும் கூட மீண்டும் விண்ணப்பிக்கலாம்.


0 Comments:

Post a Comment